தோள்பட்டை வலி வராமல் இருக்க இதை செய்யுங்கள்
வீரபத்ரா எனும் ஆசனத்தை தினமும் காலையில் தொடர்ச்சியாக செய்து வந்தால் கை, கால்கள் மற்றும் தோள்பட்டையின் வலிமை அதிகரிக்கும்.
வீரபத்ராசனத்தை செய்வது எப்படி?
விரிப்பில் கைகள் உடலுக்கு அருகிலும், கால்கள் ஒட்டியபடி நேராக நின்று இடது காலை முன் பக்கமாக வைத்து வலது பாதத்தைச் சற்று வெளிப்புறமாகத் திருப்பி, தடுமாற்றம் இல்லாமல் நின்று கொள்ள வேண்டும்.
இந்நிலையில் மூச்சை உள் இழுத்தபடியே இரு கைகளையும் முன்புறமாக உயர்த்தி, தலைக்கு மேல் கொண்டு சென்று, அதே நேரம் முன்புறம் உள்ள காலை மடக்கி, இரு கைகளையும் இணைக்க வேண்டும்.
ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியே விட்டபடி, கைகளை தோள்பட்டை அளவுக்குக் கொண்டு வர வேண்டும்.
இந்த நிலையில் இருந்து வீரபத்ராசனம் முதல் நிலைக்கு, மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே வர வேண்டும்.
அதே நிலையில் இருந்து மூச்சை வெளியே விட்டபடி, கைகளை முன்புறமாகக் கீழ் இறக்கி, இடது முட்டியை நேராக வைக்க வேண்டும்.
இதேபோல் ஆறு முறைகள் இடப்பக்கமும் மற்றும் வலப்பக்கம் செய்ய வேண்டும்.
பலன்கள்
- கால்கள் நன்கு வலுப்பெறும்.
- முதுகெலும்பு நன்கு பலம் பெறும்.
- மனம் ஒருநிலைப்படும்.
- கைகள், தோள்பட்டைகள் வலிமையாகும்.