உறவுகள்புதியவை

அதிக உடல் எடை பாலியல் இன்பத்தை பாதிக்குமா? இன்பம் அதிகரிக்குமா? உண்மை என்ன?

அதீத உடல் எடையால் தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உடல் பருமன் உடையவர்களின் பாலியல் செயல்திறன் குறைவாக இருக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது. அதைப்பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

எல்லாருக்கும் பாலியல் பற்றிய நிறைய சந்தேகங்கள் இருக்கும். இதுவரை தம்பதிகளின் பாலியல் வாழ்க்கையை நிறைய காரணிகள் பாதிக்கின்றன என்பது தெரியும். அந்த வகையில் உடல் பருமன் கூட தம்பதிகளின் பாலியல் வாழ்க்கையை பாதிக்கிறது என ஆய்வு கூறுகிறது. அதிகபட்ச உடல் எடை உங்க பாலியல் செயல்திறனை பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா. அதிகபட்ச உடல் எடை இருப்பவர்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த முடியுமா இல்லையா இது குறித்து ஆராய்வோம்.

​உடல் எடைக்கும் உடலுறவுக்கும் என்ன தொடர்பு

உங்க எடை அதிகரிப்பு பாலியல் செயல்திறனை பல்வேறு வழிகளில் பாதிக்கிறது. ஆனால் இந்த விஷயம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபட்டவை. மெலிதான ஆண்களை விட அதிக எடை கொண்ட ஆண்களுக்கு உடலுறவு கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, பாலியல் செயலிழப்பு என்பது உடல் பருமனின் ஒரு பக்க விளைவு ஆகும்.

ஆண்கள் அதிக எடையைச் சுமக்கும்போது விறைப்புத்தன்மையால் பாதிக்கப்படலாம். இதன் விளைவாக கவலை மற்றும் மோசமான பாலியல் செயல்திறன் ஆகியவற்றால் இந்த ஆண்கள் பாதிக்கப்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். பருமனான ஆண்களும் ஆண்குறி நோயால் பாதிப்படைகின்றனர்.

​பெண்களுக்கு

பெண்களைப் பற்றிய பல ஆராய்ச்சி ஆய்வுகள் அதிக உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) பாலியல் பிரச்சினைகளுடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது. சில ஆய்வாளர்கள் இவை பிறப்புறுப்பு பகுதியில் மோசமான பாதிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். உடலுறுவில் சிரமம், பாலியல் திருப்தி குறைவதற்கும் உடல் பருமன் வழி வகுக்கிறது.

அதிக எடை கொண்டவர்கள் பாலியல் பிரச்சினைகளை சந்திப்பவராக இருந்தால், உங்கள் உடல் எடையானது உடலுறவை பாதிக்கிறது என்பதை உணர்ந்து உங்கள் மருத்துவரிடம் விவாதிக்கலாம்.

​பாலியல் வாழ்க்கை உடல் எடையை அதிகரிக்குமா

புரோலாக்டின் என்ற ஹார்மோனின் அதிகரிப்பு எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று இந்திய ஆராய்ச்சியாளர் கூறுகிறார். புரோலாக்டின் என்பது உங்கள் உடலால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன் ஆகும், மேலும் உடலுறவுக்குப் பிறகு உடனடியாக புரோலேக்ட்டின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஹார்மோன் அதிகரிப்பால் உடல் எடை அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஆராய்ச்சியும் நிரூபிக்கப்படவில்லை.

​உடல் எடையை குறைக்க பாலியல் உதவுமா

பாலியல் என்பது அன்பின் வெளிப்பாடு ஆகும். அன்பை உருவாக்குவது மிகவும் தீவிரமான உடல் செயல்பாடாகும். உடலுறவு ஒரு இன்பமான அனுபவம் என்பதால், உடல் எடையை குறைக்க முடியும். மேலும் உடலுறுவின் மூலம் நீங்கள் அதிகளவு கலோரியை குறைக்க முடியும். உடலுறவின் போது நீங்கள் சுமார் 85 முதல் 100 கலோரிகள் வரை எரிக்க முடியும் என்று ஆய்வு கூறுகிறது. ஆரோக்கியமான பாலியல் நல்லது என்றால் கூட நீங்கள் நினைக்கும் அளவுக்கு உடல் எடையை குறைக்க முடியாது.

​சிறந்த பாலியல் செயல்பாடு உடல் எடையை குறைக்குமா

அதிகரித்த ஆற்றல், மேம்பட்ட இயக்கம் மற்றும் உயர்ந்த சுயமரியாதை ஆகியவை உங்க பாலியல் வாழ்க்கையில் நன்மையை ஏற்படுத்தும். அதுவே உங்க எடை மனச்சோர்வை ஏற்படுத்தினால் எடையை குறைக்க முற்படுங்கள்.

அதே நேரத்தில் எடையை மாற்றுவது எந்த விதத்திலும் உங்க பாலியல் வாழ்க்கையை மாற்றும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே ஆரோக்கியமான எடையுடன் நல்வாழ்க்கையை மேம்படுத்தும் விஷயங்களை செய்து வாருங்கள் படுக்கையறை இன்பம் அதிகரிக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker