ஆரோக்கியம்புதியவை

ஒழுங்கற்ற மாதவிடாயால் அவதியா? அதனை சீராக்க இந்த பயிற்சிகளை செய்திடுங்க

இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் பிரச்சனை இருக்கிறது.

நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி, ஹார்மோனின் சமமற்ற நிலை என்று இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

இந்த ஹார்மோன்களின் சமமற்ற நிலை தான் உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகின்றது.

அதிலும் இதுபோன்ற பிரச்சனைகளை குணமாக்க மருந்துகள், உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் உதவி புரிகின்றது.

அந்தவகையில் தற்போது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்படும் பெண்கள் செய்ய வேண்டிய சில யோகாசனங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

அதோமுக சுவானாசனம்

பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் மாதவிடாய் நின்றுவிடும். இந்நிலையில், அவர்களுக்கு வியர்வை வெளியேறுவது தூக்கமின்மை, மன அழுத்த பிரச்சனை போன்றவை இருக்கும். இது எல்லாவற்றையும் அதோமுக சுவானாசனம் சரிசெய்யும்.

உஷ்டிராசனம்

ஒட்டக போஸ் என்று பிரபலமாக அழைக்கப்படும் உஷ்டிராசனம் ஒரு இடைநிலை நிலை பின்தங்கிய வளைவு ஆகும்.

உஷ்டிரா என்றால் சமஸ்கிருதத்தில் ஒட்டகம் என்று பொருள். இது இதயத்திற்கு தேவையான வலிமையை அதிகரிக்கும்.

பரத்வாஜாசனம்

பரத்வாஜாசனம் செய்வதால் உடலில் உள்ள செரிமான உள் உறுப்புகள் அதன் வேலையினை சரியான முறையில் செய்யத் துவங்கும்.

வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். இது அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தப்படும். அட்ரீனல் சுரப்பியை வேலை செய்ய வைக்கும். வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைக்கும் இந்த ஆசனம் ஏற்றது.

தனுரசன ஆசனம்

தனுரசனா அல்லது வில் போஸ் என்பது 12 அடிப்படை ஹத யோகங்களில் ஒன்றாகும். இது மூன்று முக்கிய பின்புற நீட்சி பயிற்சிகளில் ஒன்றாகும்.

இது முழு முதுகையும் வளைப்பதன் மூலம் ஒரு நல்ல நீட்டிப்பை அளிக்கிறது. இதனால் உடலின் பின்புறத்திற்கு வலிமையையும் அளிக்கிறது.

பரிவர்த திரிகோணாசனம்

இந்த ஆசனம் சிறுகுடல், கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள் போன்ற உள் உறுப்புகளின் வேலையை சமநிலைப்படுத்துகிறது.

ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker