ஆரோக்கியம்

பெண்களே இந்த பழக்கம் இருந்தால் குண்டாவீர்கள்

பெரிய தட்டுகளில் சாப்பிடும் போது குறைந்த உணவு சாப்பிடும் உணர்வு தோன்றும். இதனால் பசி அடங்காதது போலவே இருக்கும். எனவே சிறிய தட்டுகளில் பொறுமையாக உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்களா? பிடித்த சாப்பாடு அயிட்டங்களையெல்லாம் விட்டுட்டேன், மாங்கு மாங்குனு நடக்குறேன், ஆனாலும ஒடம்பு கொறயலையேன்று கவலைப்படுபவரா நீங்கள்?

ஒருவேளை இங்கே குறிப்பிட்டுள்ள ஏதாவது தவறுகளை நீங்கள் செய்து கொண்டிருந்தால் அது கூட உங்கள் எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். பணிபுரியும் பெண்கள், காலையிலிருந்து வேலை செய்த அலுப்பினால் வீட்டுக்கு வந்தவுடன் அப்படியே சோபாவில் சாய்நது டிவி பார்த்துவிட்டு பொறுமையாக இரவு பத்து மணிக்கு  மேல் சாப்பிட்டால் செரிப்பதற்கு சிரமமாவதுடன் வளர்சிதை மாற்றம் குறைந்து உடலில் கொழுப்பு அதிகம் சேரும்.

இரவு சீக்கிரமாக தூங்காமல கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் போன்றவற்றில் மூழ்கி விட்டு தாமதமாக தூங்கி சரியான நேரத்துக்கு எழாமல் இருந்தால் எடைக்கூடும். சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு பசியைத்தூண்டும் ஹார்மோன்கள் சீராக இயங்காமல், கிடைத்ததையெல்லாம் சாப்பிடச்செய்து எடையை அதிகரித்து விடக்கூடும்.

நாம் சாப்பிட ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்கு பிறகே நமது வயிறு நிறைந்து விட்ட உணர்வு மூளைக்கு செல்கிறது. வேகவேகமாக சாப்பிடும் போது வயிறு நிறையாதது போலவே தோன்றுவதால் நம்மை அறியாமலேயே நிறைய சாப்பிடுவோம். மெதுவாக சாப்பிடும் போது வழக்கமாக சாப்பிடும் அளவை விட குறைவாகவே சாப்பிடுவோம்.

நேரமில்லை என்று காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்தால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காது. பசி உணர்வு அதிகரிக்கும். எனவே போண்டா. பர்கர் என்று நம்மை அறியாமல் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுக்கொண்டே இருப்போம். இதனால் எடை அதிகரிக்கும்.

பெரிய தட்டுகளில் சாப்பிடும் போது குறைந்த உணவு சாப்பிடும் உணர்வு தோன்றும். இதனால் பசி அடங்காதது போலவே இருக்கும். எனவே சிறிய தட்டுகளில் பொறுமையாக உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சோடா போன்ற பானங்கள் குடிப்பது போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கவே செய்யும்.

கோபம், படபடப்பு, பயம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளில் இருக்கும் போது நமக்கே தெரியாமல் அதிக அளவு உணவு சாப்பிடுகிறோம். எனவே இதுபோன்ற நேரங்களில் மனம் நிதானமான பிறகு சாப்பிடுவதே சிறந்தது. மேற்கண்டவையெல்லாம் நம்மை அறியாமலேயே நாம் செய்யும் தவறுகள். இதனால் எடையை குறைக்க நாம் எடுக்கும் முயற்சிகள் வீணாகின்றன. இவற்றை கண்டுபிடித்து சரி செய்த கொண்டால் நீங்களும் ஸ்லிம் பியூட்டிதான்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker