இட்லி, தோசைக்கு அருமையான சத்தான எள்ளுப் பொடி
நீங்கள் இட்லி, தோசைக்கு ஏற்கனவே பல பொடிகளை பயன்படுத்தி வருபவர்கள் என்றால், ஒரு மாற்றத்திற்கு இந்த டேஸ்டியான சத்தான எள்ளுப் பொடியை ஒரு முறை முயற்சிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை எள் – 1 கப்
உளுந்தம் பருப்பு – 3/4 கப்
கடலை பருப்பு – ¼ கப்
காய்ந்த மிளகாய் – 7
கறிவேப்பிலை – 10-12
பெருங்காயம் – ½ தேக்கரண்டி
அடுப்பில் குறைந்த அளவு தீ வைத்து, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகிய இரண்டையும், தனித்தனியாக, அவற்றின் கலர் மாறும் வரை வறுக்கவும்.
பின்னர் அவற்றோடு காய்ந்த மிளகாயை போட்டு, அதன் மணம் வரும் வரை வறுக்கவும்.
தொடர்ந்து கறிவேப்பிலை அதில் இட்டு, சிறிது சுருட்டத் தொடங்கும் வரை வறுக்கவும்.
இறுதியாக, எள்ளை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வறுக்கவும்.
இப்போது அடுப்பை அனைத்து, பெருங்காய பொடியை சேர்க்கவும்.
அது எள் பொடியில் உள்ள சூட்டில் நல்ல மணம் கொடுக்கும். அவற்றை கலந்த பின்னர், நன்றாக குளிவிக்கவும். பின்னர் அவற்றை எடுத்து தூளாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பொடியை நன்றாக அரைத்த பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்த, தேங்காய் எண்ணெயுடன் தோசை, இட்லிகளுடன் பரிமாறவும்.
பின்குறிப்பு:
வெள்ளை எள் விதைகளுக்கு பதிலாக கருப்பு எள் விதைகளைப் நீங்கள் பயன்படுத்தலாம். கருப்பு எள் பயன்படுத்தும் போது பொடி கருப்பானதாக இருக்கும். மற்றும் சுவை மிகவும் வலுவாக இருக்கும்.
காரம் அதிகம் சேர்ப்பவராக இருந்தால், கூடுதலாக சில சிவப்பு மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம்.