ஆரோக்கியம்புதியவை

நீர் உடம்பா? என்ன ட்ரை பண்ணாலும் குறையலயா? எப்படி ஈஸியா குறைக்கலாம்னு பார்க்கலாம் வாங்க…

இங்கே பெரும்பாலான மக்களுக்கு உடல் எடை அதிகரிப்பதற்கு கொழுப்பு மட்டுமே காரணமாக இருப்பதில்லை. நீர்ச்சத்தால் ஏற்படும் எடையும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த எடிமா அதாவது நீர் தேக்க எடையை எப்படி குறைக்கலாம் அதற்கான காரணங்கள் இதோ உங்களுக்காக.

நம் உடலில் பெரும்பகுதி நீர்ச்சத்தால் ஆனது. கிட்டத்தட்ட உடலின் 60% நீர்ச்சத்தால் ஆனது. எனவே நம்முடைய உடல் எடையில் பாதி நீர்ச்சத்தால் ஏற்படுகிறது. இதுவே இந்த நீர்ச்சத்து அதிகமானால் என்ன நடக்கும். அதிகப்படியான தண்ணீரால் உங்க உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சாதாரணமாக கொழுப்பால் ஏற்படும் உடல் எடையை உங்களால் உடற்பயிற்சி செய்து குறைக்க முடியும். இப்படி அதிகப்படியான நீர்ச்சத்தால் ஏற்படும்

​நீர்ச்சத்து உடம்பு

உடல் எடையை எப்படி குறைப்பது. இந்த நீர்ச்சத்து தேக்கத்தை எடிமா என்று கூறுவர். சில சமயங்களில் இதனால் பாதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த நீர்ச்சத்து எடையை குறைக்க மருத்துவரை நாடிச் செல்வது நல்லது.

40, 50 அல்லது அதற்கு மேற்பட்ட உடல் நிறை குறியீட்டைக் கொண்ட ஒரு நபரின் நாளின் போக்கில் 20 பவுண்டுகள் எடை மாற்றம் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி நீர்ச்சத்து எடையேற்றம் ஏன் ஏற்படுகிறது அதற்கான காரணங்கள் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

​டயட் ஒரு முக்கிய காரணம்

2010 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நீர் உட்கொள்ளலில் 22% உணவில் இருந்து தான் வருகிறது. இருப்பினும் இது நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதை பொறுத்து மாறுபடும். கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக எடுத்துக் கொள்வது உடலில் நீரை தக்க வைக்க காரணமாகிறது. இன்சுலின் எதிர்ப்பும் இதை பாதிக்கிறது.

​உப்பு

உப்பு உணர்திறன் மிக்கது இதுவும் நீரின் எடையை அதிகரிக்கச் செய்கிறது. எனவே அதிகப்படியான உப்பை உணவில் சேர்ப்பவர்கள் நீர்ச்சத்து தேக்கத்தை பெறுகின்றனர்.

​ஹார்மோன் மாற்றங்கள்

சில ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் உடலில் நீர்ச்சத்து இருப்பு அளவை பாதிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டோஜென் அளவுகள் ஏற்ற இறக்கமாக இருப்பதால் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு நீர்ச்சத்தால் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.கர்ப்ப காலத்தில் கூட பெண்கள் நீர்ச்சத்து தேக்கத்தை பெறுகின்றனர். ஆனால் இது சாதாரணமானது.

​மருந்து பக்க விளைவுகள்

நாம் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் கூட தண்ணீரை பிடித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (என்எஸ்ஏஐடிகள்), ஆண்டிடிரஸண்ட்ஸ், இரத்த அழுத்த மெட்ஸ், ஆன்டிவைரல்கள் மற்றும் ஹார்மோன் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

​நீர்ச்சத்தால் ஏற்படும் எடையை குறைப்பது எப்படி

தண்ணீரை அகற்றுவதற்கான பெரும்பாலான சிகிச்சைகள் “டையூரிடிக்” பண்புகளைக் கொண்டு செய்யப்படுகிறது. சிறுநீரின் அளவை அதிகரிப்பதன் மூலம் அதிகப்படியான உடலில் இருந்து விடுபட டையூரிடிக்ஸ் உதவுகிறது. நீங்கள் டையூரிடிக் எடுத்துக் கொள்ளும் போது அடிக்கடி பாத்ரூம் செல்ல நேரிடும்.

இருப்பினும் இந்த டையூரிடிக் வகை மாத்திரைகள் விரைவான எடை இழப்புக்காக விளையாட்டு வீரர்கள் மற்றும் டயட்டர்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் பாதிப்பு அல்லது மரணம் கூட நேரிடலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

​நீர் எடையை குறைக்க சில டிப்ஸ்கள்

உங்க சோடியம் உட்கொள்ளலை குறைக்க வேண்டும். உணவில் உப்பு சேர்க்கும் அளவை குறையுங்கள். பதப்படுத்தப்பட்ட பொருட்கள், துரித உணவு மற்றும் உறைந்த உணவு போன்றவற்றில் மறைமுகமாக அதிக உப்பு சேர்க்கப்படுகிறது.

​போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்

நாம் ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தண்ணீர் குடித்து வந்தால் உடலில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றி விடலாம்.

​நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்

நீரால் நிரப்பப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள திட்டமிடுங்கள். கேண்டலூப், ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி, கீரை, முட்டைக்கோஸ், செலரி, அஸ்பாரகஸ் மற்றும் கீரை ஆகியவை ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இந்த உணவுகள் உங்களுக்கு இயற்கை டையூரிடிக்ஸ் ஆக செயல்படுகிறது.

​உடற்பயிற்சி

உங்க இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உடற்பயிற்சி சிறந்தது. உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருந்தால் தினசரி உடற்பயிற்சி நீர் எடையை குறைக்க உதவும். ஏனெனில் இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.

​ஆரோக்கியமான கார்ப்ஸ்யை தேர்ந்தெடுங்கள்

கார்போஹைட்ரேட் கட்டுப்பாடு பெரும்பாலும் விரைவான நீர் இழப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் நீங்கள் கார்ப்ஸை அதிகமாகக் குறைத்தால், உங்கள் ஆற்றல் அளவு வீழ்ச்சியடையும். எனவே சரியான அளவில் ஆரோக்கியமான கார்ப்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் கார்ப்ஸ் உணவிற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்வுசெய்து, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்க்கவும். இதன் மூலம் அதிக நீர் தேக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

​போதுமான தூக்கம்

சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது சிறுநீரக நரம்புகளை பாதிக்கலாம். இதனால் கூட சோடியம் மற்றும் நீர் சமநிலை ஒழுங்கற்று போகலாம். எனவே போதுமான தூக்கம் மேற்கொள்வது உங்க உடலில் நீரேற்றம் அளவை கட்டுப்படுத்துகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker