ஆம்லெட் கறி செய்யத் தெரியுமா உங்களுக்கு..? எளிமையான ரெசிபி இதோ…
தேவையான பொருட்கள் :
முட்டை – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிதளவுஉப்பு – தே.அ
வெங்காயம் பேஸ்ட் :
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
தனியா – 1 tbsp
மிளகு – 2 tbsp
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பற்கள்
கொத்தமல்லி , புதினா – சிறிதளவு
தக்காளி – 1
தேங்காய் பேஸ்ட் அரைக்க :
தேங்காய் – 2 tbsp
கசகசா – 1 tbsp
தயிர் பேஸ்ட் செய்ய :
தயிர் – 1/2 கப்
மஞ்சள் – 1 tbsp
உப்பு – தே.அ
தாளிக்க :
எண்ணெய் – 2 tbsp
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 1
கருவேப்பிலை – சிறிதளவு
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
முதலில் முட்டையை ஆமெல்ட் போட வேண்டும். எனவே அதற்கு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு அடித்துக்கொண்டு பின் தோசைக்கல்லில் எண்ணெய் தடவில் ஆம்லெட் போட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது கடாய் வைத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் அரைத்த வெங்காயம் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு சுருங்கி பச்சை வாசனை போனதும் தேங்காய் பேஸ்டை கலந்து வதக்கவும்.
பின் தயிர் மிக்ஸிங்கை சேர்க்கவும். அடுத்ததாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். நன்கு 20 நிமிடங்கள் கொதித்து கெட்டியானதும் போட்டு வைத்துள்ள ஆம்லெட்டை துண்டு துண்டுகளாக வெட்டியோ அல்லது அப்படியோ உங்கள் விருப்பம் போல் போட்டு கலந்துவிட்டு கொத்தமல்லி தழை தூவி தட்டுபோட்டு மூடிவிடுங்கள்.
சிறிது நேரம் கழிந்து திறக்க ஆம்லெட் குழம்பில் ஊறி நல்ல ருசி கொடுக்கும். அவ்வளவுதான் ஆம்லெட் கறி தயார்.