சமையல் குறிப்புகள்
குட்டீஸ் ரெசிபி: ஃப்ரூட் கபாப்
இந்த வார ரெசிபி ரொம்பவும் சுலபமானது. பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இந்த ஃப்ரூட் கபாப்பை விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த வார ரெசிபி ரொம்பவும் சுலபமானது. அதேசமயம் வண்ணமயமானது. வீட்டில் இருக்கும் பழங்கள்தான் இந்த ரெசிபியின் முக்கிய பொருட்கள். வீட்டு பிரிட்ஜில் இருக்கும் பழங்களை எல்லாம் எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, அன்னாசிப்பழம், வாழைப்பழம், ஆரஞ்சு, திராட்சை, கொய்யா, பப்பாளி, கிவி இதில் எதுவாக இருப்பினும் அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கியும் அல்லது தேவைக்கு ஏற்க முழு பழங்களாக வைத்தும், இந்த ரெசிபியை தயாரிக்கலாம். கபாப் குச்சியில் பழங்களை வரிசையாக அடுக்கி வைத்தால், ஃப்ரூட் கபாப் ரெடி.