அழகு..அழகு..புதியவை

முகத்தில் உள்ள முதுமை சுருக்கங்களைப் போக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகள்!

முதுமை என்பது ஒரு இயற்கையான மற்றும் தவிர்க்க முடியாத செயல்முறையாகும். எவராலும் முதுமையைத் தடுத்து நிறுத்த முடியாது. சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், கருமையான புள்ளிகள் போன்றவை முதுமையின் அறிகுறிகளாகும். ஒருவரது வயதை விட இளமையாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு சரியான பராமரிப்புக்களைத் தவறாமல் சருமத்திற்கு கொடுத்து வர வேண்டும்.

இளமையாக காட்சியளிப்பதற்கு உலகம் முழுவதும் பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும், இயற்கை வழிகளின் மூலமும் சருமத்தில் தோன்றும் முதுமைக்கான அறிகுறிகளைப் போக்கலாம். சருமம் நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமானால், அதற்கு ஒருசில இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தால் போதும். கீழே சருமத்தில் உள்ள முதுமைக்கான அறிகுறிகளைக் குறைக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு போன்ற செயல்பட்டு, சருமத்தில் காணப்படும் முதுமைப் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களில் மாயங்களைச் செய்கின்றன. அதற்கு சிறிது நற்பதமான எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிஎலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு போன்ற செயல்பட்டு, சருமத்தில் காணப்படும் முதுமைப் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களில் மாயங்களைச் செய்கின்றன. அதற்கு சிறிது நற்பதமான எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், ஒரு நல்ல வித்தியாசத்தைக் காணலாம். னால், ஒரு நல்ல வித்தியாசத்தைக் காணலாம்.

தேங்காய் பால்

தேங்காயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. அதோடு, இதற்கு சருமத்தை மென்மையாகவும், நீர்ச்சத்தை வழங்கி பொலிவோடும் வைத்துக் கொள்ளும் திறன் உள்ளது. அதற்கு துருவிய தேங்காயை அரைத்து பால் எடுத்து, அந்த பாலை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் உள்ள இனிமையான பண்புகள், கண்களுக்கு கீழ் உள்ள வீக்கம் மற்றும் கருவளையங்களைப் போக்க உதவும். அதற்கு வெள்ளரக்காயை அரைத்து அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி, சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுவதால் சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும். அதோடு திறந்துள்ள சருமத்துளைகள் இறுக்கமடையவும் உதவும். அதற்கு ரோஸ்வாட்டரை கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாற்றோடு சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் முகத்தில் தினமும் இரவு தூங்கும் முன் தடவி வந்தால், மறுநாள் முகம் நன்கு புத்துணர்சியுடன் பொலிவோடும் இருக்கும்.

பப்பாளி

வைட்டமின் ஏ அதிகம் கொண்ட பப்பாளி, கண்களுக்கு மட்டும் நல்லதல்ல, இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், சருமத்தில் மாயங்களைப் புரியக்கூடியவை. பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப்பொருள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தின் நெகிவுத்தன்மையையும், அழகையும் அதிகரித்து காட்சியளிக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker