ஆரோக்கியம்புதியவைமருத்துவம்
நாள்பட்ட வெள்ளைப்படுதல் குறைபாட்டைத் தீர்க்கனுமா? இதை சாப்பிட்டாலே போதும்!
பெண்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று தான் வெள்ளைப்படுதல்.
இதனை வெட்டை என்றும் சொல்வார்கள். குறிப்பாக 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.
இது பிறப்புறுப்பின் தசைப் பகுதியில் இருந்தும், கருப்பையின் வாய் மற்றும் அதன் உட்சுவர்களில் இருந்தும் சிறிதளவு சுரந்து வருகிறது. இதன் சுரப்பு அதிகமாகி விடும் போது அதனை வெள்ளைப்படுதல் என்று கூறுகிறோம்.
சிலருக்கு இது நாள்ப்பட்ட பிரச்சினையாக மாறிவிடுகின்றது. அதனால் பலர் அவதிப்படுகின்றார்கள்.
அவ்வாறு அவதிப்படும் பெண்கள் இதுபோன்ற பிரச்சினையிலிருந்து கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சூரணத்தை செய்து சாப்பிட்டு வந்தாலே போதும். தற்போது அது என்ன என்பதை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- கீழாநெல்லி – 200 கிராம்
- கோவை இலை – 200 கிராம்
- அசோக மரப்பட்டை – 100 கிராம்
- நாவல் மரப் பட்டை. – 100 கிராம்
செய்முறை
- முதலில் கீழாநெல்லி மற்றும் கோவை இலை இரண்டையும் தேவையான அளவு எடுத்துச் சுத்தப்படுத்தி நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அசோக மரப்பட்டை மற்றும் நாவல் மரப் பட்டை இரண்டையும் மேற்கூறிய அளவு எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
- பின்பு உலர்ந்த கீழாநெல்லி மற்றும் கோவை இலையை தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். அசோக மரப் பட்டை மற்றும் நாவல் மரப் பட்டை தனித்தனியாக அரைத்துச் சலித்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
- பொடியாக வாங்குவதாக இருந்தால் அனைத்திலும் தலா 50 கிராம் வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தவும்.