உலக நடப்புகள்புதியவை

நீங்கள் இந்த கிழமையில் பிறந்தவரா ? உங்கள் குணம் எப்படிபட்டதாக இருக்கும் தெரியுமா?

வாரத்தின் ஒவ்வொரு நாளில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

ஞாயிறு

வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமைக்குரிய கடவுள் சூரியன். இந்நாளில் பிறந்தவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும், நகைச்சுவை உணர்வுடனும் இருப்பார்கள்.

மேலும் இவர்கள் கருணைமிக்கவர்கள், நேர்மையானவர்கள், மிகவும் நம்பிக்கை உள்ளவர்கள். அதோடு இந்த நாளில் பிறந்தவர்கள், மற்றவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென விரும்புவார்கள். முக்கியமாக சுதந்திரமாக செயல்பட விரும்புவீர்கள்.

திங்கள்

திங்கட்கிழமைக்குரிய கடவுள் சந்திரன். இந்த கிழமையில் பிறந்தவர்கள் பொதுவாக உணர்ச்சிவசப்படுவார்கள், பணிவானவர்கள், எப்போதும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். மேலும் இவர்கள் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள்.

வாழ்க்கையில் எந்த முக்கியமான முடிவுகளையும் கொஞ்சம் சந்தேகத்துடன் எடுப்பார்கள் மற்றும் நிலையற்றவர்களாக இருப்பார்கள். வாழ்வில் மெதுவாகவே முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

செவ்வாய்

செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் திறந்த மனதுடையவர்கள், ஒழுக்கமுள்ளவர்கள், நேர்மையானவர்கள் மற்றும் ஆற்றல் மிகுந்த நபர்.

மேலும் இந்த கிழமையில் பிறந்தவர்கள் தங்களுக்குத் தாங்களே இலக்குகளை நிர்ணயித்திருப்பார்கள் மற்றும் உங்கள் பணி நெறிமுறையால் அந்த இலக்குகளை நினைப்பதை விட முன்பே முடித்துவிடுவீர்கள்.

ஆனால் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காத போது, அவர்களின் பொறுமையின்மை அவர்களை மோசமாக நடக்க வைக்கும். ஆயினும் கூட, அவர்களின் மனநிலையும், உறுதியும் நல்ல பலனளிக்கும் என்பதை அறிந்திருப்பார்கள்.

புதன்

புதன்கிழமையில் பிறந்தவர்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் திறமைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் ஒரு சாகச வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.

அதனால் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் எளிதில் சலிப்படைந்து புதிய ஒன்றைத் தேட விரும்புவார்கள்.

மேலும் இவர்கள் தங்களின் வாழ்க்கை ஒரு திரைப்பட கதைப் போல இருக்க வேண்டுமென விரும்புவார்கள். மேலும் இவர்கள் எதையும் விரைவில் கற்றுக் கொள்ளும் திறனைக் கொண்டிருப்பார்கள்.

வியாழன்

வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் சிறந்த தத்துவவாதிகள். வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் நெருக்கடிகளை தனது சொந்த வழிகள் மூலம் அணுகுவார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் ஒரு மோசமான நிகழ்வை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். இவர்கள் மிகவும் யதார்த்தமானவர்கள். இவர்களுக்கு பகல் கனவு காணும் பழக்கம் இல்லை. எல்லா நேரங்களிலும் யதார்த்த உணர்வோடு வாழ்க்கையை அணுகுவார்கள்.

வெள்ளி

எப்போதும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான அணுகுமுறையின் காரணமாக பலர் வெள்ளிக்கிழமைகளில் பிறந்தவர்களை காதலிக்கிறார்கள்.

வாழ்க்கையில் நேர்மறையைப் பேணும் சிறந்த மனிதர்களாகவும் இருக்கிறார்கள். இந்த தினத்தில் பிறந்தவர்கள் தங்களைச் சுற்றியுள்ள மக்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள்.

மேலும் இக்கட்டான சூழ்நிலைகளை மிகவும் பொறுமையாக எதிர்கொள்வார்கள். இதன் விளைவாக இவர்கள் வலுவான நபர்களாக மாறுகிறார்கள். வாழ்க்கையில் தங்கள் கனவுகளையும் இலக்குகளையும் அடைய கடுமையாக உழைப்பார்கள்.

சனி

சனிக்கிழமையில் பிறந்தவர்கள் விவேகமானவர்கள், புத்திசாலிகள், அமைதியானவர்கள் மற்றும் தன்மானத்தை விரும்புவார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் சமூகத்திற்காக ஏதாவது செய்ய விரும்புவார்கள்.

இதனால் இவர்களுக்கு அரசியல் பொருந்தக்கூடிய செயல்பாட்டு துறையாகும். மேலும் இந்நாளில் பிறந்தவர்களுக்கு விவசாயம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் இருக்கும்.

இளம் வயதில், அவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உதவியுடன் முன்னேறுவார்கள். பெரியவர்களை எப்போதும் மதிப்பவர்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker