புதியவைவீடு-தோட்டம்

துணியில் இருக்கும் எண்ணெய் கறைகளை உடனே நீக்கணுமா? இதை செய்யுங்க!

துணிகளில் எண்ணெய் கறைகள் நீக்குவது கடினமானது. அதை நீக்காமல் விட்டால் அது பளிச்சென்று தெளிவாக தெரியக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துணிகளில் எண்ணெய் கறைகளை பெற்றுவிடுவார்கள். இதை வெளியேற்றாவிட்டால் அது நாளடைவில் துணிகளில் படிந்து கனமான கறைகளை உண்டாக்கிவிடும். மேலும் இது கருமையாக சில நேரங்களில் நிரந்தரமாக துணியின் அழகை கெடுத்துவிடும்.

குறிப்பாக எண்ணெயில் வறுக்கும் போதும், எண்ணெய் தெரிக்கும் போதும் அதை தவிர்க்க முடியாது என்றாலும் அதை முழுவதுமாக நீக்குவது எப்படி என்பதை இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் அருமையான குறிப்புகள்

கறைபடிந்த உடன் இதை செய்யுங்கள்

ஆடையில் எண்ணெய் படிந்தால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து கறைபட்ட இடத்தை சுத்தமாக துடைத்துவிடுங்கள். எண்ணெய்கறை இருபுறமும் அழுந்த படியாமல் கறையை மெதுவாக அழுத்தவும்.

துணிகளில் இருந்து எண்ணெய் கறையை போக்க அதை துவைக்கும் முன்பே கறையின் ஒரு அடுக்கை வெளியேற்றுவது அவசியம். இல்லயெனில் அவை கறையின் மேல் நன்றாக படர்ந்து இன்னும் வேகமாக துணிகளில் படிந்துவிடக்கூடும்.

துணிகளை சுத்தம் செய்யும் முறை

எந்த துணியில் கறைபட்டாலும் முதலில் துணிகளை துவைக்கும் முறையை கவனிக்கவு. துணி லேபிளில் அதன் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் முறை கொடுக்கப்பட்டிருக்கும்.

துணியை அதிக வெப்பநிலையில் வைத்து துவைக்கமுடியுமா? இதை மிஷினில் துவைக்கலாமா, அதிக நேரம் நீரில் ஊறவிடலாமா? பிரஷ் கொண்டு சுத்தம் செய்யலாமா போன்ற அனைத்தையும் கவனித்து கண்டறிந்து சுத்தம் செய்வது நல்லது.

பேக்கிங் சோடா

எண்ணெய் கறைகளை அகற்ற பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். துணிகளை மிஷினில் பயன்படுத்துவதற்கு முன்பு உபயோகிக்க வெண்டும். என்ணெய் கறையை அகற்ற கறை மீது பேக்கிங் சோடாவை தடவி 24 மணி நேரம் வைத்து விடவும். ஒரு நாள் முழுக்க கறை மீது வினிகரை தெளித்து தெளித்து விடவும். பிறகு மென்மையான சோப்பு கொண்டு துடைத்து எடுக்கவும்.

துணியின் தன்மைக்கேற்ப நீங்கள் பிரஷ் அல்லது பல் தேய்க்கும் மென்மையான பிரஷ் கொண்டு சற்று அழுத்தம் கொடுத்து துடைக்க வேண்டும். கறை அழுத்தமாக இருந்தால் மீண்டும் மீண்டும் துடைத்து பிரஷ் கொண்டு தேய்த்தால் கறை விலகும்.

சாக் பீஸ்

கறைபடிந்த துணிகளில் முதலில் கறைகளை பேப்பர் கொண்டு துடைத்துவிட்டு குழந்தைகள் பயன்படுத்தும் சாக்பீஸ் கொண்டு தேய்த்து எடுங்கள். கறைகள் மீது சாக்பீஸை கொண்டு சில விநாடிகள் தேய்த்து வந்தால் கறைகள் மறையும்.

கறை மறையும் வரை அவ்வபோது தேய்த்துவந்தால் சாக்பீஸ் துகள்கள் எண்ணெய் உறிஞ்சி துணியை பாதுகாக்கும். அதோடு சாக்பீஸ் கறைபடியவும் செய்யாது. வெண்மை நிற சாக்பீஸை பயன்படுத்துங்கள். அவை இல்லாத நிலையில் சுண்ணாம்பு இருந்தால் அதை பயன்படுத்தலாம்.

பேபி பவுடர்

கறைபடிந்த இடத்தில் முதலில் டிஷ்யூ பேப்பர் துடைத்து கையோடு பேபி பவுடர் எடுத்து கறைகள் மீது தேய்க்கவும். சில நிமிடங்களில் பவுடர் அதன் மீது ஒட்டிகொள்ளும் பிறகு கைகளால் உருட்டி எடுத்தால் கறை அழுக்குகளோடு பவுடர் வெளியே வரும். இப்போது கறையே இல்லாத அளவுக்கு துணிகளில் பளபளப்பு கூடும்.

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட் ஆடை கறைகளை நீக்க உதவும். துணிகளில் கறைபடிந்த இடத்தில் இலேசாக பேஸ்ட் தடவி விடவும். இலேசாக விரல்களால் தடவி கொள்ளவும். பிறகு வெந்நீர் கொதிக்க வைத்து ( துணிகளின் மீது வெப்ப நீர் பயன்படுத்தலாம் என்றால்) துணியில் பேஸ்ட் தடவிய கறைபடிந்த இடத்தின் மீது ஊற்றவும். உயரமாக கறை மீது படியும் படி ஊற்றவும். சிறிது சிறிதாக ஊற்றி வந்தால் கறை பேஸ்ட் உடன் சேர்ந்து வெளிவரும். பிறகு எளிதாக துவைத்து வெளியேற்றலாம்.

வினிகர்

வினிகருடன் சம அளவு தண்ணீர் எடுத்து அதை கறைபடிந்த இடங்களில் தடவவும் அல்லது அதை மட்டும் வினிகர் நீரில் ஊறவிடவும். பிறகு கரைசல் ஊறியதும் பார்த்தால் துணியில் கறைகள் நீங்கி இருக்கும். மேற்கண்டவற்றை சரியாக செய்தாலே துணியில் படிந்த கறைகள் நீங்கிவிடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker