தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

கர்ப்பகாலத்தில் அலட்சியம் செய்ய கூடாத அறிகுறிகளா டாக்டர்கள் இதைதான் சொல்றாங்க! தவிர்க்காம படியுங்க!

கர்ப்பகாலம். இது குறித்து எவ்வளவு கட்டுரைகள் படித்தாலும், அனுபவமிக்கவர்களின் வழிகாட்டுதல் இருந்தாலும் கர்ப்ப கால அறிகுறிகள் குறித்த அச்சம் இருக்கவே செய்யும்.
கர்ப்ப காலம் முழுக்க மூன்று ட்ரைமெஸ்டர்களாக மருத்துவர்கள் பிரித்திருக்கிறார்கள். முதல் மூன்று மாதங்கள் முதல் ட்ரைமெஸ்டர் என்றும் அடுத்த மூன்று மாதங்கள் இரண்டாம் ட்ரைமெஸ்டர் எனவும், மூன்றாவது மூன்று மாதங்கள் மூன்றாம் ட்ரைமெஸ்டர் என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு ட்ரைமெஸ்டர் காலங்களிலும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் உண்டாகும். இவை எல்லாம் தற்காலிகமானது. உடலில் ஹார்மோன் மாற்றங்களினால் உண்டாவது. அதே நேரம் அறிகுறிகள் தீவிரமாக தொடர்ந்து இருந்தால் அது வேறு ஏதேனும் உடல் ஆரோக்கிய குறைபாட்டின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அப்படியான சாதாரணமாக நாம் நினைக்க கூடிய சில அறிகுறிகள் அசாதாரணமாக இருக்கலாம். அது குறித்து பார்க்கலாம்.

​மயக்கமான நிலை

கருவுற்ற காலத்தில் மயக்கமாக இருப்பதை சில கர்ப்பிணிகள் உணர்கிறார்கள். கர்ப்ப ஹார்மோன் புரோஜெஸ்டிரான் ரத்த நாளங்களின் சுவர்களை தளர்த்துவதால் இந்நிலை உண்டாகலாம். அதனால் தான் ஆரம்ப கட்டத்தில் கரு உருவாகும் நேரத்தில் தலைச்சுற்றல் அறிகுறி இயல்பானது என்று சொல்வது.

சமயங்களில் போதுமான அளவு உட்கொள்ளாமல் இருப்பதாலும் இந்த நிலை உண்டாகலாம். ஆனால் நீங்கள் போதுமான ஆகாரம் எடுத்துகொண்ட பிறகும் மயக்கமான உணர்வை அடிக்கடி உணர்ந்தால் அது குறைந்த இரத்த அழுத்தத்துக்கான அறிகுறியாக இருக்கவும் வாய்ப்புண்டு. இது தொடர்ந்து நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது.

​அடிவயிறு வலி

அடி வயிறு வலி கருப்பையின் புறணியிலிருந்து கரு கருப்பைக்குள் வைக்கும் போது இலேசானதாக இருக்கும். கீழ் வயிற்றில் அடி வயிற்றின் இரூறமும் வலி தசைநார் போன்றவற்றால் நீட்டியிருக்கலாம். இது பொதுவானது ஆனால் தாங்கமுடியாத தீவிரமான வலியாக இருந்தால் அது எக்டோபிக் என்னும் பொய் கர்ப்பமாக இருக்கலாம்.

கருச்சிதைவு முன்கூட்டியே நிகழக்கூடியது. இது நார்த்திசுக்கட்டியை உடைத்து உள்ளுக்குள் ரத்தப்போக்கை உண்டாக்குகிறது. நஞ்சுக்கொடி சீர் குலைவும், நஞ்சுக்கொட் கருப்பை புறணியில் இருந்து ப்ரிக்கும் போது இந்த வலி கடுமையானதாக இருக்கும். தாங்க முடியாத வலியை அடி வயிற்றில் உணர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

​மேல் வயிறு வலி

இது அரிதானது. இந்த வலியானது குமட்டல் அல்லது வாந்தியுடன் இல்லாமல் கூர்மையான வலி ஒன்றை குறிப்பதாகும். இதற்கு கடுமையான அஜீரணக்கோளாறு, அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் என உணவு பழக்கத்தால் வரக்கூடியது.

இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் கர்ப்பத்தில் ஐந்தாம் மாத காலங்களாக இருந்தால் குறிப்பாக நடுவில் உள்ள வலியானது முன் எக்லாம்ப்ஸியாவை குறிக்கும். இது ஒரு தீவிரமான நிலை இதற்கு உடனடி சிகிச்சை தேவை என்பதால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

​கர்ப்பகால உதிரபோக்கு

கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இது இலேசானது, ரத்தபோக்கு பொதுவானது. இது தானாக சரியாகிவிடக்கூடியது. இதனால் கருவுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை. ஆனால் தொடர்ந்து உதிரபோக்கு இருந்தால் அது சில துளிகளாக இருந்தாலும் மருத்துவரை சந்திப்பது நல்லது. இது சாதாரண மாதவிடாய் காலத்திலிருந்து வேறுபட்டது. அதிலும் சில சமயங்களில் உதிரம் இருண்ட நிறத்தில் இருந்தால் கவனிக்க வேண்டியது.

கடுமையான ரத்தபோக்கு, வயிற்று வலி, பக்கவலி போன்றவை எக்டோபிக் கர்ப்பத்தின் அறிகுறியாக் இருக்கலாம். கருச்சிதைவின் அறிகுறியாக இருக்கலாம். திடீர் வலியற்ற ரத்தபோக்கு நஞ்சுகொடி பிரிவியா இருந்தாலும் உண்டாகலாம். கர்ப்பத்தின் இரண்டாம் காலங்களில் இருண்ட ரத்தபோக்கு நஞ்சுகொடி சீர்குலைவு அறிகுறியாக இருக்கலாம்.

37 வாரங்களுக்கு குறைவான இரத்த போக்கு கொண்டிருந்தால் அது முன்கூட்டிய பிரசவத்துக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கர்ப்பகாலம் முழுவதும் உதிரபோக்கு வந்தால் மருத்துவரை அணுகுவது தான் நல்லது.

வாந்தி

கர்ப்பாகாலத்தில் வாந்தி என்பது பொதுவானது தான். ஆனால் நாள் ஒன்றுக்கு மூன்று முறைக்கு மேல் வாந்தி எடுப்பது, சாப்பிட்டவுடன் வாந்தி எடுப்பது என எல்லாமே நீர் இழப்பை உண்டாக்க கூடும். கர்ப்பிணியை பலவீனப்படுத்தும். கடுமையான தொடர்ச்சியான வாந்தியாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலங்களிலும் வாந்தி உணர்வு இருந்தால் அது விலா எலும்புகளுக்கு கீழ் கடுமையான வலியை உண்டாக்கும். முகம், கை, கால்களில் வீக்கத்தை உண்டாக்கும். இதுவும் முன் எக்லாம்பிசா அறிகுறிகள் தான். சமயங்களில் வயிற்றுப்போக்குடன் கூடிய வாந்தி இருக்கும்.

காய்ச்சலோடு வாந்தியும் உங்கள் பக்கத்தில் முதுகில், பிறப்புறுப்பில் வலி இருந்தால் அது சிறுநீர் தொற்றுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

​உடல் வெப்பநிலை

உடல் வெப்பநிலை 102. 2 டிகிரிக்கு அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகு சிகிச்சை பெற்று கொள்வது அவசியம். தொற்றுக்கிருமிகளால் உங்கள் உடல் வெப்பநிலை அதிகரித்திருக்கலாம். தொடர்ந்து உடல் வெப்பநிலை அதிகமாகவே இருந்தால் அது குழந்தைக்கு தீங்கு விளைவிக்ககூடும். அதே நேரம் வெப்பநிலை காய்ச்சல் குறைய சுய வைத்தியமோ சுயமாக மாத்திரைகளோ தவிர்க்க வேண்டும்.

​முகம், கை, கால் வீக்கம்

இது கர்ப்பகாலத்தின் இறுதியில் வரக்கூடியது. முகம், கைகள் மற்றும் கண்களில் வீக்கமானது பொதுவானது. இது எடிமா என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது கவலைப்படக்கூடிய விஷயமல்ல. ஆனால் வீக்கம்தொடர்ந்து இருப்பது கடுமையாக இருப்பது அசாதாரணமானது. திடீரென்று தலைவலி வந்தால் அது பார்வையில் பிரச்சனைகளையும் கொண்டு வந்தால் அது முன் எக்லாம்ப்சியாவாக இருக்கலாம்.

தலைவலி மோசமானதாக தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தாண்டியும் இருந்து உடன் பார்வை தொந்தரவுகள் இருந்தாலும் அது முன் எக்லாம்பிசியா அறிகுறிகள் தான். இது இரண்டாம் ட்ரைமெஸ்டரின் இரண்டாம் மாதங்களின் இறுதியில் தொடங்குகிறது.

​ சிறுநீர் கழிக்கும் போது யோனி எரிச்சல்

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் என்பது யுடிஐ தொற்றாக இருக்கலாம். சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் , அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறிது சிறிதாக சிறுநீர் வெளியேறுவது, அடர்ந்த நிறத்தில் வருவது, குமட்டல், சோர்வு, குளிர் வியர்வை போன்றவற்றை கொண்டிருந்தால் அடிவயிற்றில் வலியும் இருந்தால் மருத்துவரை சந்தித்து யுடிஐ தொற்று உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை எடுத்துகொள்வது நல்லது. மற்றபடி சிறுநீர் தொற்று வராமல் இருக்க அதிகமான திரவபானங்களை குடிக்க வேண்டும்.

நமைச்சல்

இது வெகு அரிதானது. கர்ப்பகாலம் முழுமைக்கும் உங்கள் அரிப்பு இருந்தால் அதிலும் கடுமையாக இருந்தால் உங்களுக்கு மகப்பேறியல் கொலஸ்டாஸிஸ் இருக்கலாம். இது கல்லீரலின் ஒரு நிலை ஆகும். இது மஞ்சள் காமாலை நோய்க்குறி அறிகுறி கொண்டிருக்கலாம். இதனால் சிறுநீர் இருண்டும், மலம் மென்மையாகவும் வெளியேறும்.

இலேசான சரும அரிப்பு என்பது கரு வளர்வதால் தோல் நீட்டிக்க செய்வதால் உண்டாவது. ஆனால் தீவிரமான அரிப்பு குறிப்பாக இரவில் மோசமானதாக இருந்தால் அது மிகவும் முக்கியமானது. கவனிக்க வேண்டியது.

யோனி திரவம்

கருவுற்ற 37 வது வாரங்களுக்கு முன்பு பெண் உறுப்பிலிருந்து திரவம் கசிந்தால் பனிக்குட நீர் உடைந்துவிட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். நீர் வெளியேறினால் நோய்த்தொற்று எதிர்ப்பு குறைவாகும். முன்கூட்டிய பிரசவத்துக்கும் தயாராகலாம். இந்நிலையில் கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் சரியான கவனிப்பு அவசியம. பனிக்குட நீர் வெளியேறிய 24 மணி நேரத்தில் பிரசவ வலி வரக்கூடும்.

​குழந்தையின் அசைவு

குழந்தையின் அசைவை உணரும் கர்ப்பிணி பெண் 28 வாரங்களுக்கு பிறகு குழந்தையின் அசைவை உணரவில்லையெனில் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தையின் அசைவு வெகுவாக குறைந்துவிட்டால் ஒரு ஸ்வீட் அல்லது ஒரு டீஸ்பூன் சர்க்கரை அள்ளி வாயில் போடுங்கள், உடனடியாக குழந்தையின் அசைவு இருக்கும். அப்படியும் அசைவை உணரவில்லையெனில் உடனடி சிகிச்சை அவசியம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker