அழகு..அழகு..புதியவை
முடி எலிவால் போன்று உள்ளதா? இதனை அடர்த்தியாக்க இதோ சில அற்புத வழிகள்!
தற்போது உள்ள பெண்கள் பலருக்கு தலைமுடியானது ஒல்லியாக காணப்படுகிறது. இப்படி தலைமுடி அடர்த்தியின்றி காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
அவை முதுமை, மரபணுக்கள், மோசமான ஊட்டச்சத்து, அதிகமான தலைமுடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது, கெமிக்கல் பொருட்களின் எதிர்வினைகள், உடல்நல பிரச்சனைகள் போன்றவை ஆகும்.இவற்றை ஆரம்பத்திலே கண்டறிந்து சரி செய்வது நல்லது.
அந்தவகையில் மெலிந்து எலிவால் போன்று காட்சியளிக்கும் முடியை அடர்த்தியாக்கும் சில இயற்கை வழிகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
- ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து நன்கு கலந்து, பின் அதை தலைச்சருமம் மற்றும் தலைமுடியில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி இவற்றில் ஏதேனும் ஒரு வழியை வாரத்திற்கு ஒன்று அல்லது இரடு முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி வலிமையாவதோடு, அடர்த்தியாகவும் இருக்கும்.
- ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைச்சருமம் மற்றும் முடியில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
- ஆரஞ்சு பழத்தை சாப்பிடலாம் அல்லது அதன் சாற்றினை தலைமுடி மற்றும் தலைச்சருமத்தில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அலசலாம்.
- கற்றாழை ஜெல்லை நேரடியாக தலைமுடி மற்றும் தலைச்சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, அலசி வந்தால், தலைமுடி வலுவாவதோடு, விரைவில் அடர்த்தியாகும். வேண்டுமானால் கற்றாழை ஜெல்லுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலையும் சேர்த்து பயன்படுத்தலாம். இந்த முறையை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பின்பற்றினால் விரைவில் நல்ல பலனைக் காணலாம்.
- ஒரு அவகேடோ பழத்தில் உள்ள கூழ் பகுதியுடன் ஒரு டேபிள் பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் தலைச்சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி அவகேடோ பழத்தை வாரத்திற்கு 2 முறை தலைக்கு பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.