புதியவைவீடு-தோட்டம்

மொத்த வீடு பராமரிப்புக்கும் பேக்கிங் சோடா போதும் , அது எவ்ளோ பொருளை சுத்தம் செய்யுது பாருங்க!

ஒரு பொருள் பல பயன் என்பதில் பேக்கிங் சோடாவுக்கு தனி இடம் உண்டு. ஏனெனில் பேக்கிங் சோடா வீடு பராமரிப்பில் பல விஷயங்களுக்கு பயன்படுகிறது. இதை கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

சமையல் சோடா ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இவற்றை அத்தனை பராமரிப்புகளுக்கும் பயன்படுத்தலாம். இல்லத்தரசிகள் வீட்டை சுத்தம் செய்ய அதிகம் திணறுவார்கள். சரியான முறையில் சரியான் பொருள்களை கொண்டு சுத்தம் செய்தால் எப்போதும் பளிச் பளிச் தான். அப்படி எதற்கெல்லாம் இதை பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்வோம். முக்கியமாக இல்லத்தரசிகள் இதை தெரிந்துகொள்வது நல்லது.

​ஃப்ரிட்ஜ்ஜிலிருந்து வெளிப்படும் நாற்றம்

வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருள்களையும் குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்து வைத்தால் பொருள்கள் கெடாமல் தரமாக இருக்கும். குறிப்பாக மின்சாதன பொருள்களை சரியான முறையில் பராமரித்தால் நிச்சயம் அவை நீண்ட நாட்கள் வரை பழுதாகாமல் இருக்கும்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்வது அவசியம். உணவு பொருள்கள் நீண்ட நாட்கள் வைத்திருப்பது, உணவுகள் சிந்தியிருப்பது, அழுக்குகள் என எல்லாமாய் சேர்ந்து ஃப்ரிட்ஜ்ஜில் நாற்றத்தை உண்டாக்க செய்யும். இதை சுத்தம் செய்தாலும் ஃப்ரிட்ஜ்ஜிலிருந்து துர்நாற்றம் வெளியேறும்.

பேக்கிங் சோடாவை சிறு கிண்ணத்தில் வைத்து ஃப்ரிட்ஜ்ஜின் பின்புறம் வைத்தால் நாளடைவில் துர்நாற்றம் நீங்கும்.

​ஏர் ஃப்ரெஷ்னர்

அறைகளில் நறுமணம் இருக்க ஊதவத்திகளை ஏற்றி வைப்பது வழக்கம். இப்போது ரூம் ஸ்ப்ரே பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் ரூம் ஸ்ப்ரேக்களை தவிர்த்துவிடுவது நல்லது. ஆஸ்துமா நோயாளிகள் வீட்டில் இருந்தால் ரும் ஸ்ப்ரேக்களில் இருக்கும் வேதிப்பொருள்கள் பாதிப்பை அல்லது ஒவ்வாமையை உண்டாக்க செய்யலாம்.

அறைகளில் வரும் வாடையை நீக்க பேக்கிங் சோடா உதவும். இது துர்நாற்றத்தை உண்டாக்கும் மோசமான துகள்களை எதிர்த்து நாற்றத்தை வெளியேற்றுகிறது.

ஒரு சிறிய ஜாடியில் மூன்றில் ஒரு பங்கு பேக்கிங் சோடா அதனுடன் 10 முதல் 15 சொட்டுகள் எசென்ஷியல் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு நாடாவை சேர்த்து விடவும். வாசனை மங்கும் போது அந்த ஜாரை குலுக்கிவிட்டால் போதுமானது.

​துணியை வெண்மையாக்கலாம்

பேக்கிங் சோடா என்பது துணிகளை வெண்மையாக்கவும் செய்யும். கறைபடிந்த துணிகளை செலவில்லாமல் வெளியேற்ற எளிமையான வழி பேக்கிங் சோடா பயன்படுத்துவது.

பேக்கிங் சோடா காரமானது. இது கரையக்கூடிய உப்பு அழுக்கு மற்றும் கறைகளை அகற்ற செய்கிறது. அழுக்கு கறைபடிந்த துணிகளை வெறும் நீரில் நனைத்து பேக்கிங் சோடா கலந்த நீரில் 20 நிமிடங்கள் ஊறவிடவும். இது கறைகளில் இருக்கும் அமிலங்களை வெளியேற்ற செய்கிறது.

துணி பவுடருடன் ( துணிகளின் அளவுக்கேற்ப ) கால் கப் அளவு சேர்த்து ஊறவிடவும். வழக்கமாக பயன்படுத்தும் சோப்பு அளவை குறைத்து பயன்படுத்தினால் கறைகள் நீங்கிவிடும்.

​சமையலறையை சுத்தம் செய்யும்

பேக்கிங் சோடா பன்முகத்தன்மை வாய்ந்தது. இடுஹ் சிறந்த சமையலறை சுத்திகரிப்பாளரும் கூட. சமையலறையில் இருக்கும் கடினமான கறைகளை இவை நீக்குகிறது. அழுகிய காய்கறிகள், அழுகிய உணவுகள் என குப்பை கூடையில் இருப்பவை அறை முழுக்க உண்டாகும் நாற்றத்தை போக்க சமையல் சோடா உதவும்.

சிறிதளவு தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து சிறிய அளவு தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யுங்கள். இதை கறைகள் இருக்கும் பகுதியில் தடவி துணியால் அழுத்தி துடைத்து எடுக்கவும்.

இதை கொண்டு அடுப்புகள், காஃபி கறைகள், பளிங்கு கற்கள், சிம்னி அடுப்பு, மைக்ரோவேவ், வெள்ளி பொருள்கள் என அனைத்தையும் சுத்தம் செய்யலாம்.

​கழிவுத்தொட்டி வாடைகளை போக்க செய்கிறது

வீட்டில் கழிவுப்பொருள்கள் சேகரிக்கும் சமையலறை குப்பை தொட்டியில் அவ்வபோது குப்பைகளை அகற்றினாலும் அதன் வாடை எல்லா இடங்களிலும் பரவவே செய்யும்.

இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போன்று குப்பையை வைத்திருந்தால் வீடு முழுக்கவே நாற்றம் அடிக்க செய்யும். இந்த துர்நாற்றங்கள் பெரும்பாலும் அமிலத்தன்மை கொண்டவை . ஆனால் இந்த வாடையை போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இது துர்நாற்ற வீசும் அமில மூலக்கூறூகளுடன் தொடர்பு கொண்டு அதை வெளியேற்றுகிறது.

குப்பைத்தொட்டி மற்றும் நீர்த்தொட்டி அடியில் பேக்கிங் சோடாவை பரப்புவதன் மூலம் குப்பை வாசனை 70 % குறையக்கூடும் என்கிறார்கள்.

​கம்பள கறைகளை அகற்ற செய்கிறது

பேக்கிங் சோடா மற்றூம் வினிகர் இரண்டும் சேர்ந்த கலவை கடினமான கறைகளை நீக்க கூடியது. இவை இரண்டும் இணைந்து கார்போனிக் அமிலம் என்னும் கலவையை உருவாக்குகின்றன. இது பொருள்களை சுத்தம் செய்வதில் பொதுவான மூலப்பொருள் ஆகும். இது எதிர்வினையை உண்டாக்கி கடினமான கறைகளை உடைக்க செய்யும்.

கனமான கம்பளியாக இருந்தாலும் முதலில் அதன் மேல் வினிகரை ஸ்ப்ரே செய்து விடவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து பேக்கிங் சோடாவை பிரஷ் உதவியுடன் முழுக்க பரப்பி விடவும். பிறகு சுத்தமான துணியால் அந்த இடத்தை துடைத்துவிட்டால் பளிச்சென்று இருக்கும்.

​குளியலறை க்ளீனர்

சமையலறை போன்றே குளியலறையையும் சுத்தம் செய்ய பேக்கிங் சோடா உதவுகிறது. அன்றாடம் பயன்படுத்தும் குளியலறை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

செலவு குறைந்த பளிச் என்று வைக்க கூடிய பேக்கிங் சோடா குளியலறையை வெண்மையாக்க செய்கிறது. இது குளியலறையில் இருக்கும் கிருமிகளை வெளியேற்ற செய்கிறது. இது வெளியில் வாங்கும் க்ளீனர்களை காட்டிலும் குறைவான செயல்திறன் கொண்டது.

கழிப்பறைகள், குளியல் தொட்டி, குளியலறை சுவர்களில் பேக்கிங் சோடாவை நீரில் கரைத்து பேஸ்ட் பதத்துக்கு ஆக்கி விடவும். இதை அதன் மேல் தடவி பிறகு துணியால் துடைத்து எடுத்தால் பளிச் தோற்றம் கிடைக்கும்.

​வெள்ளி பொருள்களுக்கு மெருகூட்ட செய்கிறது

வெள்ளி பொருள்கள் பளிச் என்று வைக்க பேக்கிங் சோடா உதவுகிறது வெள்ளி பொருள்களை சுத்தம் செய்ய அலுமினிய பேக்கிங் பான் அல்லது தகடு சேர்த்து நீரை கொதிக்க வைத்து 1 டீஸ்பூன் சமையல் சோடா அரை கப் வெள்ளை வினிகர் சேர்த்து கொதிக்கும் நீரில் ஊற்றி எடுக்கவும்.

பிறகு வெள்ளியை பேக்கிங் சோடா சேர்த்து ஊறவிடவும். 30 விநாடிகளுக்குள் வெள்ளிப்பாத்திரங்களை அகற்றலாம். இந்த கலவையில் வெள்ளி அலுமினிய பான் மற்றும் சமையல் சோடாவுடன் எதிர்வினை புரிகிறது. இது வெள்ளிப்பொருள்களில் கெடுதலை உண்டாக்கும் மஞ்சள் எச்சத்தை வெளியேற்றுகிறது.

​அடிப்பிடித்த பாத்திரம்

பாத்திரத்தின் அடியில் கரிப்பிடித்திருந்தால் பேக்கிங் சோடாவை தூவி கரி இருக்கும் வரை நீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். இது இலேசாக கொதி வரும் போதே இறக்கி தேய்த்தால் கறைகள் நீங்கும். இந்தகொதித்த நீரை கொண்டு பாத்திரம் அடி வரை சுத்தம் செய்யலாம்.

​காலணிகளில் துர்நாற்றம் போக்க

ஷீக்களில் வரும் வாடை அதிக துர்நாற்றமிக்கது. இது சங்கடமான ஒரு நிலையும் கூட. துர்நாற்றத்தை போக்க பேக்கிங் சோடா சிறந்த தீர்வாக இருக்கும்.

இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை எடுத்து மெல்லிய துணிகளில் ஊற்றி அதை மெல்லிய சரமாக்கி துணியில் துடைத்து அதை ஷூக்களின் உள்ளே வைத்தெடுக்கவும். ஷூவை போடும் போது பேக்கிங் சோடா நனைத்த துணியை எடுத்து விட்டு போடலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker