மருத்துவம்

மாதவிடாய் காலத்தில் பெண்களின் சுகாதாரம்..

நாப்கின்களில் பல பிராண்டுகள் இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. தங்களுக்கு பொருத்தமான நாப்கின்களை தேர்வு செய்வதற்கும் ஆர்வம் காட்டுவதில்லை.

சங்கிராணி, மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்களை நாப்கின் டெலிவரி செய்யும் கவர்களில் அச்சிட்டும் வழங்கி வருகிறார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள்:

*மாதவிடாய் காலத்தில் பழங்கள், காய்கறிகளை வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுங்கள். அது உடல் ஆற்றல் திறனை அதிகரிக்க வழிவகை செய்யும். *உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம். அதனால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது வலியை குறைக்க உதவும். இடுப்பு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

*டார்க் சாக்லேட்டையும் சாப்பிடலாம். அது பசியை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதோடு மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

*மாதவிடாய் காலத்தில் பேரீச்சம் பழத்தையும் தவறாமல் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் இரும்பு சத்து மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடு செய்ய உதவும்.

*மாதவிடாய் காலத்தில் உடல் சுத்தத்தை பராமரிப்பதும் முக்கியம். நாப்கின்களை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். 4 மணி நேரத்திற்குள் மாற்றுவது நல்லது. மாதவிடாய் கப்கள் உபயோகித்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும்.

*மாதவிடாயின்போது தினமும் இருமுறை குளிப்பதும் நல்லது. அது வலியை குறைக்கும். மன நிலையையும் மேம்படுத்த வழிவகை செய்யும்.

*வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை மாதவிடாய் காலத்திலும் தவறாமல் பின் தொடர வேண்டும். உடல் இயக்கம் செயல்பாட்டில் இல்லாமல் போனால் வலி அதிகரிக்கும். குறைந்தபட்சம் நடைப்பயிற்சி மேற்கொள்வது வலியை குறைக்கும். மனதிற்கும் இதமளிக்கும்.

* இரவில் தூங்க செல்லும்போது நாப்கின்களை அப்புறப்படுத்தக்கூடாது. துரித உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட சிப்ஸ்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அவைகளை தவிர்ப்பது உடலில் திரவத்தின் இருப்பை அதிகரிக்க செய்யும்.

* காபின் கலந்த பானங்களையும் தவிர்க்க வேண்டும். அதனை அதிகம் பருகுவது வலியை அதிகரிக்க செய்துவிடும்.

*நாப்கின்களை உபயோகித்த பிறகு அதனை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். கழிவறையில் நாப்கினை போடுவதை தவிர்க்க வேண்டும்.

*உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தால் வலி அதிகரிக்கும். வலி அதிகம் இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker