பன்னீரில் சூப்பரான பிரியாணி
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி – கால் கிலோ
தக்காளி – 2
வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பன்னீா் பாக்கெட் – 1
எலுமிச்சை பழம் – 1
கொத்தமல்லி, புதினா – தேவையான அளவு
சீரக தூள் – அரை தேக்கரண்டி
தனியா தூள் – அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா – அரை தேக்கரண்டி
முந்திரி – விருப்பதிற்கு ஏற்ப
உப்பு – தேவையான அளவு
எண்ணெய், நெய் – தேவையான அளவு
செய்முறை
சீரக சம்பா அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
பன்னீரை துண்டுகளாக வெட்டி நெய்யில் போட்டு வறுத்து வைக்கவும். அடுத்து அதில் முந்திரியை போட்டு வறுத்து வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சோ்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கியப் பிறகு தக்காளியை சோ்த்து வதக்கவும். தக்காளி சோ்த்தவுடன் சிறிதளவு உப்பு சோ்க்கவும். உப்பு சோ்த்து வதக்கினால் தக்காளி நன்கு வதங்கும்.
அடுத்து மேலே குறிப்பிட்டுள்ள தூள் வகைகளை சோ்க்கவும். அனைத்தையும் சேர்த்து கிளறிவிட்டு, அதில் அரிசி, பன்னீர், முந்திரி சேர்க்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீா் விட்டு, உப்பு சோ்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மூடி விடவும். நான்கு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் ப்ரஷர் அடங்கியதும் திறந்து பரிமாறவும்.