சமையல் குறிப்புகள்
பலாப்பழ தேங்காய்ப்பால் மில்க் ஷேக்
குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே பலாப்பழம், தேங்காய்ப்பால் சேர்த்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பலாப்பழம் (கொட்டை நீக்கியது) – 100 கிராம், தேங்காய்ப்பால் – 50 மில்லி,
வெல்லம் பொடித்தது – 1 டேபிள் ஸ்பூன் அல்லது கரும்பு – 1/4 கப்,
முந்திரி பொடியாக நறுக்கியது – மேலே அலங்கரிக்க.
செய்முறை
பலாப்பழத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் பலாப்பழம் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
பின் அதில் வெல்லம், தேங்காய்ப்பால் சேர்த்து அடிக்கவும்.
பிறகு அதில் தண்ணீர் சேர்த்து அடித்து நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
தேவையெனில் பொடியாக நறுக்கிய பலாப்பழ துண்டுகளைத் தூவியும் பரிமாறலாம்