ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

கல்யாண முருங்கை இலையில் இத்தனை மருத்துவ பயன்களா?

கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது.

இது கிராமப்புறங்களில் முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது.

இதில் சுண்ணாம்புச்சத்து, நார்சத்து, இரும்புசத்து அதிகம் உள்ளது.

இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் குணங்கள் கொண்டது. அதிலும் இது பல நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது.

அந்தவகையில் இதிலுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

 • கல்யாண முருங்கையானது கர்ப்பபை பிரச்சனைகளை சரிசெய்யும். கருச்சிதைவிலிருந்து சிசுவைக் காப்பாற்றும். பெண் மலட்டுத் தன்மையை நீக்கும்.
 • கல்யாண முருங்கையை பெண்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வயிற்றுவலி மற்றும் உதிரிப்போக்கை தடுக்கும்.
 • கல்யாண முருங்கை இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். அத்துடன் இந்த இலைச் சாற்றை குடித்தால், பொதுவாக நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும், பருத்த உடல் இளைக்கும்.
 • கல்யாண முருங்கையானது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க உதவும்.
 • இந்த கீரையானது சிறுநீரகப் பிரச்சனையை சீர்செய்யும். சூடு மற்றும் பித்தநோய்களை கட்டுப்படுத்தும்.
 • கல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், ஆண்மை பெருகும், தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு உறவில் ஆர்வம் ஏற்படும்.
 • கல்யாண முருங்கை காய்ச்சலை குறைக்கும், மேலும் உடலை வலுவாக்கும்.
 • கல்யாண முருங்கை இலை, முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு இவற்றை சூப்வைத்து குடித்தால் ரத்தசோகை குணமாகும்.
 • கல்யாண முருங்கை இலையுடன் மிளகு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் பனி மற்றும் மழை காலத்தில் சளித்தொல்லை தீர்வு தரும்.
 • கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் பின் குளித்தால் உடலில் ஏற்படும் தோல் நோய்களான சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
 • கல்யாண முருங்கை இலையுடன் ஒரு தேக்கரண்டி தண்ணீரில் ஊறவைத்த வெந்தயம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுத்தல், வெட்டை நோய்கள் குணமாகும்.
 • கல்யாண முருங்கை இலைகளை இலேசாக வதக்கி, இளஞ்சூட்டில் பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் கீல்வாயு குணமாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker