ஆரோக்கியம்புதியவை
குடல் சார்ந்த பிரச்சினைகளை போக்கனுமா? அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்க
இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கையில் குடல் சார்ந்த பிரச்சினைகள் சாதாரணமாகிவிட்டது.
கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகள், பாஸ்ட் புட் வகைகள் போன்றவற்றால் பலர் வயிற்று கோளாறு, அல்சர், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.
இதுபோன்ற பிரச்சினையை போக்க ஒரு சில உடற்பயிற்சிகள்,யோகசப்பயிற்சிகள் உதவி புரிகின்றது.
அந்தவகையில் குடல் சார்ந்த பிரச்சினையை போக்கும் ஒரு சூப்பரான யோகப்பயிற்சி ஒன்றை பற்றி பார்ப்போம்.
இந்த ஆசனம் “பவன முக்தாசனம்” என்றழைக்கப்படுகின்றது. இந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
- தரையில் ஒரு விரிப்பை விரித்து அதில் நேராக படுத்துக் கொள்ளவும். வலது காலை மடக்கி, மடக்கிய காலில் உங்களது இரு கைகளையும் பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது உங்களது வயிற்றை நோக்கி அழுத்த வேண்டும்.
- இடதுகாலை மடிக்க வேண்டாம். இடது கால் தரையில் நேராக இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள்.
- அடுத்ததாக உங்களது வலது கால் முட்டியை முகவாய் கட்டையை நோக்கி உயர்த்திக் கொள்ளுங்கள்.
- இப்பொழுது மூச்சை அடைக்கி 10 முதல் 15 வினாடிகள் கழித்து விடவும். பின் அந்த விரிப்பின் மீது படுத்துக் கொள்ளவும்.
- இப்போது இதேபோல் இடதுகாலில் மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.
- இதனால் நமக்கு குடல் சார்ந்த பிரச்சினைகள், வாயுக் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் சீராகிறது.
- வயிற்றுப் பகுதியில் உள்ள அதிக தசைகள் குறைவதற்கு இது வழிவகுக்கிறது. மாரடைப்பு, இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது.