வெதுவெதுப்பான தண்ணீர் :
வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யும் குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிற. இது ஒரு துணி துணியிலிருந்து மிகவும் பிடிவாதமான கறைகளை அகற்ற துணை புரிகிறது. இருப்பினும், நீர் அதிக சூடாக இல்லை என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும், இல்லையெனில், அது உங்கள் ஆடையின் நிறத்தை மங்கலாக்கி விடும். வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு உங்கள் உடையில் உள்ள கறைகளை நீக்க உங்களுக்கு மற்றொரு நபரின் உதவி தேவைப்படலாம்.”
முதலில் உங்கள் கறை படிந்த துணியை இருபுறமும் நன்கு பிடித்து கொள்ளுங்கள். ஒரு கோப்பையில் வெதுவெதுப்பான நீரை எடுத்து கறை மீது நேரடியாக ஊற்றவும். தொடர்ந்து 10-15 விநாடிகளுக்கு மெதுவாக ஊற்றிக் கொண்டே இருங்கள், பின்னர் சலவை சோப்பு கொண்டு துவையுங்கள். கறை மங்கிவிடும் வரை சோப்பு தேய்க்கவும். கடைசியாக, சாதாரண தண்ணீரில் அலசுங்கள், கறை மறைந்துவிடும்.
வினிகர் :
வினிகர் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி உங்கள் துணிகளில் படிந்திருக்கும் கறைகளை அகற்றவும் உதவுகிறது. உங்கள் தினசரி சலவைகளில் ஒரு டீஸ்பூன் வினிகரை ஊற்றினால், உடைகள் மென்மையாகிவிடும், மேலும் கடுமையான கறைகள், மோசமான வாசனைகள் கூட இல்லாமல் போகும். தேயிலை கறைகளை அகற்ற, வினிகரை எப்படி பயன்படுத்த வேண்டும் என இங்கு தெரிந்துகொள்வோம்.
ஒரு ஸ்ப்ரே பாட்டில் ½ கப் வினிகர் மற்றும் ½ கப் தண்ணீர் எடுத்து நன்கு கலக்கவும். பின்னர் இந்த கலவையை கறை மீது நேரடியாக தெளிக்கவும். 5-7 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு மீண்டும் தெளிக்கவும். இப்போது உங்கள் துணியை தண்ணீரில் நனைத்து, நன்கு தேய்த்து அலசவும். தேநீர் அல்லது காபி கறைகள் சுத்தமாக நீங்கி விடுவதை நீங்கள் காண்பீர்கள்.
பேக்கிங் சோடா :
பேக்கிங் சோடா ஒரு இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. உண்மையில், உங்கள் துணிகளை பிரகாசமாக்குவதற்கும், அதை மென்மையாக்குவதற்கும் உங்கள் வழக்கமான சலவையில் பேக்கிங் சோடாவை சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. பிடிவாதமான தேநீர் கறையில் இருந்து விடுபட பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இருப்பினும், மென்மையான துணிகளில் இதை முயற்சிக்க வேண்டாம்.
இதற்கு முதலில் அரை வாளி தண்ணீரை மிதமாக சூடு செய்து கொள்ளவும். இந்த தண்ணீரில் உங்கள் கறை துணியை 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதில் 1 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை நேரடியாக கறை மீது போடவும். கறையை அகற்ற துணியை நன்கு இரண்டு கைகளால் தேய்க்கவும். பின்னர் அந்த துணியை சாதாரண தண்ணீரில் அலசி விடுங்கள் கறை மறைந்துவிடும்.
பற்பசை :
பற்பசை கடினமான கறைகளை கூட அகற்றிவிடும். பற்பசை உங்கள் பற்களின் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை நீக்குவது போலவே, உங்கள் துணிகளில் படிந்துள்ள டீ கறைகளையும் நீக்கும். கடினமான மேற்பரப்புகளில் இருந்து பிடிவாதமான கறைகளை அகற்றும். இதற்கு ஒரு பழைய பிரஷை எடுத்து அதில் பற்பசையை வைக்கவும். இப்போது உங்கள் துணியை தரையில் விரித்து அதில் இருக்கும் கறையின் மீதி பிரஷ் கொண்டு தேய்க்கவும், இதனை 5-8 நிமிடங்கள் அப்படியே ஊற விடுங்கள். பின்னர் ஒரு சோப்பு கொண்டு துவைத்து சுத்தமான தண்ணீரில் அலசி உலரவிடுங்கள்.
எலுமிச்சை சாறு அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு :
எலுமிச்சை சாறு போன்ற சுலபமான ப்ளீச் பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறை கறையில் தேய்த்து வாஷ் செய்யவும். எலுமிச்சை பழச்சாறுக்கு பதிலாக, வழக்கமான 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்தலாம், இது ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயமாக இருக்கும், இல்லையென்றால் கடையில் கிடைக்கும். இந்த முறையை தண்ணீரை சூடாக்கி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.