ஆரோக்கியம்புதியவை

மோசமான மூட்டுவலியை குறைக்கனுமா? அப்போ கட்டாயம் இந்த பொருட்களை உங்க உணவில் சேர்த்து கொள்ளுங்க!

உங்களது உடலின் மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்று மூட்டு. உங்களது உடலின் ஒட்டுமொத்த எடையையும் தாங்கக்கூடிய சுமைதாங்கியாக உள்ளது. எல்லா வயதினரையும் பாதிக்கிற பரவலான பிரச்சினைகளில் ஒன்று மூட்டு வலி.

அடிபட்டதன் காரணமாகவோ, தசைநார்கள் அல்லது குறுத்தெலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலோ மூட்டு வலி வரலாம்.

கீல்வாதம் மற்றும் தொற்றுக்களின் காரணமாகவும் மூட்டு வலி வரலாம். மூட்டுகள் வலி என்பது உடனடியாக தீவிரமாக வரக்கூடிய நிலை அல்ல.படிப்படியாகத்தான் அதிகரிக்க செய்யும்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே கண்டறிந்து அதற்கு சரியான முறையில் சிகிச்சை எடுப்பது நல்லது.

அதிலும் சமையலறையில் இருக்கும் ஒரு சில இயற்கை உணவுகள் மூட்டு வலியை போக்க பெரிதும் உதவியாக இருக்கின்றது.

அந்தவகையில் மோசமான மூட்டுவலியை குறைக்கும் பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • மஞ்சளில் இருக்கும் குர்குமின் மற்றும் குகுமினாய்டு வீக்கத்தை குறைத்து ஆர்த்ரைட்டீஸ் தீவிரத்தை குறைக்க செய்யும் இரசாயனங்களை கொண்டுள்ளது. மஞ்சளை உள்ளுக்கு எடுத்துகொள்வது போன்று அதை மேற்பூச்சாகவும் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.
  • இஞ்சி உடலில் இருக்கும் புரோஸ்டாக்லாண்டின் அளவை குறைக்கிறது. இது கீல்வாதத்தின் அளவை குறைக்கிறது. கீல்வாதத்தை கட்டுப்படுத்துகிறது.​
  • யூகோமியா எலும்புகள், தசைநாண்கள், தசைநார்கள் ஆகியவற்றை வலுப்படுத்த செய்கிறது.உடலில் காயம் ஏற்பட்ட பிறகு திசுக்களை குணப்படுத்த உதவுகிறது.
  • நெட்டில்ஸ் இது மூட்டு வலி வலியை குறைக்க செய்கிறது. எலும்புகளை வலுவானதாக மாற்ற உதவுகிறது. தொட்டால் எரிச்சலூட்டும் இதன் இலை தேயிலையாக்கி குடித்து வந்தால் மூட்டு வலி நிவாரணம் அளிப்பதாக சொல்லப்படுகிறது.
  • அதிமதுரத்தில் இருக்கும் கிளைசிரைசின் என்னும் கலவை வீக்கத்தை தடுக்க செய்கிறது. அல்லது வீக்கத்தை தடுக்கிறது. இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை அழித்து அழற்சி செயல்பாட்டில் ஈடுபடும் என்சைம்களின் உற்பத்தியை தடுக்க செய்கிறது.
  • அரை லிட்டர் நல்லெண்ணெயில் 50 கிராம் குங்கிலியத்தை பொடித்து கலந்து நன்றாக காய்ச்சி விட வேண்டும். இதை மூட்டுகளில் பூசி வந்தால் மூட்டு வலி குறையக்கூடும். அதி தீவிரமான மூட்டு வலி உபாதையும் குறைய கூடும்.
  • இலவங்கப்பட்டை சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளை இவை கொண்டுள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து உயிரணுக்கள் சேதம் ஆவதை தடுக்க செய்கிறது. மேலும் இது மென்மையான மற்றும் வீங்கிய மூட்டுகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு செயல்பாட்டை குறைக்க செய்கிறது.
  • சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பூண்டை சாப்பிடுவதன் மூலம் கீல்வாத நோயை பெருமளவு தடுக்கலாம். வலியை குறைக்க செய்யலாம். கருப்பு மிளகு ஆக்ஸிஜனேற்ற ஆண்டிமைக்ரோபியல் அழற்சி எதிர்ப்பு மற்றும் இரைப்பை பாதுகாக்கும் விளைவுகளை கொண்டுள்ளது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker