ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

சிலவகை பூக்களும் அவற்றின் அற்புத மருத்துவ குணங்களும் !!

பெண்கள் தலையில் பூச்சூடுவதால் மனம் புத்துணர்ச்சி அடைவதுடன் பல்வேறு நோய்களையும் தீர்த்து வைக்கிறது.
ரோஜாப்பூ தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். மல்லிகைப்பூ மன அமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும். செண்பகப்பூ வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
பாதிரிப்பூ காது கோளாறுகளைக் குணப்படுத்தும்; செரிமானச் சக்தியை மேம்படுத்தும்; காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
செம்பருத்திப் பூ தலைமுடி தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
மகிழம்பூ தலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
வில்வப்பூ சுவாசத்தைச் சீராக்கும். காசநோயைக் குணப்படுத்தும். சித்தகத்திப்பூ தலை வலியைக் போக்கும்; மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
தாழம்பூ நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும்; உடல் சோர்வை நீக்கும்.
தாமரைப்பூ தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும்; மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும்; தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
கனகாம்பரம்பூ தலைவலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும். தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்ற மலர்கள் வாதம், கபம் போன்றவற்றைச் சரிசெய்யும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker