ஆரோக்கியம்புதியவை

விக்கல், கொட்டாவி, தும்மல்… உடல் கொடுக்கும் சிக்னல்

விக்கல், கொட்டாவி, தும்மல்... உடல் கொடுக்கும் சிக்னல்

விக்கல், தும்மல், கொட்டாவி… போன்றவை நமக்கு ஏன் ஏற்படுகிறது என தெரியுமா…? இவை அனைத்துமே, உடல் நமக்கு கொடுக்கும் சிக்னல்கள். எதற்காக இத்தகைய சிக்னல்களை, உடல் நமக்கு கொடுக்கிறது என தெரிந்து கொள்வோமா..?
கொட்டாவி

மிகவும் சலிப்பு தட்டிய வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, நாள் முழுக்க ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும்போது நம்மை அறியாமலேயே கொட்டாவி வந்துவிடும். மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை அனுப்புவதற்காகத்தான் உடல் இப்படிச் செய்கிறது என்பதில் உண்மையில்லை. மூளை அதிகம் சூடாகும்போது கொட்டாவி வரும். இதன் மூலமாக, மூளை தன்னை இயல்புநிலைக்கு மாற்றிக்கொள்கிறது. வெப்ப மாற்றங்கள் நிகழும் பகுதியில் இருந்தாலும், கொட்டாவி வரும்.

விக்கல்

நீங்கள் மிக வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என்பதை உணர்த்தத்தான் உடல் விக்கலை வெளிப்படுத்துகிறது. அதேபோல அளவிற்கு அதிகமாக சாப்பிடுதல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற காரணங்களாலும், விக்கல் ஏற்படும்.

திடீர் விழிப்பு

நன்றாக தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று அதிர்ச்சி அடைந்த மாதிரி சத்தத்தை எழுப்பியபடி எழுகிறீர்கள். இப்படி உங்களுக்கு நடந்திருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! மூளை, நம்மை மரணத்தில் இருந்து காப்பாற்றத்தான் இப்படிச் செய்திருக்கிறது என்கிறது, ஆராய்ச்சி முடிவுகள். நாம் தூங்கும்போது நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு போன்றவை குறைந்திருக்கும். தசைகளின் இயக்கம் குறைவாகி, அவை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். இதன் காரணமாக நாம் இறந்துவிட்டதாக உடல் மூளைக்கு சிக்னல் அனுப்பும். நாம் இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளும் மூளை சுதாரித்துக்கொண்டு நம்மை எழுப்பிவிடும்.

விரல்களில் தோல் சுருக்கம்!

தண்ணீரில் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கையை நனைத்து வைத்துவிட்டு எடுத்துப் பார்த்தால், விரல்களில் உள்ள தோல் சுருங்கிப்போயிருக்கும். ஆறு, ஏரி அல்லது நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் ஆட்டம் போட்டுவிட்டு வெளியே வரும்போது, இந்தச் சுருக்கங்களை நீங்கள் கவனித்து இருக்கலாம். ‘கை விரல்களின் அழகு போய்விட்டதே..!’ என்று வருத்தப்பட்டு இருக்கலாம். ஈரமான கையால் ஒரு பொருளைத் தொடும்போது, அது நழுவிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தச் சுருக்கங்களை உடல் உருவாக்குவதால்தான் எந்தப் பொருளையும் நன்றாக பற்றிப் பிடித்துக்கொள்ள நம்மால் முடிகிறது.

சோம்பல் முறித்தல்!

இரவில் நாம் தூங்கியவுடன் நமது தசைகள் ஓய்வு எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். காலையில் சோம்பல் முறிப்பதன் மூலம் உடல் இந்த தசைகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது. சோர்வாக இருக்கும்போதும் நாம் சோம்பல் முறிப்போம். இதனால் தசைகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, அவை சுறுசுறுப்பாகும்.

உடல்தான் தனக்குள் எவ்வளவு அதிசயங்களை ஒளித்து வைத்திருக்கிறது!

தும்மல்

பாக்டீரியா, அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்கள், தூசுக்கள் போன்றவை மூக்குக்குள் செல்லும்போது நம்மை அறியாமலேயே தும்மல் வந்துவிடும். பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை ஆரம்பத்திலேயே ஒழித்துக்கட்டிவிட உடல் செய்யும் நல்ல நடவடிக்கை இது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker