விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர விடையாற்றி உற்சவம்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு சித்திவிநாயகர் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
ருத்தாசலம் மணவாளநல்லூரில் சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இங்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. கடந்த 28-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையடுத்து 10-ம் விழாவான விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சித்திவிநாயகர் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்க, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.