அழகு..அழகு..

வெயில் காலத்தில் சருமத்தை ஜொலிக்க வைக்கும் வழிகள்

செல்போனை அதிகப்படியான நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, கண்களுக்கு கீழ் கருவளையம் தோன்றி முகத்தின் அழகு பாதித்து விடுகிறது. பவுர்ணமி நிலா போல முகம் பிரகாசமாக ஜொலிக்க சில எளிய வழிகள் இருக்கின்றன.

எவ்வளவுதான் சுத்தமாக பராமரித்தாலும், முகப்பருவும், கரும்புள்ளியும் தோன்றி முகத்தின் அழகை கெடுத்து விடுவதாக நினைக்கிறீர்களா? கவலைப்பட வேண்டாம். பவுர்ணமி நிலா போல முகம் பிரகாசமாக ஜொலிக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

செல்போனை ஒரு நாளில் அதிகப்படியான நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, கண்களுக்கு கீழ் கருவளையம் தோன்றி முகத்தின் அழகு பாதித்து விடுகிறது. இந்த சிக்கலை நிவர்த்தி செய்ய பேரீச்சம்பழத்துடன் சிறிது வெண்ணெய் மற்றும் கசகசா கலந்து அரைத்து சில நாட்கள் கண்களின் கீழ் தடவி வர வேண்டும். அதன் மூலம் படிப்படியாக கருவளையம் மறையும். கறிவேப்பிலையை நன்கு காயவைத்து அதனுடன் கசகசா கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியை தினமும் குளிப்பதற்கு முன்னதாக முகத்தில் தடவி ஐந்து நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.

இந்த பொடியை குளியல் பவுடராகவும் உபயோகப்படுத்தலாம். தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம் சருமத்தில் உள்ள கருவளையம், கடினத்தன்மை ஆகியவை நீங்குவதுடன், முகம் பளபளப்பாகவும். பட்டுப்போல மிருதுவாகவும் இருக்கும்.

கோடை காலத்தில் தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு உதிர்வதும் உடைவதும், நுனி பிளவுபடுவதும் மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும். இந்த சிக்கலுக்கு முட்டையின் வெள்ளைக்கரு, ஆலிவ் எண்ணெய் மற்றும் சோற்று கற்றாழை ஜெல் ஆகியவற்றை பசைபோல் கலந்து தலையில் தடவி ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிகைக்காய் அல்லது வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு ஆகியவற்றை உபயோகித்து நன்றாக அலச வேண்டும். அதன் மூலமாக முடி உதிர்வது வறண்டு போவது ஆகியவற்றை தவிர்க்க முடியும். இயற்கையான இந்த முறைகளால் தலைமுடி மிருதுவாக மாறும்.

ஒரு சிலருக்கு வாயிலிருந்து துர்நாற்றம் வருவதுண்டு. இந்த பிரச்சனையை அகற்ற சுலபமான வழி உள்ளது. பன்னீர் ரோஜா இதழ்களை நன்றாக கழுவி, வெற்றிலையுடன் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்வதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கும்.

சிலருக்கு உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு கருமை நிறத்தில் இருப்பதுடன் தோல் உரிந்து ரத்தமும் வரும். இந்த பிரச்சனை அகல அடிக்கடி பாலாடை அல்லது வெண்ணெய் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தடவி வரலாம். அதன் உதடு வெடிப்பு குணமாகி விடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker