இரவில் தூக்கமில்லையா? படுக்கறதுக்கு முன்னாடி வெந்நீர்ல இப்படி 10 நிமிஷம் காலை வைங்க… சுகமா தூக்கம் வரும்…
தூக்கமின்மையின் காரணமாக தூக்கம் வராமல் இரவில் அவதிப்படுகிறீர்களா? இந்த அருமையான உத்தியை கவனியுங்கள். உறங்க செல்வதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் உங்கள் கால்களை நனைத்து நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்.
தூக்கமில்லையேல், ஊக்கமில்லை” என்பார்கள். எவ்வளவு பெரிய பயில்வானாக இருந்தாலும் சரியான தூக்கமில்லையென்றால் எல்லாம் வீண்.பெரும்பாலும் எல்லா உறக்கம் தரும் வழிமுறைகளையும் முயற்சித்து பார்த்து இருப்பீர்கள். மாத்திரைகள் முதல் யோகாசனம் வரை தூங்குவதற்கான உங்கள் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைகின்றன.ஆந்தை போல இரவு முழுவதும் நீங்கள் தூங்காமல் இருக்க மன அழுத்தம், உடல் வலி ஒத்துக்கொள்ளாத அறை வெப்பநிலை போன்றவை மற்றும் இன்னும் பல பொதுவான காரணங்கள் உள்ளன. வெதுவெதுப்பான நீரில் உங்கள் கால்களை நனைத்து எளிதில் நிம்மதியான தூக்கத்தை பெறுங்கள்.
நிம்மதியான தூக்கத்திற்கு
ஆந்தை போல இரவு முழுவதும் நீங்கள் தூங்காமல் இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. மன அழுத்தம், உடல் வலி ஒத்துக்கொள்ளாத அறை வெப்பநிலை போன்றவை மற்றும் இன்னும் பல பொதுவான காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் எல்லா உறக்கம் தரும் வழிமுறைகளையும் முயற்சித்து பார்த்து இருப்பீர்கள்.
மாத்திரைகள் முதல் யோகாசனம் வரை தூங்குவதற்கான உங்கள் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைகின்றன. அப்படியே உங்களை எந்த விதத்திலும் பாதிக்காத இதையும் செய்து விடுங்கள். உறக்கம் வர உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் நனையச் செய்யுங்கள். உங்கள் குழப்பம் புரிகிறது. கவலைப்படாதீர்கள் நாங்கள் விளையாடவில்லை. இது உறக்கமளிக்கும் சிறந்த வழிமுறை.
காரணங்கள்
எப்போதாவது தூக்கம் வராமல் இருந்தால் அது பரவாயில்லை. ஆனால் தொடர்ச்சியான நடவடிக்கையாக இருந்தால் அது கவலைப் படக்கூடிய விஷயம். தூக்கமின்மை வேறு சில பாதிப்புகளையும் கூட ஏற்படுத்துகிறது.
1) செயல்திறன் குறைதல்
2)சோர்வு
3)மன அழுத்தம்
4)உணர்வு மற்றும் மன ரீதியாக பாதிப்பு
5) தோல் பாதிப்பு
எனவே தான் ஆரோக்கியமாக இருக்க குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் மிக அவசியம். ஆனால் தூக்கம் வரவில்லை என்றால் என்ன செய்யலாம்? அப்போதுதான் இந்த எளிய வழிமுறை உங்களுக்கு உதவக்கூடும்.
கால்களை வெந்நீரில் வைப்பது
1) ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். அதன் வெப்பநிலை 40 டிகிரி-க்கு மிகாமல் இருத்தல் அவசியம். அதை கணக்கிட தெர்மாமீட்டரை பயன்படுத்தலாம்.
2)அதில் 2 டீஸ்பூன் எப்சம் உப்பை சேர்க்கவும் .உங்களுக்கு தேவைப்பட்டால் ஓரிரு துளிகள் அத்தியாவசிய எண்ணெயையும் சேர்த்துக் கொள்ளலாம்.
3) அந்த வெதுவெதுப்பான நீரில் கால்களை 10லிருந்து 15 நிமிடங்கள் வரை நனைக்கவும்.
4) உலர்ந்த துண்டின் மூலம் உங்கள் கால்களை துடைத்துக் கொள்ளவும்.
5)பின் ஏதாவது உங்களுக்கு விருப்பமான மாய்ஸ்சுரைசரை( ஈரப்பத கிரீம்) தடவிக் கொண்டு, படுக்கையில் தாவி உறக்கத்தில் மூழ்குங்கள்.
உங்கள் உடலை இளைப்பாறச் செய்யும்!
நாள் முழுவதும் ஹீல்ஸ் உள்ள காலணிகளை அணிந்திருந்தால், மிகுந்த கால்வலி ஏற்படும். அந்த வலியே இரவில் தூக்கத்தை பிடுங்கிவிடும். ஆனால் இளஞ்சூடான நீரில் உங்கள் கால்களை சிறிது மூழ்க வைக்கும்போது அது தசைகளின் இறுக்கத்தை தளர்த்தி அமைதியாகவும், வசதியாகவும் உணர வைக்கும்.
உடல் வெப்பநிலையை சீர்படுத்த
குளிர்காலங்களில் எவ்வளவுதான் காலுறைகளை பயன்படுத்தி கால்களை மூடி வைத்தாலும், குளிரில் அவை உறைந்து போகின்றன. அதோடு உறங்குவது கடினமான காரியமாகிறது. ஆனால் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் எந்நேரமும் நீங்கள் நிம்மதியாக உறங்கி போகலாம்.
உடலின் சக்தியை பராமரிக்க
தசைகள் இறுகி கடினமாகும் போது இரத்த ஓட்டமும் பாதிக்கப்படுகிறது. ஆனால் இவ்வழிமுறையின் மூலம் அவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் போது இரத்த ஓட்டமும் சீராகிறது. இது உங்கள் உடலின் ஆற்றலை சீராக பராமரிக்க உதவுகிறது. இதனால் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு ஆரோக்கியமாகிறது. இது உங்கள் மனநிலையை அமைதியாக்கி சீரான உறக்கத்தை கொடுக்கிறது.
எனவே அடுத்த முறை தூக்கமில்லாமல் நீங்கள் அவதிப்படும் போது உங்கள் கால்களை இளஞ்சூடான நீரில் மூழ்கச் செய்து , இளம்பிள்ளை போல் தூக்கத்தில் மூழ்கிப் போங்கள்.