ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

ஆண்களே…பிறப்புறுப்பில் பருக்கள் இருந்தால் இதுதான் காரணம் : உஷாராக இருங்கள்..!

‘ஸ்மெக்மா’ என்பது ஆண்குறியில் தோன்றும் ஒரு வகையான சுரப்பி ஆகும். இது பிறப்புறுப்பை சுற்றி வெள்ளை நிறத்தில் தோன்றும் சிறிய கட்டிகள் போன்று இருக்கும் . இது பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைதான் என்றாலும் கவனமுடன் இருப்பது அவசியம். உங்கள் பிறப்புறுப்புகளைச் சுற்றி வெள்ளை நிறத்தில் சீஸ் போன்ற கட்டி ஒன்றை கவனித்திருந்தால் நீங்களும் ஆண்குறி சுரப்பி பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த ஸ்மெக்மா பற்றிய பல செய்திகளை காண்போம்.

ஸ்மெக்மா என்றால் என்ன?

ஸ்மெக்மா என்பது ஆணுறுப்பின் மேல் தோலுக்கு அடியில் உள்ள பிசுபிசுப்பான திரவமாகும். இது சுன்னத் செய்யாத ஆண்களிடம் பொதுவாக காணப்படும். இந்த ஸ்மெக்மா சற்று துர்நாற்றத்தை உண்டாக்கும். அதிலும் ஆணுறுப்பு பகுதியில் அதிகம் வியர்த்தாலோ அல்லது அப்பகுதியை சுத்தமாக கழுவிப் பராமரிக்காமல் இருந்தாலோ, துர்நாற்றம் சற்று கடுமையாக வீச ஆரம்பிக்கும். இதற்கு அப்பகுதியில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகம் உள்ளது என்று அர்த்தம். இதனை உடனே கவனித்து சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், அப்பகுதியில் அழற்சி அல்லது தொற்றுக்களால் பாதிக்கப்படும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆணுறுப்பில் உள்ள ஸ்மெக்மாவை சுத்தம் செய்வதற்கு, முதலில் ஆணுறுப்பின் மேல் உள்ள தோலை மேல் நோக்கி இழுத்து, அப்பகுதியில் சோப்பு பயன்படுத்தி பின் நீரால் கழுவ வேண்டும். அதன் பின் அவ்விடத்தை துணியால் மென்மையாக உலர்த்த வேண்டும். இவ்வாறு செய்த பின் அவ்விடத்தில் இருந்து வீசிய துர்நாற்றம் போயிருப்பதைக் காணலாம். இந்த முறையை ஒரு நாளைக்கு 2 முறை மேற்கொள்ளுங்கள். இம்முறையின் மூலம் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

பிறப்புறுப்பு பருக்கள்:

இது ஒரு பொதுவாக ஏற்படும் பிரச்சனை என்றாலும், ஆனால் இதுகுறித்து நாம் யாரிடமும் விவாதிப்பதில்லை. உங்கள் பிறப்புறுப்புகளில் ஏற்படும் இந்த சீஸ் போன்ற கட்டி, சுத்தம் செய்த பிறகும் மீண்டும் ஏற்படுகிறது. இது எந்த ஒரு அறிகுறிகளையும் ஏற்படுத்தவில்லை. இந்த ஸ்மெக்மா ஒரு சாதாரணமான பிரச்சனையாகும்.

அதிகப்படியான வியர்வை:

உங்கள் பிறப்புறுப்புகளில் அதிகமான வியர்வை அல்லது பிறப்புறுப்பு பகுதியைக் சுத்தமாக வைத்துக்கொள்ளாத போது, அது அந்த பகுதிகளில் பாக்டீரியாக்களை உருவாக்கும். இதனால் பிறப்புறுப்புகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இது ஒரு தொற்று நோய் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த பிரச்னையை குறித்து கவலைப்படத் தேவை இல்லை. இருப்பினும், பாக்டீரியா உருவாவதன் அபாயத்தைக் குறைக்க உங்கள் பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

டாக்டரை எப்போது பார்க்க வேண்டும்?

* சிவந்து இருத்தல்
* வீங்கி இருத்தல்
* தோலை இழுக்க முடியாத நிலை
* எரிச்சல்
மேலுள்ள அறிகுறிகளை ஒருவர் அனுபவித்தால், உடனே மருத்துவரை சென்று பார்க்க வேண்டியது அவசியம்.

சிறுநீரக பாதைத் தொற்று:

சிறுநீரக பாதை எப்போது பாக்டீரியாக்கள் அல்லது வைரஸால் பாதிக்கப்படுகிறதோ, அப்போது உண்டாகும் நிலை தான் சிறுநீரக பாதைத் தொற்று. பெரும்பாலும் இம்மாதிரியான தொற்றுக்கள் குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனைகளால் வரும்.

* பாலியல் செயல்பாடு
* சிறுநீர்ப்பையில் இருந்து முழுமையாக சிறுநீர் வெளியேறாமல் இருப்பது
* சிறுநீரக கற்கள்
* புரோஸ்டேட் வீக்கம்
* சர்க்கரை நோய்

மேற்கண்ட இந்த பிரச்சனைகள் இருந்தால், அதனால் சிறுநீரக பாதையில் தொற்றுகள் ஏற்பட்டு, ஆணுறுப்பில் அழுகிய மீன் துர்நாற்றம் வீசும்.

மற்ற அறிகுறிகள்:

அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதுவும் அதிக அளவு சிறுநீரைக் கழிக்காமல் அளவாக வெளியேறும், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், மங்கலான அல்லது பிங்க் நிற சிறுநீர் வெளியேறுவது. இதற்கு சுன்னத் செய்யாததாலும், சிறுநீரக பாதையில் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சிறுநீரக பாதை தொற்றுக்களை சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், சிறுநீரக தொற்றுக்களை உண்டாக்கிவிடும்.

என்ன செய்யலாம்?

சிறுநீரக பாதை தொற்றுக்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த தொற்றுகளுக்கு மருத்துவர்கள் ஆன்டி-பயாடிக்குகளை பரிந்துரைப்பர். அவற்றை தினமும் தவறாமல் எடுத்து வந்தால், சிறுநீரக பாதை தொற்றுக்களில் இருந்து விடுபடலாம். ஸ்மெக்மா பிரச்சனை சரியாகும் வரை ஆண்கள் மற்றும் பெண்களின் தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் குளிக்கும்போது சிறிது நேரம் ஒதுக்கி பிறப்புறுப்பை சுத்தம் செய்திடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker