சுவையான சிக்கன் கீமா ரெசிபிகள் – வீட்டிலேயே செய்யலாம்!
சிக்கன் கீமா பிரியாணி
தேவையான பொருட்கள்
சிக்கன் – அரை கிலோ (கொத்திய கறி)
வெங்காயம் – 1
தக்காளி – 1
கரம் மசாலாத்தூள் – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி, பூண்டு விழுது – 3 ஸ்பூன்
பிரியாணி இலை, பட்டை – சிறிது
தயிர் – 1/2 கப்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
பாசுமதி அரிசி – 3 கப்
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
உப்பு, தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் – 1 கைப்பிடி
செய்முறை :
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டையை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனிடையே சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதில், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும். தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வதக்க வேண்டும். இறுதியாக உப்பு, தேவையான தண்ணீர்சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதனுடன் பாசுமதி அரிசியை சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும். வெந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான சிக்கன் கீமா பிரியாணி ரெடி.
சிக்கன் கீமா புலாவ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி- 1 கப்
எண்ணெய் / நெய்- 2 டீஸ்பூன்.
சிக்கன் கீமா- 250 கிராம்.
பச்சை பட்டாணி – 1/4 கப்
உருளைக்கிழங்கு -1/2 கப்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
தண்ணீர், உப்பு – தேவையான அளவு
வெங்காயம்- 1
தக்காளி – 1
பச்சை மிளகாய்- 2-3
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
தனியா தூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள்- 1/2 ஸ்பூன்.
செய்முறை:
புலாவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்யுங்கள். பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை நறுக்கி வைத்து கொள்ளவும். முதலில் ஒரு தடிமனான பாத்திரத்தில் எண்ணெய் / நெய்யை சூடாக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பழுப்பு வரை வதக்கி, தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்னர் கீமா மற்றும் பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி, உப்பு மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி நிலைக்கு வந்ததும் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து குறைந்த தீயில் மூடி, 15-18 நிமிடங்கள் வரை சமைக்கவும். இதனை தொடர்ந்து மூடியை திறந்து வெட்டி வைத்துள்ள கொத்தமல்லி இலைகள் மற்றும் நெய் செய்து கிளறி பரிமாறவும்.