சமையல் குறிப்புகள்

பீட்ரூட் மாதுளம் பழம் சூப்

தேவையான பொருட்கள் :

  • மாதுளை முத்துக்கள் – ஒரு கப்,
  • மாதுளைத் தோல் – கால் கப்,
  • துருவிய பீட்ரூட் – கால் கப்,
  • தக்காளி – 2,
  • கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 2 டீஸ்பூன்,
  • வெண்ணெய் – அரை டீஸ்பூன்,
  • கிராம்பு – 2,
  • மிளகுத்தூள்,
  • உப்பு – தேவைக்கேற்ப.




செய்முறை:

  • மாதுளைத் தோல், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்,
  • மாதுளை முத்துக்கள், மாதுளைத் தோல், துருவிய பீட்ரூட், நறுக்கிய தக்காளியை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயை சேர்க்கவும்.
  • கிராம்பு, கார்ன்ஃப்ளார் சேர்த்து லேசாக வறுக்கவும்.
  • அரைத்த மாதுளை விழுது, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  • எல்லாம் சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்து, பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும்.
  • உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
  • பீட்ரூட் மாதுளம் பழம் சூப் ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker