சமையல் குறிப்புகள்
யுகாதி ஸ்பெஷல்: வேப்பம்பூ பச்சடி
யுகாதி பண்டிகை தினமான இன்று இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். அதில் வேப்பம் பூ பச்சடி முக்கிய அம்சமாகும்.
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ – 1 கைப்பிடி அளவு காய்ந்த மிளகாய் – 3
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டீ ஸ்பூன்
செய்முறை:
வேப்பம்பூவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வேப்பம்பூ போட்டு மிதமான தீயில் கருஞ்சிவப்பாக வறுத்துக் கையால் நொறுக்கிப் பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்துப் புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும்.
உப்பு போட்டு நன்கு கொதித்ததும் வெல்லம் போட்டுக் கிளறவும்.
இறுதியில் வெல்லம் கரைந்ததும் அதில் வேப்பம் பூவை கொட்டி கிளறவும்.
பின்னர் பச்சடி கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும்.