தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது..! என்னென்ன தெரியுமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளது. ஏனெனில் அப்படி செய்தால் அது கருவை பாதிக்கும்.

எனவே இவற்றை அறிந்து செயற்பட வேண்டும். அந்தவகையில் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

  • மசக்கையை தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.
  • தூங்கிக்கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம்போட்டு பயமுறுத்தி எழுப்பக்கூடாது.
  • சிறுநீரை அடக்குவதால் சிறுநீரகக் கற்கள், சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும்.
  • எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
  • கர்ப்பிணி பெண்கள் நல்ல நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய் வகைகள், மேலும் குறிப்பாக கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஆட்டிறைச்சி, பன்றி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு மாமிச வகைகளை தவிர்ப்பது நல்லது.
  • சீஸ் அதிகம் கலந்த உணவையும் தவிர்க்க வேண்டும். இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுப்பதோடு, சில உபாதைகளையும் உண்டாக்கக் கூடும்.
  • பகலில் தூங்குதல் கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் ஏற்படும்.
  • உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும்படி பலமாக நடப்பது, வாகனங்களில் பயணம் செய்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவற்றை செய்யக் கூடாது.
  • காபி மற்றும் தேநீர் போன்றவற்றை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் ரத்தசோகை மற்றும் வேறு சில உபாதைகளை உண்டாக்கக் கூடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker