உலக நடப்புகள்புதியவை

மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்… உங்க ராசி இதுல இருக்கா?

நவகிரகங்களில் அழகு, காதல், படைப்பாற்றல் ஆகியவற்றை நிர்வகிக்கும் கிரகம் தான் சுக்கிரன்/வெள்ளி. இந்த சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து நட்பு ராசியான மகர ராசிக்கு இடம் பெயர்கிறது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 03:18 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையவுள்ளது.

பொதுவாக கிரகங்களின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மகர ராசிக்குள் நுழையவுள்ள சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் பத்தாவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சி கலவையான மற்றும் சுவாரஸ்யமான முடிவுகளை வழங்கப் போகிறது. இக்காலத்தில் அலுவலகத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையில் நீங்கள் சில சமயங்களில் அதிருப்தியை உணரக்கூடும். உங்கள் உயர் அதிகாரிகளுடன் சூடான வாதங்களை மேற்கொள்ள நேரிடும். இது உங்கள் எதிரிகளை அதிகரிக்கும். ஆகவே பொறுமையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நம்பிக்கை பிரச்சனைகள், உறவுகளில் பாதுகாப்பின்மை அல்லது பிளவுகளை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க உங்கள் வாழ்க்கை துணையுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். இந்த ராசிக்கார மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் இருந்து திசைத்திருப்படலாம். எனவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம். இல்லாவிட்டால் உங்கள் இமேஜ் கெட்டுப்போகும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். சுக்கிரனின் இந்த மாற்றம் உங்களுக்கு ஒரு நல்ல பயணமாக இருக்கும். சுக்கிரனின் இந்த இடமாற்றம் நேர்மறை மற்றும் மன அமைதியைக் கொண்டு வர வாய்ப்புள்ளது. இக்காலத்தில் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். நீண்ட காலமாக உங்களை தொந்தரவு செய்து வந்த நோயை நீங்கள் வெல்ல வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, உங்கள் பணிகள் மற்றும் முயற்சிகள் அனைத்தையும் முடிக்க அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவளிக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் முழு ஒத்துழைப்பைப் பெற வாய்ப்புள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எந்தவொரு வழக்கு அல்லது சட்ட விவகாரங்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். உங்கள் உடன்பிறப்புகள் உங்களுக்கு முழு ஆதரவையும் பாசத்தையும் வழங்க வாய்ப்புள்ளது. முக்கியமாக உங்கள் வாழ்க்கை துணையுடனான பிணைப்பு வலுவாக இருக்கும். இந்த ராசியில் பிறந்த மாணவர்கள், இக்காலத்தில் விவாதங்கள், வினாடி வினா, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இந்த சுக்கிர மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளைத் தரும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கை உள்ள கஷ்டங்கள் குறையும். அதிகரித்த பண ஆதாயங்களையும் மகிழ்ச்சியையும் வழங்கும் சில வாய்ப்புகளையும் நீங்கள் காணலாம். சிலருக்கு மூதாதையர் சொத்து வாங்குவது அல்லது விற்பதன் மூலம் லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக, வேலையில் சில சிறந்த மாற்றங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. அவை உங்கள் தொழிலில் உங்கள் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் லாபகரமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கைத் துணையின் வருமானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் வளர்ச்சியை நீங்கள் காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக நேரத்தையும் முயற்சிகளையும் ஊக்குவிக்க வாய்ப்புள்ளது, இது அவர்களின் கல்வி செயல்திறனை மேம்படுத்த உதவும்.

கடகம்

கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இந்த பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளை கொண்டு வரப்போகிறது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் தாயின் ஆரோக்கியம் பலவீனமான நிலையில் இருக்கும். இக்காலத்தில் உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு வலுவிழக்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, இந்த காலத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறுவீர்கள். சிலர் அரசாங்கத்திடமிருந்து சலுகைகளையும் வெகுமதிகளையும் பெறலாம். நிதி ரீதியாக, விஷயங்கள் நன்றாகவே இருக்கின்றன. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு, தோல், சிறுநீரக தொற்று போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதால், தண்ணீர் அதிகம் குடிக்க முயற்சி செய்யுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். தொழில் ரீதியாக, எந்த ஒரு மோதல்களிலும், வாதங்களிலும் ஈடுபடாதீர்கள். இல்லாவிட்டால் பணியிடத்தில் தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வீர்கள். இக்காலத்தில் உங்கள் பணிகள் மற்றும் முயற்சிகளில் முழு கவனத்தை செலுத்தி ஈடுபடுங்கள். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது மென்மையாக பேசுங்கள். இந்த காலகட்டத்தில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை மன அழுத்தத்தையும் கவலைகளையும் கொண்டு வரக்கூடும். நிதி ரீதியாக, உங்கள் செலவுகளில் உயர்வைக் காண்பீர்கள். எனவே இக்காலத்தில் நிதி மற்றும் பட்ஜெட்டில் கடுமையான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் வாதங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நன்கு பேச முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். எனவே யோகா, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு போன்றவற்றை வழக்கத்தில் வைத்திருங்கள். ஜங்க் உணவுகளைத் தவிர்த்திடுங்கள். இதனால் ஆரோக்கியத்தின் அடிப்படையில் சாதகமான முடிவுகளை பெறலாம்.

கன்னி

கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரக்கூடியதாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் வருமானத்தையும் நிலையையும் அதிகரிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். இது முதலீடு செய்வதற்கான சிறந்த நேரமாகும். ஏனெனில் இந்த நேரத்தில் எடுக்கப்படும் எந்தவொரு நிதி முடிவும் பிற்காலத்தில் கணிசமான வருமானத்தை தரும். தொழில் ரீதியாக, உங்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் உச்சத்தில் இருக்கும். இதனால் தொழில் அடிப்படையில் நல்ல முடிவுகள் கிடைக்கும். அதோடு உங்கள் வாழ்க்கையை சரியான திசையில் முன்னேற்றுவதற்கான பல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமானவராக இருந்தால், உங்கள் குழந்தைகளுடனான உங்கள் உறவை வலுப்படுத்த முயற்சி செய்வீர்கள், மேலும், உங்கள் மனைவியுடனான உங்கள் உறவில் நல்லிணக்கமும் பேரின்பமும் இருக்கும். வெளிநாட்டில் உயர்கல்வி தேடும் மாணவர்கள் இக்காலத்தில் அவர்களின் கனவுகள் நிஜமாக மாறுவதைக் காணலாம்.

துலாம்

துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இக்காலத்தில் உங்கள் எல்லா ஆசைகளையும் பூர்த்தியாகும். மேலும் உங்கள் பணச் செல்வமும் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு பலப்படும். தாயிடமிருந்து ஆதாயங்கள் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் வருமானம் மற்றும் செழிப்பு அதிகரிக்கும். வீடு அல்லது காரை வாங்க கடன்களைத் தேடுவோர் உங்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள், அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. உங்கள் கடின உழைப்பு மற்றும் திறன்கள் பாராட்டப்படும். வணிகர்களும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைக் காண வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். மேலும் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் உடன்பிறப்புகளுடன் தங்கள் நேரத்தை சிறப்பாக அனுபவிப்பார்கள் மற்றும் அவர்களின் சமூக வாழ்க்கையும் அதிகரித்து காணப்படும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இக்காலத்தில் நண்பர்களிடமிருந்து நன்மைகளையும், ஆதரவையும் பெற வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு வலுப்பெறும். திருமணமானவர்கள் தங்கள் குழந்தைகளின் வெற்றியால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வணிகத்தைப் பொறுத்தவரை, உங்கள் தகவல் தொடர்பு திறன் வணிகத்தில் புதிய நிலைகளையும் வளர்ச்சியையும் அடைய உதவும். சிலர் அரசாங்கத்திடமிருந்து நல்ல உதவிகளைப் பெறக்கூடும். உங்களில் விளையாட்டு அல்லது திறன் தொடர்பான சில தொழில்களில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகளைப் பெற வாய்ப்புள்ளது. அதே சமயம் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள்.

தனுசு

தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், இக்காலம் உங்களுக்கு லாபத்தை அளிக்கும். வீட்டுச் சூழல் நல்லிணக்கமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் மதிப்புமிக்க பொருட்கள், கற்கள் மற்றும் நகைகள் வாங்குவதற்கு உங்கள் பணத்தை நீங்கள் செலவிட வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக, உங்கள் நிதி நிலையை அதிகரிக்கும் ஒரு நல்ல காலம் இது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்படுவதைக் காணலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களின் உணவுப் பழக்கம் மாற வாய்ப்புள்ளது. இந்த சுக்கிர பெயர்ச்சியால், இனிப்புகளின் மீதான ஆவல் அதிகரிக்கும். இதனால் ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்களை சந்திக்கக்கூடும். எனவே உங்களின் நாவை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக, உங்கள் சிறந்த நிர்வாக திறன்கள் உங்கள் வாழ்க்கையில் உயர் பதவிகளை அடைய உதவும்.

மகரம்

மகர ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இந்த பெயர்ச்சியால், கூட்டாண்மை தொழில் புரிபவர்கள் நல்ல பயனடைய வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு நல்லுறவைப் பெற வாய்ப்புள்ளது. உங்களின் அனைத்து முயற்சிகளையும் அவர்கள் ஆதரிக்க வாய்ப்புள்ளது. இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள், உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. தொழிலைப் பொறுத்தவரை, முன்பு கவனம் செலுத்த முடியாத சில பணிகள் இக்காலத்தில் எளிதாக நிறைவேற்றப்படும். உங்கள் தலைமைத்துவ குணங்களும், கடினமான சூழ்நிலைகளை எளிதில் எதிர்கொள்ளும் திறனும் மேம்படும். இது உங்கள் வாழ்க்கையில் சிறந்த சாதனைகளை கொண்டு வரும். ஒட்டுமொத்தமாக, இந்த சுக்கிர பெயர்ச்சி சாதகமானது மற்றும் சிறந்த முடிவுகளைக் கொண்டு வர வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசியின் பன்னிரண்டாவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வசதிகளையும், ஆடம்பரங்களையும் அதிகரிக்க நீங்கள் செலவிட வாய்ப்புள்ளது. உங்களின் ஆசைகளை நிறைவேற்றுவதில் ஈடுபடுவீர்கள். இருப்பினும், கவனமாக இருங்கள். தொழில் ரீதியாக, இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதுவும் வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அல்லது இறக்குமதி-ஏற்றுமதியைக் கையாளும் வணிகத்தில் ஈடுபடுவோருக்கு சாதகமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமாகாதவர்களுக்கு ஒரு புதிய உறவைத் தொடங்க வாய்ப்புக்கள் வரும். திருமணமானவர்கள், தங்கள் உறவில் காதல் மற்றும் பேரின்பம் அதிகரிப்பதைக் காண்பீர்கள். ஒட்டுமொத்தமாக, இந்த பெயர்ச்சி உங்களுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை அளித்தாலும், செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவுப் பழக்கங்களை சரியாக கடைப்பிடிப்பது, யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகளை ஊக்குவிப்பது மிகவும் அவசியம்.

மீனம்

மீன ராசியின் பதினொன்றாவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், பணம் மற்றும் நிதி தொடர்பாக சில போராட்டங்களை எதிர்கொண்ட இந்த ராசிக்காரர்கள், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழில் ரீதியாக, உங்கள் பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை ஆகியவை பாராட்டப்படும். இது உயர் அதிகாரிகளின் கவனத்தைப் பெறவும் உதவும். இதன் விளைவாக உங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் அந்தஸ்தின் உயர்வு சமூகத்தில் உங்கள் பிம்பத்தை மேம்படுத்த உதவும். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிட்டு, அவர்களிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு இந்த காலம் ஒரு இனிமையான நேரமாக இருக்கும். இந்த சுக்கிர பெயர்ச்சியின் போது உங்கள் உடன்பிறப்புகள் அந்தந்த துறைகளில் செழிப்பையும், வெற்றிகளையும் அடைவார்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் உங்கள் சமூக வட்டத்தை அதிகரிக்க உதவும். அதோடு வாழ்வில் முன்னேற புதிய வாய்ப்புக்களையும் கொண்டு வரும். முக்கியமாக இந்த ராசிக்கார மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட உதவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker