ஆரோக்கியம்புதியவை

உங்களுக்கு கழுத்து வலி ரொம்ப அதிகமாக இருக்கா? இதனை போக்க இந்த பயிற்சியை செய்து பாருங்க

இன்றைய காலத்தில் பலருக்கும் தொல்லை தரும் வலியாக கழுத்துவலி உள்ளது.

கழுத்துவலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவதுதான். அப்போது கழுத்தை அவற்றால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்துவலி.

ஒருவருக்கு கழுத்து வலி வந்தால், அது மிகுந்த எரிச்சலை உண்டாக்குவதோடு, எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் செய்துவிடும். மேலும் கழுத்து வலியானது தலையை அசைக்க முடியாமல் செய்து, ஒருவருக்கு கவனச்சிதறலை அதிகம் உண்டாக்கும்.

இதனை தடுக்க ஒரு சில உடற்பயிற்சிகள் உள்ளன. அதில் ஒன்றான டேபிள்டாப் நிலை அல்லது மர்ஜரி ஆசனம் எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

 • முதலில் உடலை டேபிள்டாப் நிலை அல்லது மர்ஜரி ஆசன நிலைக்கு கொண்டு வரவும். கை விரல்களை தரையில் விரித்து, அதில் உள்ளங்கைகளை தரையில் வைத்து உடலை பேலன்ஸ் செய்யவும்.
 • முன்னங்ககைகளை லேசாக தரையில் பதிக்க வேண்டும். கை மற்றும் கால் விரல்களை தரையில் பதித்து உடலை அப்படியே மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.
 • முன்னங்கைகள், விரல்கள் மற்றும் பாதங்களை தரையில் நன்கு அழுத்தி,இடுப்புப்பகுதியை மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.
 • தண்டுவட பகுதியை நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • இடுப்புப்பகுதிகளுக்கு இடையில், கால்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டைவிரல்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும்.
 • கால்களில் ஏற்படும் ஸ்ட்ரெச்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, கால்விரல்களை, தரையில் வைத்து நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 • கால்களை நேராக வைத்துக் கொண்டோ அல்லது முழங்கால்களை சற்றே வளைத்தோ உடலின் பின்பகுதியை, பிளாட் ஆக வைத்து்கொள்ள முயல வேண்டும்.
 • தலை மற்றும் கழுத்து பகுதிகள் சுதந்திரமாக அசையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முன்னந்தலை, தரையை தொடுமாறு இருக்க வேண்டும்.
 • இந்த நிலையில், சுவாசத்தை 2 முதல் 6 வினாடிகள் வரை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 • முழங்கால்களை மெதுவாக வளைத்து, இடுப்புப்பகுதியை பழைய நிலைக்கு மெதுவாக கொண்டு வந்து இந்த நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.
 • பலாசனா நிலைக்கு வந்து சுவாசத்தை வெளியே விட்டு, பின் அமைதி நிலைக்கு திரும்பவும்.
நன்மைகள்
 • நமது மார்பகம் மற்றும் பின்பகுதிகள் வலு அடைகின்றன.
 • முதுகு தண்டுவடம் வலிமை பெறுகிறது.
 • தொடை எலும்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.
 • உடலின் மேற்புற பாகங்களுக்கு நல்ல வலு அளிக்கிறது.
 • நரம்பு மண்டல இயக்கத்தை அதிகரிக்கிறது.
முக்கிய குறிப்பு

கைகளில் நாட்பட்ட வலி இருப்பவர்கள், தோள் மற்றும் பின்பகுதியில் காயங்கள் கொண்டவர்கள் மற்றும் வீக்கம் கொண்டவர்கள், இந்த ஆசனத்தை செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker