சனி பகவானின் பார்வையால் இந்த 5 ராசிக்கு அட்டகாசமாக இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
2021 ஆம் ஆண்டின் சனிப் பெயர்ச்சியைப் பார்க்கும் போது, சனி பகவான் ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு தான் இடம் பெயர்கிறார். ஆகவே சனி பகவான் இந்த வருடம் மற்ற ராசிக்கு மாறாமல் தனது சொந்த ராசியான மகர ராசியில் தான் இருப்பார். இத்தகைய சந்தர்ப்பத்தில், சனி ஒவ்வொரு ராசிக்காரர்களையும் நட்சத்திரத்தின் அடிப்படையில் மட்டுமே பாதிக்கும்.
2021 ஆம் ஆண்டில் சனி பகவான் தனது தந்தையான சூரிய பகவான் ஆளும் நட்சத்திரமான உத்திராடத்தில் இருந்து, ஜனவரி 22 ஆம் தேதி சந்திரன் ஆளும் நட்சத்திரமான திருவோணத்திற்கு நகர்ந்துள்ளார். இதனால் திருவோணம் நட்சத்திரத்தில் ஆண்டின் முதல் பாதியில் இருக்கும் சனி, ஒவ்வொரு ராசிக்காரர்களையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும்.
இப்போது 2021 ஆம் ஆண்டில் சனி வெவ்வேறு நட்சத்திரங்களுக்கு மாறும் போது ஒவ்வொரு ராசிக்காரர்களையும் எப்படி பாதிக்கிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
2021 சனிப்பெயர்ச்சியின் படி, சனி பகவான் மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் இந்த வருடம் முழுவதும் இருக்கப் போகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, பணியிடத்தில் வெற்றி பெறுவார்கள். வருடத்தின் முதல் பாதியில் சூரியன் ஆளும் நட்சத்திரத்தில் சனி இருப்பதால், தந்தையுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. இது தந்தைக்கும் உங்களுக்குமான உறவை பாதிக்கும். அதோடு உங்கள் தந்தையின் ஆரோக்கியமும் குறையக்கூடும். உங்களால் குடும்பத்திற்காக நேரத்தை செலவிட முடியாமல் போகும்.
ஆனால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு பிறகு, சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்திற்கு சனி செல்வதால், தந்தையுடனான உறவு மேம்படும். ஆனால் அவரது உடல்நலத்தைப் பொறுத்தவரை, மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். அவர் அசௌகரியம் மற்றும் கால் வலி, தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படலாம். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். தொழில் ரீதியாக, உங்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். மேலும் சமூகத்தில் உங்கள் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும்.
ரிஷபம்
2021 சனிப்பெயர்ச்சியின் படி, ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் இந்த வருடம் முழுவதும் இருக்கப் போகிறார். இதனால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு முன்பு வரை, உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கலாம். குடும்ப வாழ்க்கை உங்களுக்கு இனிமையாகவும், ஆனந்தமாகவும் இருந்திருக்கலாம். சொத்து அல்லது வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கண்டிருப்பீர்கள். மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருந்திருக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் நற்செய்தியைக் கேட்டிருக்கலாம்.
ஆனால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு பின், சனி பகவான் திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால், ஒவ்வொரு பணியிலும் உங்களின் கடின உழைப்பின் நற்பலனைப் பெறுவீர்கள். உங்களின் நிதி நிலைமை மேம்படும். இருப்பினும் இக்காலம் உங்களின் உடன்பிறப்புகளுக்கு நல்லதல்ல. அவர்கள் வாழ்வில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மிதுனம்
2021 சனி பெயர்ச்சியின் படி, மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் இருப்பார். இதனால் ஆண்டின் தொடக்கத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் சனி இருந்ததால், இனிமையான பலன்களைப் பெற கடினமாக உழைத்திருப்பீர்கள். உங்களின் இளைய உடன்பிறப்புக்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். இக்காலத்தில் பல்வேறு தடைகளையும், சவால்களையும் எதிர்கொண்டிருப்பீர்கள். இத்தகைய சூழ்நிலையில், ஆன்மீகத்தின் மீது உங்கள் விருப்பத்தை அமைத்து, உங்கள் மனதை அமைதிப்படுத்த தியானம் செய்யுங்கள்.
ஆனால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு பின் திருவோணம் நட்சத்திரத்திற்கு சனி சென்ற பின், உங்களை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். உங்களின் மன அழுத்த அளவு தொடர்ந்து அதிகரிக்கும். இதனால் உங்களால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் போகலாம். பண இழப்பு கூற ஏற்படலாம் மற்றும் உங்களின் மாமியார் தரப்பில் இருந்து சில பிரச்சனைகள் எழக்கூடும். தேவையற்ற பயணங்கள் தீங்கு விளைவிக்கும்.
மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக தெரியவில்லை. அத்தகைய சூழ்நிலையில் எதிர்மறை எண்ணங்களை வெல்ல விடாதீர்கள். இல்லாவிட்டால் இழப்புக்கள் ஏற்படக்கூடும்.
கடகம்
2021 சனி பெயர்ச்சியின் படி, ஆண்டின் ஆரம்பத்தில் முடிவு வரை சனி பகவான் 7 ஆவது வீட்டில் இருக்கப் போகிறார். உத்திராடம் நட்சத்தில் இருந்த சனியால், உங்கள் வாழ்க்கை துணை உடல்நலம் தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டிருப்பார். திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் மாமியார் உங்களுக்கு உதவ வருவார்கள். வணிகர்களுக்கு நல்ல நேரமாக இருந்திருக்கும். கூட்டாண்மைடன் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் கூட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பார்கள்.
ஆனால் ஜனவரி 22 அம் தேதிக்கு பின், திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்ற சனியால், மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இருந்த மன அழுத்தம் மற்றும் தகராறுகள் நீங்கி, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே காதல் வளரும். வணிகம் செய்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் மரியாதை மற்றும் அந்தஸ்து உயரும். மேலும், நீண்ட தூர பயணங்களில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் நன்மை பயக்கும் முடிவுகளைப் பெறுவீர்கள்.
சிம்மம்
2021 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சியின் படி, இந்த ஆண்டு முழுவதும் சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் இருக்கப் போகிறார். உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்த சனியால், ஆண்டின் தொடக்கத்தில் உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். உங்களின் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள் மற்றும் உங்களை வீழ்த்த திட்டங்களைத் தீட்டியிருப்பார்கள். பொறுமையாக இருந்தால், நீங்கள் அவர்களை வெற்றி பெறுவீர்கள். மேலும் இக்காலத்தில் கடனுக்காக வங்கியின் ஒப்புதலைப் பெறுவீர்கள். திருமண வாழ்வில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தகராறு அல்லது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம். நிதி நிலைமை கூட பலவீனமாக இருந்திருக்கும்.
ஆனால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு பின், திருவோணம் நட்சத்திரத்திற்கு சனி சென்ற பின், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இதனால் உங்கள் பணச் செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். ஆண்டு முழுவதும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். குறிப்பாக, இருமல், சளி போன்றவற்றால் கஷ்டப்படுவீர்கள். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், உங்களுக்கு சாதகமாக முடிவுகள் வர வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
மொத்தத்தில் இந்த வருடம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக இல்லை. உங்கள் செல்வத்தை குவிப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும். இருப்பினும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
கன்னி
2021 சனிப் பெயர்ச்சியின் படி, கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இருப்பார். ஆண்டின் தொடக்கத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்த சனியால், உங்கள் பிள்ளைகள் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் உருவாகியிருக்கலாம். மாணவர்கள் படிப்பில் சிக்கல்களை சந்தித்திருப்பார்கள். இதனால் மன ரீதியாக சோர்ந்திருப்பார்கள். காதலித்தவரை அல்லது நீங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புக்கள் கிடைத்திருக்கும்.
ஜனவரி 22 ஆம் தேதிக்கு பின், சனி திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால், வருமானத்தில் உயர்வு இருக்கும். பல்வேறு மூலங்களில் இருந்து செல்வம் கிட்டும். திருமணமானவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் தடைகளை சந்திக்க நேரிடும் இத்தகைய சூழ்நிலையில், புத்தியைப் பயன்படுத்தி, கடினமாக உழைத்தால் நன்மைகளைப் பெறலாம்.
மொத்தத்தில், காதலர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும் சனியின் செல்வாக்கினால், மாணவர்கள் முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
துலாம்
2021 சனிப்பெயர்ச்சியின் படி, துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் சனி பகவான் வருடம் முழுவதும் இருக்கப் போகிறார். ஆண்டின் தொடக்கத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்த சனியால், சொத்து மற்றும் நிலத்தில் முதலீடு செய்திருப்பீர்கள். வீட்டை பழுது பார்ப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் பணம் செலவழித்திருப்பீர்கள். இருப்பினும் உங்களின் நிதி வலுவாகவே இருந்திருக்கும். உங்கள் தாயார் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பார். பணியிடத்தில், உங்கள் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே நிறைவேற்றி இருப்பீர்கள்.
ஆனால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு பின் சனி திருவோணம் நட்சத்திரத்திற்கு மாறியுள்ளதால், பணியிடத்தில் முன்பை விட சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க, தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். உங்கள் பெற்றோர் உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள். நீங்கள் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். முந்தைய பணியை முடிக்க கணிசமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
மொத்தத்தில், சனி பெயர்ச்சியின் தாக்கம் இந்த ஆண்டு உங்களுக்கு நன்றாக இருக்கும். பணியிடத்தில் மற்றவர்களை விட உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். இது உங்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும்.
விருச்சிகம்
2021 சனிப்பெயர்ச்சியின் படி, விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் சனி பகவான் ஆண்டு முழுவதும் இருக்கப் போகிறார். மேலும் ஆண்டின் தொடக்கத்தில் சனி உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்ததால், ஒவ்வொரு பணியிலும் வெற்றி பெற்றிருப்பீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெற்றிருப்பீர்கள். உடன்பிறப்புகளுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அதே சமயம் சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். வணிகத்தைப் பொறுத்தவரை, வணிகர்கள் பேரின்பத்தையும், ஆறுதலையும் அனுபவித்திருப்பார்கள்.
ஆனால் ஜனவரி 22 ஆம் தேதி சனி பகவான் திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்றதால், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் முந்தைய பணிகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். உங்கள் எதிரிகளை நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பணி விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். பெற்றோரின் ஆரோக்கியம் பலவீனமாகவே இருக்கும். இதனால் குடும்ப வாழ்க்கை மன அழுத்தமிக்கமாக இருக்கும்.
மொத்தத்தில், இந்த ஆண்டு வழக்கத்தை விட உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் நிதி நெருக்கடியும் தீர்க்கப்படும்.
தனுசு
2021 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சியின் படி, தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் இருக்கப் போகிறார். ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் உத்திராடம் நட்சத்தில் இருந்ததால், அரசுத் துறையில் இருந்து நன்மைகளைப் பெற்றிருப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தனிப்பட்ட வாழ்வில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், இக்காலத்தில் ஓரளவு நிம்மதியாக இருந்திருப்பீர்கள். இளைய உடன்பிறப்புக்களின் ஆதரவு கிடைத்திருக்கும்.
ஆனால் ஜனவரி 22 ஆம் தேதி சனி பகவான் திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்றதால், திடீர் செல்வத்தை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். நீங்கள் தந்தை வழி சொத்தை வாங்குவீர்கள். ஆனால் உங்கள் தந்தையின் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். நீங்கள் எந்த ஒரு திட்டத்தையும் அல்லது பணியையும் மேற்கொள்ளும் முன் நன்கு சிந்தித்து ஒவ்வொரு சூழ்நிலையையும் மதிப்பீடு செய்ய வேண்டும். உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் எழக்கூடும்.
மொத்தத்தில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இது ஒவ்வொரு பணியிலும் வெற்றி பெற உங்களுக்கு உதவும். இருப்பினும் மன அழுத்தம் படிப்படியாக அதிகரிக்கும்.
மகரம்
2021 சனி பெயர்ச்சியின் படி, சொந்த வீடான மகர ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் இருக்கப் போகிறார். அதோடு ஆண்டின் தொடக்கத்தில் சனி உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்ததால், நீங்கள் உங்கள் தந்தையின் ஆதரவைப் பெற்றிருப்பீர்கள். இக்காலத்தில் திடீர் செல்வத்தை அடைவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். திருமண வாழ்க்கையில் சில பதற்றம் இருக்கலாம்.
ஜனவரி 22 ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்திற்கு சனி நுழைந்த பின், உங்கள் திருமண வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இருந்தபோதிலும், உறவில் நெருக்கம் அப்படியே இருக்கும். உணர்ச்சிகள் உங்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும். ஆகவே உங்களை நன்கு கவனித்துக் கொள்வது முக்கியம். இக்காலத்தில் வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி மேற்கொள்ளும் பயணம் பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள்.
மொத்தத்தில், இந்த சனி பெயர்ச்சியால் பணியிடத்தில் வெற்றி பெற கடினமாக உழைக்க வைக்கும். திருமண வாழ்வில் நிலையான பிரச்சனைகள் இருக்கும்.
கும்பம்
2021 சனிப் பெயர்ச்சியின் படி, இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் சனிபகவான் இருக்கப் போகிறார். அதோடு ஆண்டின் தொடக்கத்தில் சனி உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்ததால், திருமண வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். இதனால் செலவுகள் அதிகமாக இருந்திருக்கும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீங்கள் பணத்தை முதலீடு செய்ய நினைத்திருந்தால், நேரம் மிகவும் சாதகமானது.
ஆனால் ஜனவரி 22 ஆம் தேதி சனி பகவான் திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால், உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிதி பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நேரம் சாதகமாகத் தெரிகிறது. உங்கள் எதிரிகளிடமிருந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மொத்தத்தில், இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு ஓரளவு பாதகமானதாக இருக்கும். மேலும் ஆரோக்கியம் மற்றும் எதிரிகளின் அடிப்படையில், இந்த ஆண்டு மிகவும் கவனமாக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது.
மீனம்
2021 சனி பெயர்ச்சியின் படி, இந்த ஆண்டு மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் இருக்கப் போகிறார். அதோடு ஆண்டின் தொடக்கத்தில் சனி உத்திராடம் நட்சத்திரத்தில் இருப்பதால், உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உங்கள் லட்சியங்களை நிறைவேற்ற முன்பை விட அதிகமாக முயற்சிப்பீர்கள்.
ஆனால் ஜனவரி 22 ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்திற்கு சனி செல்வதால், உங்கள் புத்திசாலித்தனத்திலும், ஞானத்திலும் ஒரு உயர்வு இருக்கும். இது உங்களை பலவற்றில் வெற்றிபெறச் செய்யும். காதல் வாழ்க்கையில் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மன ரீதியாக வலுவாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் பலனை பெறுவீர்கள் மற்றும் நிதி ரீதியாக பயனடைவீர்கள். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் முன்பை விட சிறப்பாக இருக்கும்.