அழகு..அழகு..புதியவை

உங்கள் தலைமுடியை இயற்கையான முறையில் ஸ்ட்ரைட்னிங் செய்ய சில அருமையான டிப்ஸ்கள்…!

வீட்டிலேயே இயற்கைப் பொருட்களைக் கொண்டு, பாதிப்பின்றி உங்கள் முடியை நேராக்க முடியும். பல வேதிப்பொருட்களை உபயோகப்படுத்தப்படுவதால், முடியின் வலு குறைந்து திறனைக் குலைக்கின்றது.

இப்போதுள்ள காலகட்டத்தில் பலவிதமான வாழ்க்கை முறைகளும் நாள்தோறும் புதிய ஃபேஷன்களும் உருவாகி வருகின்றன. அவற்றில் ஒன்று முடியை ஸ்ட்ரைட்னிங் செய்துக்கொள்வது. பெண்கள் தங்கள் கூந்தலை ஸ்ட்ரைட்னிங் செய்யபியூட்டி பார்லர்களில் பல ஆயிரங்களை வாரி வழங்குகிறார்கள். ஆனால் அது கடைசியில் உங்கள் முடியை ஆரோக்கியமானதாக மாற்றாமல் கேடுகளையே விளைவிக்கின்றது. பல வேதிப்பொருட்களை உபயோகப்படுத்தப்படுவதால், முடியின் வலு குறைந்து திறனைக் குலைக்கின்றது. இது முடிக்கு மட்டுமல்ல சில சமயம் உடலிற்கே கேடாக அமைகின்றது. எனவே வீட்டிலேயே இயற்கைப் பொருட்களைக் கொண்டு, பாதிப்பின்றி உங்கள் முடியை நேராக்க முடியும். சரி வாருங்கள் இந்த பதிவில் உங்கள் முடியை ஸ்ட்ரைட்னிங் செய்யும் முறையை பார்ப்போம்.

பசும் பால்:

ஸ்ப்ரே செய்யக்கூடிய பாட்டிலில், ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை எடுத்துக் கொண்டு அதே அளவு பாலைக் கலந்து கொள்ளவும். பிறகு அதை உங்கள் முடியில் அனைத்து இடங்களிலும் ஸ்ப்ரே செய்யவும். பிறகு நன்கு பரவுமாறு தடவி விடவும். பின் ஒரு அகலமான சீப்பை எடுத்துக்கொண்டு முடியில் உள்ள சிக்கல்களையும், ஒட்டுகளையும் நீக்கவும். அப்போது தான் முடி முழுவதும் பால் பரவும். குளிப்பதற்கு முன் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன் இதைச் செய்து பின்னர் தலைக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு அலசவும். அவ்வளவு தான்! நீங்கள் அடுத்த முறை தலையை அலசும் வரை முடி நேராக குலையாமல் இருக்கும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டை:

இரண்டு முட்டைகளை எடுத்துக் கொண்டு நன்கு அடித்துக் கலக்கவும். அதில் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்க்கவும். இந்த கலவையை ஒரு பிரஷை வைத்து ஸ்கால்ப்பில் படும்படி முடியில் தடவவும். தலையை சில மணிநேரம் காயவிடவும். பின்னர் ஷாம்பு போட்டு நன்கு அலசவும். இது உங்கள் முடியை நன்கு நேராக்குவதோடு நல்ல வலுவையும் தரும்.

தேங்காய்ப் பால் மற்றும் எலுமிச்சை சாறு:

தேங்காயை நன்கு துருவி அதை பிழிந்து பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து கொள்ளுங்கள். அதை நன்கு குழைத்து பசை போன்று செய்து கொள்ளுங்கள். அந்த கலவையை ஃபிரிட்ஜில் ஒரு நாள் வைக்க வேண்டும். மறுநாள் அதை தலையில் தடவி நன்கு ஸ்கால்ப்பில் மசாஜ் செய்யவும். சூடான ஒரு டவலை முடியில் சுற்றி முடி வெளியில் தெரியாதவாறு மூடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து நன்கு அலசவும். வாரத்திற்கு மூன்று முறையேனும் இதைச் செய்தால் உங்கள் முடி வலுவாகி நேராக ஆவதை நீங்கள் விரைவிலேயே உணர முடியும்.

சூடான தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் சிறிது எடுத்துக் கொண்டு சூடேற்றி நன்கு தலையில் தடவவும். அதை அரை மணிநேரம் ஒரு சூடான டவல் கொண்டு மூடிக் கட்டிவிடவும். பின்னர் ஷாம்பு போட்டு நன்கு தலையை அலசி, மீண்டும் முடியை துணியால் சில நிமிடங்கள் கட்டி மூடவும் (சராசரியாக 5 நிமிடங்கள்). பின்னர் இயற்கையாக உரல விடுங்கள். முடிவில் உங்கள் முடி பளபளப்புடனும், இயற்கையாகவே நேராகவும் ஆவதைக் காண்பீர்கள்.

கற்றாழை:

கற்றாழையில் உள்ள நொதிகள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்கும். மேலும் கற்றாழை சுருட்டை முடியைப் போக்கும். அதற்கு 1/2 கப் வெதுவெதுப்பான எண்ணெயில் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து தலையில் நன்கு தடவி 30 நிமிடம் கழித்து, பின் அலச வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால் சுருட்டை முடி கொஞ்சம் கொஞ்சமாக நேராக மாறிவிடும். மேலும் கூந்தல் பொலிவாகவும் காணப்படும்.

முல்தானி மெட்டி:

முல்தானி மெட்டி ஒரு கப் அளவு எடுத்துக் கொண்டு, அதில் ஒரு முட்டை, 5 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒரு அகலமான சீப்பை எடுத்து முடியிலுள்ள சிக்கலைக் களையவும். பின் குழைத்து வைத்துள்ள கலவையை தடவி உலர விடவும். முடி முழுவதும் காய குறைந்தது 40 நிமிடங்கள் பிடிக்கும். பின்னர் முடியை சுத்தமான நீரில் அலசவும். இந்த கலவையை மாதம் இருமுறை முடியை நேராக்க பயன்படுத்துங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker