ஆரோக்கியம்

பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அழகான உடலமைப்பை பெறலாம்

உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம். உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. மேலும் உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்.

உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம். உடற்பயிற்சியின் போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும்.

இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும். ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும். மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்களை பெற முத்தான மூன்று பயிற்சிகள் இதோ!

நாம் அழகாகவே இல்லை,குண்டாக வேறு இருக்கிறோம். நம்மால் அழகாகத் தோற்றம் அளிக்க முடியாது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள், எப்போதுமே ‘ பாஸிடிவ் அப்ரோச்’ தான் எல்லாவற்றிலும் நல்ல பலனை அளிக்கும்.

நம் உடலில் எங்கெங்கு குறையிருக்கோ அதனை நாம் நமது உடற்பயிற்சியின் மூலமும், மிதமான, அதே சமயம் நாகரிகமான ஒப்பனையின் மூலமும் நிவர்த்தி செய்ய இயலும்.

உடற்பயிற்சி செய்வதனால் அலைபாய்கிற மனம் ஓர் கட்டுக்குள் அடங்குகிறது. இரத்த ஓட்டம் சீராகி,புத்துணர்வு கிடைக்கிறது. உடற்பயிற்சியினால் உடல் கட்டுக்கோப்பாக ஆகிவிட்டாலே மகிழ்ச்சிதான். இந்த மகிழ்ச்சி தன்னம்பிக்கையை அளித்து அழகூட்டுகிறது.

வியர்வை வெளிப்படுகிற மாதிரி பயிற்சி செய்தாலே முகம் பொலிவு பெற ஆரம்பித்து விடும்.

பயிற்சி செய்து விட்டு விட்டால் குண்டு பெண்மணி ஆகிவிடுவோம் என்று பயப்படும் அவசியம் இல்லை. என்ன இரண்டு கிலோ அதிகமாகும் அவ்வளவுதான். மீண்டும் நீங்கள் தொடர்ந்தால் சரியாகி விடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker