ஸ்வீட் கார்ன் பக்கோடா
தேவையான பொருட்கள்:
* ஸ்வீட் கார்ன் – 2 கப் (வேக வைத்தது)
* வெங்காயம் – 1/2 (மெல்லியதாக நறுக்கியது)
* கடலை மாவு – 1/2 கப்
* அரிசி மாவு – 2 டேபிள் பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீபூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீபூன்
* இஞ்சி பூண்டு விழுது – 1 டீபூன்
* சாட் மசாலா – 1/4 டீபூன்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* கறிவேப்பிலை – சிறிது
* உப்பு – 1/4 டீபூன்
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் வேக வைத்த கார்ன் மற்றும் வெங்காயத்தைப் போட்டு நன்கு கையால் பிசைந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை லேசாக அரைத்துக் கொள்ளலாம்.
* பின் அதில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பெங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பிசையும் போது, தண்ணீர் சேர்க்கக்கூடாது.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்வீட் கார்ன் பக்கோடா தயார்.