மிக்ஸியில் சட்னி அரைக்கிறீர்களா? அம்மிக்கல்லில் அரைப்பதன் நன்மைகள் தெரியுமா..?
உடல் ஆரோக்கியம்.. அம்மிக்கல்லில் தேங்காய் உள்ளிட்டவற்றை வைத்து அரைத்து குழம்பு வைத்தால் நல்ல மனமாகவும், சுவையாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வேலைப்பளுவின் காரணமாக மின்சாதன பொருட்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். அம்மிக்கல், ஆட்டுக்கல், திருவை உள்ளிட்ட பழங்கால வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் தான் அந்த காலத்தில் வீடு கட்டும் போது அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்டவற்றை வீட்டினுள் பதித்து வைத்திருந்தனர். உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதாக் நினைத்தால் இவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்
மின்சார கருவிகள் மூலம் சட்னி அல்லது மசாலாப் பொருள்களை அரைப்பதன் மூலம், அவை இயற்கையான சுவையைத் தக்கவைத்துக்கொள்வதில்லை. மின்னணு இயந்திரங்களின் உதவியுடன் மசாலாவை அரைப்பது பெரும்பாலும் மசாலாப் பொருட்களின் சுவையை மாற்றுகிறது. சமையலுக்கு எலக்ட்ரானிக் சாதனங்களை நாம் பயன்படுத்துவதால் குறிப்பாக சட்னி, விழுதுகள், மசாலாக்களை அரைப்பதற்கு நாம் மிக்ஸி போன்றவற்றை பயன்படுத்துவதால் அதில் இருந்து வெப்பம் உருவாகி உணவின் சுவையை மாற்றுவது மட்டுமல்லாது நம் உடலுக்கும் தீங்கினை ஏற்படுத்துகிறது. இது பலரும் அறிந்த ஒன்றுதான் இருந்தாலும் இன்றைய வேகமான உலகத்தில் மக்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.
இயற்கை கருவிகளின் பயன்கள். .நீங்கள் ஆட்டுக்கல் அல்லது அம்மிக்கல்லில் அரைத்தால் அது ஒரு வகையான உடற்பயிற்சியை உங்களுக்கு அளிக்கிறது. இதன் விளைவு என்னவென்றால், உங்கள் கொழுப்பு படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது, இது உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறப்பான பலனை தருகிறது. ஆனால் இதற்காக, நீங்கள் ஒவ்வொரு நாளும் இந்த கல்லில் ஏதாவது அரைக்க வேண்டும் என்று பொருள் அல்ல. வீட்டின் தேவைக்கேற்ப இவற்றை பயன்படுத்தினாலே போதுமானது.
செலவு மிச்சம்..சட்னி அல்லது பயறு வகைகளை அரைக்க கற்கலை பயன்படுத்தினால், போதும் அதற்கு மின்சாரம் தேவையில்லை. அதேவேளையில் மிக்சி, கிரைண்டர்களை நாம் பயன்படுத்தினால் அது அதிக மின்சாரத்தை விழுங்குகிறது. எனவே பொருளாதார ரீதியிலும் நமக்கு பல சேமிப்புகளை வழங்குகிறது. சில நேரங்களில் நமக்கு பவர்கட் சிக்கல் இருந்தாலும் மிக்ஸி நம்மை கைவிட்டுவிடும். ஆனால் இதே ஆட்டுகல் இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
சட்னியை டிபன்களுடன் மட்டும் எடுத்துக் கொள்ளாமல் மூன்று வேளை உணவிற்கும் கூட நாம் பயன்படுத்தலாம். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு விதமான சட்னியை செய்து சாப்பிடுவது உண்மையில் உடலுக்கு நன்மையளிக்கும்.