ஆரோக்கியம்புதியவை

நடைப்பயிற்சியின் போது இந்த தவறை கண்டிப்பாக செய்யாதீங்க…

பெரும்பாலும் நாம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது செய்ய வேண்டியவை. செய்யக்கூடாதவை போன்றவற்றை கவனிக்கத் தவறுகிறோம். அவை என்னவென்று பார்க்கலாம்.

நடை, நம்மை பல நோய்களிலிருந்து காக்கும் ஒரு செலவில்லா எளிய வழி. கம்ப்யூட்டர்களின் ஆதிக்கம் சூழ்ந்த இந்த காலகட்டத்தில் உடல் உழைப்பு என்றாலே உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் தான் என்று மாறிவிட்டது. சிறிதளவு வியர்த்து விட்டாலும் நாம் பதற்றத்துக்ளுள்ளாகிறோம். அதனாலேயே ஏசியை நோக்கி நகர்ந்து அதன் பரிசாகப் பல்வேறு விதமான நோய்களை பெறுகிறோம்.

தினமும் காலை 7 மணிக்குள் மாலை 6 மணிக்கு மேல் என ஏதேனும் ஒரு வேளை மட்டும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதுமானது. பெரும்பாலும் நாம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது செய்ய வேண்டியவை. செய்யக்கூடாதவை போன்றவற்றை கவனிக்கத் தவறுகிறோம்.

செய்ய வேண்டியவை

இயற்கையான சூழலில் தினமும் கட்டாயம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

நடைப்பயிற்சியின் போது அதற்கு .ஏற்றவாறு காலுறை காலணிகள் மற்றும் உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். மேலும் நாலைந்து பேர் என ஒரு குழுவாக சேர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

கைகளை பக்கவாட்டில் முன்னும் பின்னுமாக அசைத்து நடக்க வேண்டும்.

கால் விரலில் அழுத்தம் கொடுத்து காலை தூக்கி மீண்டும் தரையில் காலை வைக்கும் போது குதிகாலை பயன்படுத்த வேணடும்.

நடக்கும் போது வயிறு மற்றும் இடுப்பு பகுதியை நகர்த்தி உடல் நேராக இருக்கும் படி வைத்து நடக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை

வெயில் அதிகம் இருக்கும் நேரத்தில் நடக்கக்கூடாது

நடக்கும் போது குனிந்து நடக்காமல் நிமிர்ந்து தான் நடக்க வேண்டும்.

வாயால் மூச்சி விடாமல் மூக்கால் மூச்சி விட வேண்டும்.

கைகளில் எதையும் தூக்கி கொண்டோ , பிடித்து கொண்டோ அழுத்திக்கொண்டோ நடைப்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது.

மெதுவாக வேகமாக என மாற்றி மாற்றி நடைப்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது.

நடைப்பயிற்சி முடிந்த பிறகு உடனடியாக உடற்பயிற்சியோ அல்லது கடினமான வேலைகளையோ செய்யக்கூடாது. இப்படி தொடர்ந்து நம் உடலுக்கு அழுத்தம் கொடுத்தால் இதயத்துடிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

நன்மைகள்

தொடர்ந்து 30 நிமிடங்கள் தொடர்ந்து நடப்பதால் 120 முதல் 170 கலோரிகள் குறையும். உடலின் நெகிழ்வுத்தன்மை மேம்படும். மூட்டு மற்றும் தலையை வலுப்படுத்தும் உடல் சம நிலை அடைய உதவுவதுடன் நடையைச்சீர்படுத்தும். உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும். பசியைத் தூண்டும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker