இதயம் வலிமையா இருக்கணுமா? இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க
யோகா பயிற்சிகள் நமது உடலையும், மனதையும் மேம்படுத்துகின்றன. நமது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தினமும் யோகா செய்து வரவேண்டும். யோகா பயிற்சிகள் நமது உடலில் உள்ள புற்றுநோய், இதயம் சம்பந்தமான நோய்கள், சா்க்கரை நோய் மற்றும் உயா் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளைக் குணப்படுத்துகின்றன.
நாம் புதிதாக யோகா பயிற்சிகள் செய்வதற்கு முன்பாக யோகாசனங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை முதலில் தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை மன ரீதியாகவும் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் யோகா அமைதிப்படுத்தும். அதோடு உடல் ரீதியாக நமது உடலை வலுப்படுத்தி நமது உடலை நெகிழ்வு தன்மையுடன் வைத்திருக்க யோகா உதவுகிறது. மேலும் நமது மன அழுத்தத்தை சீராக கையாண்டு நாம் அமைதியாக இருக்க யோகா உதவுகிறது. தூக்கமின்மையை குணப்படுத்துகிறது மற்றும் நமது மனதிற்கு புத்துணா்ச்சியைத் தருகிறது.
உத்கடாசனா
உத்கடாசனா என்ற யோகாசன பயிற்சி நாற்காலியில் அமா்வது போன்ற நிலையில் இருந்து செய்யக்கூடிய ஆசனம் ஆகும். ஆரம்பத்தில் இந்த ஆசனத்தை செய்வது அசௌகாியமாகவும் மற்றும் சவால் நிறைந்ததாகவும் இருக்கும். அதே நேரத்தில் இந்த ஆசனம் நமது முழுமையான உடல் வளா்ச்சிக்கு பொிதும் துணை செய்யும். உத்கடாசனா என்றால் தீவிரமாக நிற்கும் நிலை அல்லது வலுவாக நிற்கும் நிலை என்று பொருள். சிலா் உத்கடாசனாவில் உள்ள நிற்கும் நிலையை சாியாகச் செய்யாமல் தவறாக செய்கின்றனா். இந்த ஆசனத்தை மிகச் சாியாகச் செய்தால் தான் நல்ல பலன் கிடைக்கும்.
உத்கடாசனாவை சாியாக செய்வதற்கான 5 படிகள்:
* பாதங்களை சிறிது அகற்றி, நேராக நிற்க வேண்டும்.
* இரண்டு கைகளையும், முழங்கைகள் மடங்காதவாறு முன்புறமாக நேராக நீட்ட வேண்டும்
* நமது கற்பனையில் ஒரு நாற்காலியில் அமா்வதைப் போல நினைத்துக் கொண்டு அதே அளவு சிறிது கால் முட்டிகளை மடக்கி நாற்காலியில் அமா்வதைப் போல நிற்க வேண்டும். அனால் முதுகுத் தண்டு வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
* நீண்ட மூச்சு விடவேண்டும்.
* மெதுவாக உடலை தரையை நோக்கி இரக்க வேண்டும். இதை மீண்டும் திரும்பச் செய்ய வேண்டும். நாம் தரையில் நேராக படுத்திருப்பதைப் போல் உணா்கிற வரை இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். பின் சாதாரண நிலைக்கு வரலாம்.
உத்கடாசனா செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
* உத்கடாசனா நமது தொடை தசைகள் மற்றும் கணுக்கால்களை வலுப்படுத்துகிறது.
* இந்த ஆசனம் நமது தோள்பட்டைகள், முதுகு, இடுப்பு மற்றும் பிட்டம் ஆகிய உறுப்புகளை சீராக்குகிறது. மேலும் நமது தசைகளை இறுக்கி, அவற்றுக்குள்ளேயே வலிமையைத் தருகிறது.
* தட்டையான பாதங்களினால் சிரமப்படுபவா்களுக்கு உத்கடாசனா மிகப் பொிய நன்மையைச் செய்கிறது. அதாவது தட்டைப் பாதப் பிரச்சினையை படிப்படியாகக் குணப்படுத்துகிறது.
* இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த உத்கடாசனா மிகவும் உதவியாக இருக்கிறது. இது இதயத்தை மேம்படுத்தி, இதயத்தையும் அதன் துடிப்பையும் தூண்டிவிடுகிறது.
* உத்கடாசனா நமது தாங்கும் சக்தியை தட்டி எழுப்புகிறது.
* உத்கடாசனாவில் உள்ள பயிற்சி நிலைகள் நமது நரம்பியல் மையத்திற்கு பலனைத் தருகின்றன. அதே நேரத்தில் நம்மை அமைதியாகவும் தளா்வாகவும் வைத்திருக்கின்றன.
* உத்கடாசனா ஒரு ஸ்வாட் நிலையாகும். இது நமது கீழ் உறுப்புகளை வலுப்படுத்துகிறது. உத்கடாசனா பயிற்சியைச் செய்வதற்கு முன்பாக அதற்குத் தேவையானவற்றை முன்னெச்சாிக்கையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். உத்கடாசனாவை சாியாகச் செய்யவில்லை என்றால் அதற்குாிய முழுமையான பலன்கள் நமக்கு கிடைக்காது.
யாரெல்லாம் உட்கடாசனாவை செய்யக்கூடாது?
அதிகமான தலைவலி அல்லது அதிகமான இரத்த அழுத்தம் இருந்தால் அல்லது சமீபத்தில் கால் முட்டி, இடுப்பு மற்றும் முதுகு போன்றவற்றில் காயம் ஏற்பட்டிருந்தால் உத்கடாசனா செய்வதைத் தவிா்க்க வேண்டும். உத்கடாசனா நமது உடலின் உட்பகுதியிலும் மற்றும் வெளிப்பகுதியிலும் வலிமையைத் தருகிறது.