சமையல் குறிப்புகள்புதியவை

பேபி பொட்டேடோ மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்:

* பேபி பொட்டேடோ – 14

* சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்

* மைதா – 2 டேபிள் ஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

மஞ்சூரியனுக்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேட் – 1 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)

* குடைமிளகாய் – 1/2 கப் (நறுக்கியது)

* சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்

* சில்லி சாஸ் – 1/2 டீஸ்பூன்

* தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

* வினிகர் – 1/2 டீஸ்பூன்

* ஸ்பிரிங் ஆனியன் வெள்ளைப் பகுதி – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

* ஸ்பிரிங் ஆனியன் பச்சை பகுதி – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* சோள மாவு – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பேபி பொட்டேடோவைப் போட்டு நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து, உருளைக்கிழங்கின் தோலை உரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு சிறிய பௌலில் சோள மாவு மற்றும் நீர் ஊற்றி, சற்று நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.

* மற்றொரு பௌலில் சோள மாவு, மைதா, மிளகுத் தூள், இஞ்சி பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நீரை ஊற்றி, மிகவும் கெட்டியாக இல்லாமல் ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.

* பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்குகளை இரண்டாக வெட்டி, மாவில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு மொறுமொறுப்பாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட், ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப் பகுதியை போட்டு நன்கு வதக்கவும். பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். பின் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், உப்பு, மிளகுத் தூள் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

* பின்பு அதில் நீரில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் வினிகரை சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

* பிறகு பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் அதன் மேல் ஸ்பிரிங் ஆனியனின் பச்சைப் பகுதியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பேபி பொட்டேடோ மஞ்சூரியன் தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker