இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்! ஹைப்போ தைராய்டாகக் கூட இருக்கலாம்!
என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும்.
தைராய்டு சுரப்பி என்பது கழுத்துப் பகுதியில் காணப்படும் ஓர் உறுப்பு. இது இதயத் துடிப்பு மற்றும் உணவு செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சரியான அளவில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்காவிட்டால், உடலின் இயற்கை செயல்பாட்டில் பிரச்சினைகள் உருவாகும்.
அதில் ஹைபர் தைராய்டிசம் பெரும்பாலானவர்களுக்கு வரக்கூடியது. இதில் தைராய்டு ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரக்கும்.
ஆனால் ஹைப்போ தைராய்டு என்பது உடலில் தைராய்டு சுரப்பியின் உற்பத்தி வழக்கத்தைவிட குறைந்துவிடுவதாகும். இந்த ஹார்மோன் உற்பத்தியின் அளவு குறையக் குறைய உடலில் அறிகுறிகளும் அதிகரிக்கும்.
அவை என்ன என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொண்ட எளிய முறையில் இதற்கு சிசிக்சைகளை மேற்கொள்ள முடியும்.
அந்தவகையில் தற்போது ஹைப்போ தைராய்ட்டின் அறிகுறிகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
- திடீரென்று உடல் எடையானது அதிகரித்தால், அது ஹைப்பர் தைராய்டு இருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.
- பெண்களுக்கு தைராய்டு அதிகமாக இருந்தால், அது தைராக்ஸின் உற்பத்தியை அதிகரித்து, மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கை உண்டாக்கும். மேலும் மாதவிடாய் சுழற்சியானது சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறாமல், அதற்கு முன்பாகவே சீக்கிரம் சீக்கிரமாக நடைபெறும்.
- தைராய்டு சுரப்பியின் செயல்பாடு முறையாக இல்லாத போது, கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பியானது வீக்கமடைந்து, கழுத்தில் வீக்கத்தை உண்டாக்கும். சில சமயங்களில் கழுத்து வீக்கம், அயோடின் குறைபாட்டினாலும் நடைபெறும்.
- மன அழுத்தம் ஏற்படுவதோடு, மன நிலையும் சரியாக இருக்காது. எந்நேரமும் ஒருவித மன கஷ்டத்துடன், எதையும் சரியாக செய்ய முடியாத நிலையில் இருக்கும்.
- கருத்தரிப்பது மிகவும் கஷ்டம். தைராய்டு அதிகமாக இருந்தால், அது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகமாக இருக்கும்.
- குடலியக்கம் சீராக செயல்படாமல், மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும்.
- மூட்டு வலி மற்றும் கடுமையான உடல் வலி போன்றவையும் தைராய்டு என்பதற்கான அறிகுறிகள் தான். மேலும் எந்த ஒரு செயலை செய்தாலும், அதைச் செய்வது மெதுவாகவும், மந்தமாகவும் இருக்கும்.