அழகு..அழகு..புதியவை

சரும துளைகள் பிரச்சனையை நீக்கி முகத்தை பொலிவாக்கும் முறைகளை வீட்டிலேயே செய்யலாம்…பார்லரே தேவையில்லை..!

முகத்தில் அதிக சரும துளைகள் பிரச்னை இருப்பவர்கள் முகத்தை சுத்தப்படுத்துவதிலும், முகம் கழுவும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சில பெண்களுக்கு ஃபேஷ் வாஷ் செய்யும் போது பின்பற்ற வேண்டியவைகள் மற்றும் பின்பற்றக்கூடாதவைகள் பற்றி தெரியவில்லை. அதனால் பெண்கள் பல சரும பிரச்சனைகளை சந்தித்து, சருமத்தின் அழகையே கெடுத்துக் கொள்கிறார்கள். இதன் விளைவாக ஓபன் போர்ஸ் எனும் சரும துளைகள், க்ளோஸ்டு போர்ஸ் எனும் மூடப்பட்ட துளைகள், பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மூடப்பட்ட சரும துளைகள் பிரச்சனைகள் குறித்தும் அதனை சரி செய்யும் முறைகள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.

சருமத்தின் துளைகள் மூடப்பட்டிருந்தால் அதில் இருக்கும் அழுக்குகள், மற்றும் இயற்கையாகவே சுரக்கும் எண்ணெய்கள் வெளியேறாமல் சரும பிரச்னைகளை ஏற்படுத்தி விடும். அவற்றை கீழ்காணும் முறைகளை பின்பற்றி சரிசெய்யலாம்.,

ஃபேஷ் வாஷ் : மூடப்பட்டிருந்த சரும துளைகளை திறக்க முதலில் சருமத்தை சுத்தப்படுத்த வேண்டும். முக சருமத்தை மென்மையாக பாதுகாக்க உங்களின் சருமத்தை பொறுத்து பல்வேறு வகையான ஃபேஸ் வாஷ் சந்தையில் உள்ளது. பருக்கள் அதிகம் கொண்டவர்கள் சாலிசிலிக் ஆசிட் உள்ள ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் க்ரீம் அல்லது பால் கலந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் பாரபின் மற்றும் வாசனம் சேர்க்காத பேஸ்வாஷ் பயன்படுத்தலாம்.

ஃபேஷ் ஸ்க்ரப் : ஃபேஸ் ஸ்க்ரப் என்பது ஒரு ஆழமான சுத்திகரிப்பு செயல்முறை. இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சுத்தப்படுத்த உதவுகிறது. ஃபேஸ் ஸ்க்ரப் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது இறந்த செல்களை மென்மையாக மாற்றி நீக்குகிறது மற்றும் தோல் அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகள், தூசி நீங்கி உங்கள் சருமம் மென்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். இதனால் உங்கள் சரும நிறம் அதிகரிக்கும். மேலும் பிளாக்ஹெட்ஸ், பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள், மூடப்பட்ட துளைகள் போன்ற பிரச்சினைகளையும் சரி செய்கிறது.

ஆவி பிடித்தல் : ஆவி பிடிக்கும் நடைமுறை பண்டைய காலத்தில் இருந்தே பின்பற்றப்படும் இயற்கை முறையாகும். சளி, மூக்கடைப்பு, தலைவி பிரச்சனைகள் மட்டுமின்றி சரும பிரச்சனைகளை நீக்கவும் ஆவி பிடித்தல் சிறந்த முறையாகும். சூடான நீரில் இருந்து வெளியாகும் நீராவி முகத்தில் படும் போது சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுப்பதோடு, சுத்தமும் செய்கிறது. தற்போது ஸ்பாக்கள், பியூட்டி பார்லரிலும் சரும அழகை பராமரிக்க ஆவி பிடிக்கும் முறையை செய்து வருகிறார்கள். இதனால் சரும துளைகளைத் திறந்து அதிலுள்ள அழுக்குகளை நீக்குகிறது. மேலும் சரும துளைகள் அடைப்பால் ஏற்படும் சரும எரிச்சல், பாக்டீரியா தொற்று போன்றவற்றையும் இந்த நீராவி முறை போக்குகிறது.

சார்கோல் மாஸ்க் : சார்கோல் மாஸ்க் சருமத்தை புத்துயிர் பெற செய்து வெண்மையாக்கி நிறத்தை மேம்படுத்துகிறது. ஒரு தேக்கரண்டி சார்கோல் பவுடரை எடுத்து, அதில் ஐந்து துளிகள் பாதாம் எண்ணையை கலந்து கொள்ளவும். இந்த மாஸ்க்கை உங்கள் முகம் முழுவதும் பூசி நன்கு காயும் வரை காத்திருந்து பின்னர் மெதுவாக பிரித்தெடுக்கவும். இப்படி செய்து வந்தால் உங்கள் சருமத்தில் உள்ள துளைகள் திறந்து புத்துணர்ச்சியாகும்.

முல்தானி மிட்டி : முல்தானி மிட்டி சருமத்திலிருந்து அசுத்தங்கள், அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை நீக்குவதாக அறியப்படுகிறது, மேலும் சுருக்கங்களை குறைத்து வயதான தோற்றத்தையும் போக்க உதவுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும் சருமத்தில் உள்ள அழுக்கை எடுக்கவும் முல்தானி மிட்டி உதவுகிறது. முல்தானி மிட்டியுடன், கிளிசரின் மற்றும் தேனை 1 டீஸ்பூன் கலந்து மாய்ஸ்சுரைசிங் ஃபேஸ் மாஸ்க் ஒன்றை தயார் செய்து, அதனை கொண்டு சருமத்தை சுத்தப்படுத்துங்கள். எண்ணெய் பசை சருமம் இருப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

ஓட்ஸ் ஃபேஸ் ஸ்க்ரப் : ஓட்ஸை நன்றாக பொடித்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் உலர விடவும், பின்னர் தண்ணீரில் கழுவவும். அனைத்து சருமத்தினருக்கு இதனை தொடந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் தினமும் பயன்படுத்தும் க்ளென்சர் அதன் வேலையை திறம்பட செய்யவில்லை என்றால் இந்த ஸ்க்ரப் உங்களுக்கு சிறந்த பயனை அளிக்கும். குறிப்பாக குளிர் காலத்தில் பயன்படுத்தவும் வறண்ட சருமத்திற்கு பயன்படுத்தவும் இது உகந்ததாக உள்ளது.

பழ பேஸ் மாஸ்க் : ஒரு பாத்திரத்தில் அரைத்த வாழைப்பழங்கள், ஆப்பிள்கள், பப்பாளி, ஆரஞ்சு, பப்பாளி, அவகோடா ஆகியவற்றை எடுத்து நன்கு ஒன்றாக மசித்து கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் தடவவும். பின்னர் இதை 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருங்கள். பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவி விடுங்கள். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker