புதியவைவீடு-தோட்டம்

துணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க!

நீங்கள் பல்வேறு டிடர்ஜென்ட் பவுடர்களை மாற்றி பார்த்திருப்பீர்கள் ஆனால் எதுவும் பலனளித்திருக்காது.

இன்றைய நவீன உலகில் துணிகளை கைகளால் சலவை செய்வது என்பது முடியாத காரியமாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் இப்பொது வாஷிங் மெஷின் வந்துவிட்டது. இருப்பினும், கைகளில் துணிகளை துவைப்பது போல மெஷின்களில் துவைப்பது இருக்காது. என்னதான் வாஷிங் இயந்திரங்களில் துணிகளை போடுவதற்கு முன்பு சலவைக்கான வழிமுறைகளை சரிபார்த்து போட்டாலும் உங்கள் உடைகள் பழையதாகவும், ஆடை நிறங்கள் வெளுத்து போனது போலவும் தோன்றும். மேலும் பல முறை வாஷிங் செய்த பிறகும் சில விடாப்பிடியான கறைகள் நீங்கவே நீங்காது. இதற்காக, நீங்கள் பல்வேறு டிடர்ஜென்ட் பவுடர்களை மாற்றி பார்த்திருப்பீர்கள் ஆனால் எதுவும் பலனளித்திருக்காது. இனி கவலை வேண்டாம். உங்கள் டிடர்ஜென்ட் பவுடர்களின் சுத்தம் செய்யும் சக்தியை அதிகரிக்க பல இயற்கையான எளிமையான வழிகள் உள்ளன. அவை என்ன என்பதை பற்றி பாப்போம்.

1. பேக்கிங் சோடா

உணவில் பயன்படுத்தும் அதே சமையல் சோடா உண்மையில் ஒரு சிறந்த டிடர்ஜென்ட் பூஸ்டராக செயல்படுகிறது. இது துணிகளிலிருந்து துர்நாற்றத்தை அகற்ற உதவுவதோடு, சிறந்த ப்ளீச்சாக செயல்படுகிறது. மேலும் உங்கள் துணிகளை மென்மையாக்குகிறது. எனவே வெண்மையான மற்றும் பிரகாசமான வண்ணங்களுக்கு 1/2 கப் பேக்கிங் சோடாவை உங்கள் டிடர்ஜென்ட் பவுடருடன் கலக்கவும். கூடுதலாக, பேக்கிங் சோடா தண்ணீரை மென்மையாக்க உதவுகிறது. எனவே நீங்கள் குறைந்த அளவு டிடர்ஜென்ட் பவுடரை பயன்படுத்தலாம். குறிப்பாக நீங்கள் டாப் லோட் வாஷிங் மெஷின் பயன்படுத்தினால் 1/2 கப் பேக்கிங் சோடாவும், பிரண்ட் லோட் மேஷன்களில் சலவை செய்யும்போது 1/4 கப் பேக்கிங் சோடாவும் கலப்பது நல்லது.

2. எலுமிச்சை

காட்டன் டி-ஷர்ட்களில் படியும் துரு மற்றும் தாதுக் கறைகளை வெளியேற்ற, தண்ணீரில் வாஷ் செய்யும் சுழற்சியின் போது 1 கப் எலுமிச்சை சாற்றை சலவை இயந்திரத்தில் ஊற்ற வேண்டும். எலுமிச்சையின் அமிலத்தன்மை கறைகளை திறம்பட நீக்கி, உங்கள் துணிகளை புதியது போல பிரகாசிக்க செய்யும்.

3. மவுத்வாஷ்

உபயோகப்படுத்தப்பட்ட ஜிம் உடைகள் மற்றும் சாக்ஸ் ஆகியவற்றில் கடினமாக பாக்டீரியாக்கள் குடிகொண்டிருக்கும். அவை ஒரு அலசலில் வெளியேறாது. எனவே, அடுத்த முறை உங்கள் வியர்வைத் துணிகளை சலவை இயந்திரத்தில் துவைத்தீர்கள் என்றால், அதனை தண்ணீரில் கழுவும் சுழற்சியின் போது ஒரு கப் ஆல்கஹால் அடிப்படையிலான, சர்க்கரை இல்லாத மவுத்வாஷை சேர்ப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். கூடுதலாக, உங்கள் சலவை இயந்திரத்தை கிருமி நீக்கம் செய்ய மவுத்வாஷ் ஒரு சிறந்த முகவராக செயல்படுகிறது. இதற்கு துவைக்கும் சுழற்சியின் போது சலவை இயந்திரத்தில் 1/2 கப் மவுத்வாஷைச் சேர்க்கவும்.

4. வினிகர்

துவைக்கும் போது டிடர்ஜெண்ட்டுடன் வினிகரை பயன்படுத்தும் ட்ரிக்ஸ் நம்மில் பலருக்கு தெரியாது. உங்கள் இயந்திரத்தின் சோப் வாஷிங் சுழற்சியின் போது 1 கப் வெள்ளை வினிகரைச் சேர்ப்பதில் பல நன்மைகள் உள்ளன.துணி துவைக்கும் போது இயந்திரத்தில் வினிகரின் சேர்ப்பதன் பயன்கள் குறித்து காண்போம்.

* உங்கள் துணிகளில் இருக்கும் எந்த பாக்டீரியாவையும் அகற்ற ஒரு கப் வினிகர் உதவும்.

* உங்கள் ஆடைகள் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க வினிகர் உதவுகிறது.

* உங்கள் வெள்ளை ஆடைகளை இன்னும் பிரகாசமாக்க உதவுகிறது.

* கடைசியாக தண்ணீரில் வாஷ் செய்யும் சுழற்சியில், ஒரு கப் வினிகரை சேர்ப்பதன் மூலம் உங்கள் ஆடைகளை மெல்லியதாகவும், நிலையானதாகவும் வைத்திருக்க முடியும்.

* நீங்கள் புதிதாக வாங்கிய ஆடைகளில் வண்ணங்கள் வெளுக்காமல் இருக்க உதவுகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker