புதியவைவீடு-தோட்டம்

கிச்சனில் கத்தி செட்களை பராமரிக்க நீங்கள் செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை என்ன..?

மசாலாப்பொருட்கள் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு சமையல் பாத்திரங்களும், கத்தி, கரண்டி போன்ற பொருட்களும் கட்டாயம் அவசியம்.

சமயலறைகளில் உணவுப்பொருட்கள் மற்றும் மசாலாப்பொருட்கள் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு சமையல் பாத்திரங்களும், கத்தி, கரண்டி போன்ற பொருட்களும் கட்டாயம் அவசியம். அதிலும் நீங்கள் ஒரு நல்ல கத்தி செட்களை பயன்படுத்துவது அது உங்கள் சமயலறைக்கு சிறந்த சொத்தாகும். ஏனெனில் காய்கறிகளை சாப்பிங் செய்வதில் இருந்து ஸ்லைசிங் மற்றும் போனிங் செய்வது வரை கத்தியின் பயன்பாடு மிக அவசியம்.

இருப்பினும், ஒரு கத்தியை எந்த அளவுக்கு நன்றாக பராமரிக்கிறீர்களோ அதேபோல, ஒரு நல்ல கத்திகளில் முதலீடு செய்வது என்பதும் மிக முக்கியம். நீங்கள் பயன்படுத்தும் கத்தியை முறையாக பராமரிப்பதனால் அதன் நீண்ட ஆயுளை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதன் செயல்திறனையும் அதிகரிக்க செய்யலாம். ஆனால், மந்தமான கத்தியை உபயோகிப்பது என்பது மிகவும் ஆபத்தானது மற்றும் கூர்மையான கத்தியை விட அதிக காயத்தை ஏற்படுத்தக்கூடும்.

சிலரது வீட்டில் காய்கறிகளை வெட்டும் போது கத்தியை லாவகமாக பயன்படுத்தும் மாஸ்டர் செஃப் அம்மாக்கள் அதிகம் உள்ளனர். இருப்பினும் அவர்கள் தாங்கள் உபயோகிக்கும் கத்திகளை சரிவர பராமரிக்காததால் விரைவில் அவை மழுங்கி விடுகின்றன. உங்கள் கத்திகளை நல்ல நிலையில் வைத்திருக்கவும், அவற்றின் நீண்ட ஆயுளை அதிகரிக்கவும் சில செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத எளிய உதவிக்குறிப்புகளை நீங்கள் பின்பற்றினாலே போதும். அவை என்ன என்பது குறித்து கீழே காண்போம்.

கத்தியைத் நன்கு துடைத்து வைக்க வேண்டும்: உங்கள் கத்தியைப் பயன்படுத்தி முடித்தவுடன் அவற்றை நன்கு துடைத்து வைக்க வேண்டும். இது முக்கியமானது, ஏனெனில் பயன்படுத்தப்பட்ட கத்தியை அப்படியே விட்டுவிடுவது காய்கறி, பழம், மீன் மற்றும் இறைச்சி எச்சங்களை சேகரிக்க அனுமதிக்கும். இது பின்னர் உங்கள் உடலில் வரக்கூடிய தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை வளர்க்கும். ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பாத்திரங்கள் ஈ.கோலை மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்களை பல்வேறு வகையான பயன்படுத்துதல்களுக்கு இடையில் பரப்பக்கூடும். இது நாளடைவில் புட் பாய்சனிங்கிற்கு வழிவகுக்கும்.

கத்திகளை கழுவி நன்கு உலர வைக்க வேண்டும்: டிஷ் வாஷர்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய அதிக அளவு சக்தியை உருவாக்குகிறது. ஆனால் அது உங்கள் கத்திக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அதன் விளிம்பையும் கூர்மையையும் குறைக்கும். எனவே கத்தியை எப்போதும் மென்மையான டிஷ் சோப்பை பயன்படுத்தி கைகளாலேயே கழுவ வேண்டும். இதற்கு டிஷ் வாஷர்களை பயன்படுத்தாதீர்கள். அதேபோல, ஸ்க்ரப் பேட் கொண்டு கத்திகளை சுத்தம் செய்யக் கூடாது.

நீங்கள் கூர்மையான பிளேடுகளை கழுவும்போது கவனமாக இருங்கள். ஆரம்பத்தில் கத்திகளை கழுவும்போது உங்கள் விரல்களை எந்த வெட்டு காயமும் ஏற்படாமல் சேமிக்க ஒரு ஜோடி கையுறைகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதேபோல சிட்ரஸ் சாறுகள் அல்லது ப்ளீச் கொண்ட சோப்புகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை கத்தியில் துருவை ஏற்படுத்தும். கழுவிய பிறகு கத்தியை உடனடியாக உலர்த்தவும். நீர் மற்றும் ஈரப்பதம் அனைத்தும் கூர்மையான வெட்டு விளிம்பில் இருந்து உலர்த்தப்படுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

கத்திகளை சிங்க்கிலோ அல்லது பாத்திர டிராயரில் வைப்பதைத் தவிர்க்கவும்: கத்தியின் விளிம்புகள் கூர்மையானவை. அவற்றை பாத்திர கூடை, டியார் அல்லது சிங்க் போன்றவற்றில் வைக்கும் போது, மற்ற பாத்திரங்களுடன் உராய்வு ஏற்பட்டு அதன் கூர்மை பாதிக்கப்படலாம். அதேபோல, அது மற்ற பாத்திரங்களில் சில கீறல்களை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

சாப்பிங் பலகையைப் பயன்படுத்துங்கள்: சாப்பிங் பலகைகள் உங்கள் கத்தியின் சிறந்த மற்றும் வாழ்நாள் நண்பர். பெயர் குறிப்பிடுவது போல, இந்த சமையலறை கருவியின் நோக்கம் உங்கள் வெட்டும் செயல்முறையை ஒழுங்கமைப்பது மட்டுமல்லாமல், உங்கள் கூர்மையான கத்திகளுக்கு ஒரு சரியான பேஸை வழங்குகின்றன. ஏனென்றால், கத்திகள் தொடர்ந்து ஒரு கிரானைட் கவுண்டர்டாப்பைத் தாக்கினால், கத்திகள் மழுங்கி போகக்கூடும்.

சிலர் தங்கள் கைகளில் காய்களை பிடித்தபடி கத்தியில் சாப் செய்யும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். இதனால், நீங்களே உங்கள் விரல்களை காயப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அவற்றை எளிதில் சுத்தம் செய்வதற்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் பரிமாற்றத்தைத் தவிர்ப்பதற்கும், குறிப்பாக இறைச்சி போன்றவற்றை வெட்டுவதற்கு மரத்தால் ஆன ஒரு சாப்பிங் பலகையைத் தேர்வு செய்யுங்கள்.

அவ்வப்போது கத்தியைக் கூர்மைப்படுத்துங்கள்: உங்களது காய்கறிகளை வெட்டும் ஸ்டைல் மற்றும் சமையல் திறன்களைப் போலவே, உங்கள் சிறந்த நண்பரான கத்தியை அடிக்கடி கூர்மையாக்குவதும் அவசியம். உங்கள் கத்தியை வருடத்திற்கு ஒரு முறை வீட்டிலேயே வீட்ஸ்டோன் மூலம் கூர்மைப்படுத்துங்கள் அல்லது தொழில்முறை உதவியை நாடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker