சமையல் குறிப்புகள்
நார்சத்து மிகுந்த டிராகன் ஃப்ரூட் ஸ்மூத்தி
டிராகன் ஃப்ரூட் நார்சத்து மிகுந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. உடலுக்கு நல்ல வலுவைத் தரும். மூச்சுத் திணறலுக்கு நல்லது. சுவாசத்தை சரி செய்யும்.
தேவையான பொருட்கள்
மில்க் மெய்ட் – 4 டேபிள் ஸ்பூன், டிராகன் பழம் (துரியன்) – 1 (தோல் சீவி நறுக்கி வைத்துக்கொள்ளவும்),
சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்,
குளிர்ந்த பால் – 1 கப்,
ஐஸ்கட்டி – தேவையெனில்,
டிராகன் (துரியன்) – 2 துண்டு அலங்கரிக்க.
செய்முறை
மிக்சியில் டிராகன் பழத்தை போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
பின் அதில் மில்க்மெய்ட், சர்க்கரை, பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து ஐஸ்கட்டி போட்டு டிராகன் பழத்தைக் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.