அழகு..அழகு..

நகம் வெட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

சீரான இடைவெளியில் நகங்களை வெட்டுவது நகங்களின் அடித்தோல் பகுதியை பலப்படுத்த உதவும். நகம் வெட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

நகங்களை நன்றாக பராமரிப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. சீரான இடைவெளியில் நகங்களை வெட்டுவது நகங்களின் அடித்தோல் பகுதியை பலப்படுத்த உதவும். சரியான முறையில் நகங்களை வெட்டாவிட்டால் காயம் ஏற்படும் நிலை உருவாகும். நகம் வெட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

* நகங்களை மென்மையாக்கிவிட்டு, வெட்டுவதுதான் சிறந்தது. வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் விரல்களை ஊறவைத்துவிட்டு நகங்களை வெட்டுவதுதான் சரியான நடைமுறை. அப்போது நகங்கள் மென்மையாகிவிடும். குளித்து முடித்ததும் நகம் வெட்டலாம். * மனக்குழப்பம், டென்ஷனாக இருக்கும் நேரங்களில் நகங்களை கடிப்பது தவறான பழக்கம். அப்போது நகங்களின் உள் அடுக்கு பகுதியையும் சேர்த்து கடித்துவிடுவார்கள். அதனால் கூடுதலாக வலி, வேதனையை அனுபவிக்க வேண்டி யிருக்கும். நகத்தில் ஏற்படும் காயங்களுக்கு மருந்திடும் நிலையும் ஏற்படலாம்.

* ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை சீராக நகங்களை வெட்டுவதே சரியானது. சிலர் ஸ்டைலுக்காக வெவ்வேறு வடிவங்களில் நகங்களை வெட்டுவார்கள். அப்படி ஒழுங்கற்ற முறையில் வெட்டுவது நகங்களை பலவீனப்படுத்தி விடும். எளிதாக உடைந்து போய்விடவும் வாய்ப்புண்டு. அதனால் தேவையற்ற காயங்களை எதிர்கொள்ளக்கூடும்.

* நகமும் சதையும் இணையும் பகுதியை ஒருபோதும் நக வெட்டி கொண்டு வெட்டாதீர்கள். அவைதான் நகங்களின் வேர் பகுதியை பாதுகாக்கின்றன. நோய்த்தொற்றுவில் இருந்தும் பாதுகாக்கின்றன. அந்த பகுதியில் காயம் ஏற்பட்டால் எண்ணெய் தடவுங்கள்.

* ஒருவரது நக வெட்டியை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஒருவரே பயன்படுத்தினாலும் நகம் வெட்டுவதற்கு முன்பும், பின்பும் நன்றாக கழுவ வேண்டும். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதும் அவசியமானது. அது நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும். சோப்பு, சானிடைசர் கொண்டும் சுத்தம் செய்யலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker