தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

கர்ப்ப கால முதுகுவலியைத் தவிர்க்க சில எளிய வழிகள்

கர்ப்ப கால முதுகுவலியைத் தவிர்க்க சில எளிய வழிகள்
பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி,  முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம். மேலும், கர்ப்ப காலத்தின்போது Relaxin என்ற ஹார்மோன் சுரப்பதாலும் முதுகு இடுப்பு தசைகள் மற்றும் ஜவ்வுகள் வலுவிழந்து வலி உண்டாகிறது. வயிறு பெரிதாக ஆக, கீழ் முதுகின் எலும்பு முன்னோக்கி வளைகிறது.

இதனால் முதுகு எலும்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அதிக அழுத்தத்தின் காரணமாகவே முதுகுவலி வருகிறது. கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம்.

* பின்னோக்கிச் சாய்ந்து நிற்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான பொசிஷன்.

* உட்காரும்போது முதுகுக்கு சப்போர்ட் இருக்கும்படிப் பார்த்து உட்காருங்கள்

*  உட்கார்ந்து இருக்கும்போது டவலை நான்காக மடித்து முதுகுக்கு பின் வைத்து உட்காருவதன்மூலம் முதுகுக்கு ஏற்படும் அழுத்தத்தை பெருமளவு குறைக்கலாம்.

* தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.

* பளுவான பொருட்களை உங்கள் உடலோடு அணைத்தபடி பிடித்துத் தூக்குங்கள்.

* முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள்.

* முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும்.

* கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு என்கிற பெயரில் ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது நடப்பது முக்கியம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker