உலக நடப்புகள்புதியவை

கும்பம் செல்லும் சுக்கிரனால் பல பிரச்சனைகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

நவகிரகங்களில் அழகு, காதல், படைப்பாற்றல் ஆகியவற்றை நிர்வகிக்கும் சுக்கிரன்/வெள்ளி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02:12 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழையவுள்ளது.

கிரகங்களின் இட மாற்றம் பொதுவாக ஒவ்வொரு ராசியிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கும்ப ராசிக்குள் நுழையவுள்ள சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 2 ஆவது மற்றும் 4 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த இடமாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு செழுமையையும் செழிப்பையும் தரும். கூட்டாண்மை வியாபாரம் செயப்வர்கள் இக்காலத்தில் நல்ல பண வரவுடன் இருப்பார்கள். கலை, படைப்பாற்றல் மற்றும் ஃபேஷன் தொடர்பான தொழில்களில் உள்ளவர்கள் இக்காலத்தில் செழிக்க பல நல்ல வாய்ப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளது. சொல்லப்போனால், இந்த பெயர்ச்சி காலம் கடந்த பெயர்ச்சி காலத்தை விட சிறப்பானதாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். உங்கள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்கள், புதிய உறவைப் பெறக்கூடும். திருமணமானவர்களுக்கு, குழந்தைகளின் வடிவத்தில் சந்தோஷம் கிடைக்கக்கூடும். ஒட்டுமொத்தத்தில், இந்த சுக்கிர இடமாற்றம் ஆசைகளை நிறைவேற்றும் ஒரு நல்ல காலம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இந்த சுக்கிர இடமாற்றம் கலவையான மற்றும் சுவாரஸ்யமான முடிவுகளைத் தர வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, இக்காலத்தில் உங்களின் முயற்சிகளை விரைவுப்படுத்த வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உற்பத்தித் திறனுக்கும், செயல்திறனுக்கும் இடையூறாக இருக்கும் சோம்பல் மற்றும் சகிப்புத்தன்மை உங்களை நோக்கி வரக்கூடும். இதனால் இக்காலத்தில் எதிரிகள் உங்களிடம் ஆதிக்கம் செலுத்தலாம். வணிகர்கள், தங்களிடம் உள்ளதை வைத்து வேலை செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள். இக்காலத்தில் எந்தவிதமான கடன்களையும் வாங்குவது சரியானது அல்ல. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, குடும்ப வாழ்க்கை மன நிறைவு, மகிழ்ச்சி மற்றும் பேரின்பம் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும், இக்காலத்தில் உங்கள் துணையின் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கக்கூடும். எனவே இக்காலத்தில் உங்கள் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். இந்த ராசிக்கார மாணவர்கள், தங்களின் செயல்திறனை அதிகரிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் சிறப்பாக இருக்க சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி, யோகா, தியானத்தில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், உடல் பருமன், நீரிழிவு போன்ற பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு பலனைப் பெறுவீர்கள். உங்கள் எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் உயர் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறச் செய்யும். நீண்ட காலமாக தங்கள் வேலைகளில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையைத் தேடுவோருக்கு அவர்கள் விரும்பும் பணியிடத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு தொடர்பான தொழில் செய்பவர்கள், நல்ல லாபத்தைப் பெறலாம். உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு, பிடித்த பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும். பல மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடும் செல்லலாம். திருமணமானவர்கள், இக்காலத்தில் வாழ்க்கைத் துணையிடமிருந்து முழு ஆதரவையும் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் சில தரமான நேரத்தை உங்கள் துணையுடன் கழிக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் உறவை வலுப்படுத்த உதவும்.

கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் திடீர் லாபங்களைப் பெறக்கூடும். அதே சமயம் வசதிகள் மற்றும் ஆடம்பரங்களைச் சேர்க்கும் விஷயங்களுக்கும் பணத்தை செலவழிப்பீர்கள். அதே சமயம் உங்கள் பணத்தை சரியான வழியில் முதலீடு செய்ய முயலுங்கள். திருமணமானவர்கள், தங்கள் மனைவியிடமிருந்து லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பும் நபர்களின் கனவுகளும் நனவாகும். மாணவர்கள் படிப்பில் வழக்கத்தை விட சாகமான முடிவைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்கள் மற்றும் அடிவயிறு தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த காலத்தில் எந்தவிதமான காரமான அல்லது வறுத்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். கண்களைப் பொறுத்தவரை, சரியான தூக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள், தொலைக்காட்சி மற்றும் மொபைலில் குறைந்த நேரத்தை செலவிடுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு, திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள், தங்கள் உறவுகளில் பேரின்பம், நல்லிணக்கம் போன்றவற்றை அனுபவிக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் துணையுடனான நட்புறவு செழிக்கும். சிலர் தங்களின் உறவை மேம்படுத்துவது பற்றி யோசிப்பார்கள். தொழில் ரீதியாக, உங்கள் வேலையில் குறைவான உந்துதல் காரணமாக, உங்களின் உற்பத்தித் திறன் மற்றும் செயல்திறன் குறையும். இதனால் உங்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுவது கடினமாக இருக்கலாம். ஆனால் பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். வேலையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து உங்கள் உயர் அதிகாரிகளிடம் வெளிப்படையாக கூறுங்கள். இது உங்களைப் புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவும். கூட்டு வணிகம் செய்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், உடன்பிறப்புகள், உறவினர்கள் மற்றும் வாழ்க்கைத் துணை ஆகியவர்களுடன் சேர்ந்து செய்வது சாதகமான முடிவுகளைத் தரும். முக்கியமாக இக்காலத்தில் தேவையில்லாத எவ்விதமான பயணங்களையும் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். சிம்ம ராசிக்கார மாணவர்கள், முயற்சிகள் மற்றும் கடின உழைப்பின் மூலம் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சருமம், ஹார்மோன்கள் மற்றும் முதுகு தொடர்பான சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்காதீர்கள்.

கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செல்லும் சுக்கிரனால், இந்த ராசிக்காரர்கள் பல தடைகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உறவினர்களுடன் சில மோதல்களிலும், வாக்குவாதங்களிலும் ஈடுபடக்கூடும். இது உங்கள் மன அமைதியைப் பாதிக்கலாம். இருப்பினும், இக்காலத்தில் உங்கள் தந்தையின் வேலை அல்லது வணிகத்தில் பெரும் முன்னேற்றத்தைக் காணக்கூடும். இது உங்களுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் கூட்டாளரிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது அவர்களுடனான உங்கள் உறவை பாதிக்கக்கூடும். தொழிலைப் பொறுத்தவரை, சேவைத் துறைகளில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இருப்பினும், உயர் அதிகாரிகளிடமிருந்து சரியான அங்கீகாரம் மற்றும் பாராட்டு இல்லாதது, பணியிடத்தில் கிளர்ச்சியையும், விரக்தியையும் ஏற்படுத்தும். இதனால் அவர்களுடன் சண்டையும் ஏற்படலாம். எனவே அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். வேலையில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். நிதி ரீதியாக, எந்தவொரு நிதி திட்டம், சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம் அல்ல. மேலும், உங்கள் செலவுகளுக்கும் வருமானத்திற்கும் இடையில் சரியான சமநிலையை பராமரிப்பது மிக முக்கியமானது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, இந்த காலத்தில் உங்கள் உணவுப் பழக்கம் மற்றும் உணவு முறைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். பணிபுரிபவர்கள், உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள அல்லது பணியிடத்தில் தேவையான அனுபவத்தைப் பெற நல்ல வாய்ப்புக்கள் கிட்டும். வணிகர்களுக்கு, இது பயனுள்ள காலம். வணிக கூட்டாண்மை செய்பவர்கள், இந்த காலத்தில் நல்ல பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தை தொடர்பான துறைகளில் பணிபுரிபவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, புதிய உறவுகளுக்குள் நுழைய மிகச்சிறந்த காலமாகும். ஏனெனில் இது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், நீண்ட காலத்திற்கு நீடிக்கும். ஏற்கனவே உறவுகளில் இருப்பவர்கள் உற்சாகமாகவும், துடிப்பாகவும் இருப்பார்கள், உங்கள் துணை உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்வார். இது உங்கள் உறவில் ஸ்திரத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க உதவும். மாணவர்கள் இக்காலத்தில் தங்களின் கவனம் மற்றும் செறிவு அதிகரிப்பதைக் காண்பார்கள். மேலும், பத்திரிகை, கலை, ஊடகம், எழுத்து போன்ற படைப்புத் துறைகளில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் நன்மை பயக்கும் முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வீட்டுச் சூழல் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் இருக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இக்காலத்தில் உங்களுக்கும், உங்கள் தாய்க்கும் இடையிலான உறவு பலப்படும். வீட்டை அலங்கரிக்க அதிக ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை லாபத்தைப் பெறுவார். இது உங்களுக்கு ஆறுதலையும், ஆடம்பரத்தையும் அதிகரிக்கும். புதிய வாகனங்கள், கேஜெட்டுகள், நிலம் அல்லது சொத்து வாங்குவதற்கும் நீங்கள் பணம் செலவிடலாம். இருப்பினும், அதிக செலவிலும் ஈடுபடும் போது ஜாக்கிரதையாக இருங்கள். காதலிப்பவர்கள் தங்கள் உறவில் நம்பிக்கை அதிகரிப்பதைக் காண்பார்கள். திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு, நல்ல வரன் வரக்கூடும். தொழில் ரீதியாக, உங்களின் நிலை மேம்படும். இக்காலம் வணிகர்களுக்கு சாதகமானது. அவர்கள் வணிகத்தில் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையைக் காண வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இது நல்ல முடிவுகளைத் தருவதாக இருக்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் பண நன்மைகளையும், வளமான தொடர்புகளையும் தரக்கூடும். இக்காலத்தில் உங்கள் இளைய உடன்பிறப்புகளுடனான உங்கள் உறவு மேம்படும். மேலும் அவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவார்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒரு சிறந்த நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் ரீதியாக, இக்காலம் வேலை தொடர்பான விஷயத்தில் சிறந்த முடிவுகளைத் தரும். வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் விரும்பிய முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களின் காதல் வாழ்க்கை இக்காலத்தில் மலரப் போகிறது. நீங்கள் உங்கள் காதலியை பரிசுகள், மதிப்புமிக்க பொருட்களுடன் பொழிவீர்கள். திருமணமான தம்பதியினரும் தங்கள் உறவில் மகிழ்ச்சியை அனுபவிக்க வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

மகரம்

மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இக்காலத்தில் உங்களின் திரட்டப்பட்ட செல்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக, இது ஒரு சிறந்த காலமாகும். உங்களுக்கு விரும்பிய இடத்தில் வேலை வாய்ப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. உயர் பதவி அல்லது சம்பள உயர்வுக்கு காத்திருப்பவர்கள், இக்காலத்தில் அதைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் இக்காலத்தில் வளர்ச்சியைக் காண வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் முடிக்கப்படாத உங்களின் பணிகளும் முடிக்கப்படும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீங்கள் உங்கள் துணையுடன் சிறிது நேரத்தை செலவிட வேண்டும். உங்கள் தந்தையின் முன்னேற்றம் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும். உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் காதலிக்கு கேஜெட்டுகள், மதிப்புமிக்க பொருட்கள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை நீங்கள் வாங்கிக் கொடுக்க வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் ஆடம்பரம் மற்றும் சுவையான உணவுகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். எனவே உங்கள் செலவுகளில் கவனமாக இருங்கள். குடும்பத்தின் முழு ஆதரவாலும், ஒத்துழைப்பாலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக, மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த ஒரு சிறந்த காலமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் நல்ல முடிவுகளையும், நல்ல மாற்றங்களையும் தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றங்களைப் பெற உதவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து முழு ஒத்துழைப்பு, அங்கீகாரம் மற்றும் ஆதரவும் பெற வாய்ப்புள்ளது. தொழில்முறை அல்லது வணிக பயணங்கள் சிறந்த முடிவுகளைத் தரக்கூடும். நிதி ரீதியாக, இக்காலத்தில் உங்கள் வருமானம் மற்றும் செல்வத்தில் உயர்வு காணப்படும். சிலர் நிலம் வாங்குவதன் மூலம் நல்ல லாபம் பெறலாம். பலருக்கு தாயிடமிருந்து நன்மைகள் மற்றும் ஆதாயங்கள் கிட்டும். உங்கள் பக்கம் அதிர்ஷ்டம் இருப்பதால், இக்காலம் முதலீடுகளுக்கு மிகச்சிறந்த காலமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்களின் மென்மையான மற்றும் ஏற்றுக்கொள்ளும் அணுகுமுறை உங்கள் துணையுடன் நெருங்க உதவும். இந்த காலகட்டத்தில் உங்கள் ஆடம்பரங்கள் மற்றும் வசதிகளில் அதிகரிப்பு காணப்படும். ஒட்டுமொத்தமாக, இக்காலம் நீங்கள் மன அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை அடைவதைக் காணும் காலமாக இருக்கும்.

மீனம்

மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். எனவே தேவையில்லாத செலவுகளைத் தவிர்த்திடுங்கள். அதோடு, உங்கள் உடன்பிறப்புகளும், பொருளாதார மற்றும் பண ஆதரவுக்காக உங்களிடம் வரக்கூடும். இது உங்களின் பொருளாதார சுமையை அதிகரிக்கும். உங்கள் உடன்பிறப்புகள் வேலை தொடர்பான விஷயங்களுக்காக வெளிநாடு செல்லலாம். மேலும் இக்காலத்தில் தேவையில்லாத பயணங்களும் வரக்கூடும். இதனால் பணம் மற்றும் ஆற்றல் இரண்டும் வீணாகலாம். சிலரது உடல்நலம் பலவீனமாக இருக்கலாம். எனவே உங்கள் உடல்நலத்தில் சரியான கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம் போன்றவற்றை செய்யுங்கள் மற்றும் உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். தொழில் ரீதியாக, இக்காலத்தில் எவ்விதமான முதலீடுகளையும் செய்வதற்கு முன்னும் தந்தை அல்லது அனுபவமுள்ளவர்களிடம் ஆலோசித்த பிறகு செய்யுங்கள். இல்லையெனில், நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமானவர்களுக்கு ரகசிய காதல் இருந்தால் அவற்றைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், திருமண வாழ்வில் சில சிக்கல்களை சந்திக்கக்கூடும். திருமணமாகாதவர்கள், தாங்கள் விரும்பும் ஒருவருக்காக தங்கள் உணர்ச்சிகளையும் ஏக்கங்களையும் வெளிப்படுத்த தயங்கக்கூடும். இதனால் தனிமை மற்றும் விரக்தி ஏற்படலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker